For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது கழிவறை பதாகையில் தாறுமாறு கிரியேட்டிவிட்டி - டாப் 10 படங்கள்!

பொது கழிவறை பதாகையில் தாறுமாறு கிரியேட்டிவிட்டி - டாப் 10 படங்கள்!

|

பெரும்பாலும் பொது கழிவறைக்கு சென்றால், ஆண், பெண் வேறுபாட்டை காண்பிக்க, மென், வுமன்.. என எழுதியிருக்கும். அல்லது ஆண் படம், பெண் படம் மாட்டி வைத்திருப்பார்கள்.

ஆனால், ஒரு சில இடங்களில் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, கழிவறை செல்லும் இடத்தில் கூட அடடே, என சிந்திக்க வைக்கும் வகையில் கழிவறை பதாகை வடிவமைப்புகள் இடம்பெற்றிருக்கும்.

உண்மையில் பலருக்கு நல்ல யோசனைகள், கற்பனை உண்டாவது கழிவறையில் தான். எனவே தான் அந்த கழிவறை பதாகையில் அசால்ட்டு காட்டு தங்கள் கற்பனை திறனை வெகுவாக வெளிகாட்டியுள்ளனர் சில டிசைனர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆங்கில புலமை!

ஆங்கில புலமை!

விளம்பரங்களுக்கு எல்லாம் படித்ததும், கேட்டதும் பச்சக் என பயன்பாட்டாளர் மனதில் ஒட்டிக் கொள்ளும்படி வாசகங்கள் எழுத கிரியேட்டிவ் ரைட்டர் என ஒருவர் இருப்பார். அப்படி யாரோ கிரியேட்டிவ் ரைட்டர் தான் இந்த பதாகையை டிசைன் செய்திருக்க வேண்டும்.

சூப்பர் ஹீரோ ஃபேன்!

சூப்பர் ஹீரோ ஃபேன்!

இந்த கழிவறை பதாகை வடிவமைத்தவர் ஏதோ சூப்பர் ஃபேன் ரசிகராக இருக்க வேண்டும். மேலும், இந்த கிரியேட்டிவிட்டியை பாராட்டியே ஆகவேண்டும். அதிமேதாவிகள் யாரேனும் இருந்தால், இது போன்ற ஒரு பதாகையை தான் விரும்புவார்கள்.

சிரிச்சே செத்துட்டேன் மொமன்ட்!

சிரிச்சே செத்துட்டேன் மொமன்ட்!

சில சமயங்களில் சில காமெடி வீடியோ, மீம்ஸ் அல்லது ஸ்டேடஸ் காணும் போது, சிரிச்சே செத்துட்டேன் என கமென்ட் போடுவார்கள். அப்படி தான் இந்த கழிவறை பதாகை டிஸைனும். சிரிச்சே செத்திடலாம் போல. என்ன ஒரு கற்பனை.

எல்லாருக்கும் பொது...

எல்லாருக்கும் பொது...

ஒருவேளை பாலின ஒற்றுமையை இப்படி கூட வெளிப்படுத்தலாம் என ஐடியா கொண்டிருந்தார் போல அந்த பதாகை டிஸைனர். என்னவோ... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கன்னு தான் தெரியல...

ஸ்க்ரூ..

ஸ்க்ரூ..

ஆங்கிலத்தில் மிக கோபமாக இருந்தால், ஏதேனும் பெரிய தவறு செய்திருதால்... ஐ வில் ஸ்க்ரூ யூ, ஹீ / ஷீ வில் ஸ்க்ரூ மீ என்பார்கள். அப்படி அன்டாஹ் ஸ்க்ரூவை அதிகம் பேசியோ, கேட்டோ அனுபவித்த நபரால் தான் இப்படி சிந்திக்க முடியும்.

நெசம்தாம்பு!

நெசம்தாம்பு!

இதென்னமோ நிஜம் தான். பொண்ணுக ரெஸ்ட்ரூம்ல தான் செல்ஃபி எடுக்குறாங்க, கிசுகிசு பேசுறாங்க.. யார எப்படி போட்டு வாங்கலாம்ன்னு யோசிக்கிறாங்க. கலக்கல் கழிவறை பதாகை டிஸைன் இது.

ஆண்கள் செய்ய மாட்டார்களா..

ஆண்கள் செய்ய மாட்டார்களா..

வெஸ்டர்ன் கழிவறை மூடியை ஆண்கள் மூடமாடார்கள் என கூற வருகிறாரா? இந்த கழிவறை பதாகை வடிவமைப்பாளர். உண்மை என்னவெனில், அவர் நம்மை இதை பார்த்ததும் சிரிக்க வைத்துள்ளார். அதற்கு மேல் எதையும் சிந்திக்க வேண்டாம்.

பெண்ணியவாதி!

பெண்ணியவாதி!

இந்த கழிவறை பதாகையை வடிவமைத நபர் ஒரு பெண்ணிவாதியாக இருக்கலாம். இது போன்ற காமெடிகளை... இல்லையில்லை.. இதே காமெடியை, இன்றும் காமெடி என நினைத்து பெண்கள் பலர் அடிக்கடி சொல்லி சிரித்துக் கொள்வார்கள். சரி இதுவும் கிரியேட்டிவிட்டி தானே... எந்த பக்கமாக போகணும்ன்னு சொல்லியிருக்கார்.

டிரான்ஸ்பார்மர்!

டிரான்ஸ்பார்மர்!

இந்த கழிவறை பதாகை வடிவமைத்த நபருக்கு நிச்சயம் பாராட்டு கூறியே ஆகவேண்டும். முதல் விஷயம் திருநங்கைகளுக்கும் தனி கழிவறை அமைத்தது. மற்றொன்று, இதை விட கிரியேட்டிவாக ஒரு கழிவறை பதாகை திருநங்கைகளுக்கு வடிவமைக்க முடியாது.

ஃபன்னி!

ஃபன்னி!

அடடே! ஆச்சரியக்குறி!!! என கண்டதும் சிரித்து பாராட்ட வைக்கும் கழிவறை பதாகை வடிவமைப்பு. கதவிலும் அதை காட்டியது சிறப்பு. வீட்டில் கிரியேட்டிவிட்டி அள்ளித்தெளிக்க நினைக்கும் நபர்கள் இதை முயற்சி செய்யலாம்.

பிட்சா!

பிட்சா!

இந்த டிசைனுக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுப்பது கொஞ்சம் கடினம். அந்த இடத்திற்கு செல்லும் போது உணவை பற்றி நினைப்பதோ, உணவருந்தும் போது அந்த இடத்தை பற்றி நினைப்போது கூட குமட்டி கொண்டு வரவைக்கும். கொஞ்சம் அசௌகரியமானது தான்.

நச்!

நச்!

டிசைன் செய்பவர்கள் எப்போதும், அதில் அதிகமாக வார்த்தைகள் இருக்க கூடாது என நினைப்பார்கள். ஒரு டிசைனில் வாசகம் பேசிவிட்டால், அந்த டிசைனுக்கோ, டிசைனருக்கோ என்ன மதிப்பு என கருதுவார்கள். வார்த்தைகளே இல்லாமல், டிசைனில் பேசியுள்ளார். நைஸ் டிசைன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny and Creative Toilet Sign Boards!

Funny and Creative Toilet Sign Boards!
Desktop Bottom Promotion