இந்த 4'ல நீங்க எந்த வகை? உங்கள பத்தின இரகசியங்கள் தெரிஞ்சக்க இதப்படிங்க!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரது உள்ளுணர்வை சார்ந்து தான் அந்த நபரின் உடல் அசைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகையால், நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நபரின் செய்கைகள், உடல் மொழி வைத்தே அவரை பற்றி அறிந்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது.

Fist Shapes That Reveal Your Personality’s Secrets!

அவற்றுள் ஒன்று தான், இந்த கட்டை விரல் கைமுட்டி மடக்கும் விதம் கொண்டு ஒருநபரின் குணாதிசயங்கள், செய்கை அறியும் முறை. இதில் நான்கு வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நீங்க எந்த வகைன்னு தெரிஞ்சுகணுமா... தொடர்ந்து படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேலே!

மேலே!

எனர்ஜிடிக் பர்சன்ஸ் என சிலரை கூறுவார்கள் கேள்விப்பட்டதுண்டா? அது நீங்கள் தான். புதிதாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம் இருந்துக் கொண்டே இருக்கும். உங்கள் திட்டமிடல் என்றும் வீண் போகாது.

ப்ளஸ், மைனஸ்!

ப்ளஸ், மைனஸ்!

பொதுநல விரும்பி, அனைவருக்கும் கனிவான நபராக இருப்பீர்கள். சொல்வதை காட்டிலும், செயலில் காட்ட விரும்பும் நபர்.நம்பகத்தன்மையும் கனிவும் அனைவரும் உங்களை பாராட்ட, மதிக்க காரணியாக இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் உங்களால் இம்ப்ரஸ் ஆவார்கள். நீங்கள் ஒரு மதிப்பிற்குரிய தலைவராக இருக்க வாய்ப்புகள் உண்டு.

உள்ளே!

உள்ளே!

நீங்கள் ஸ்மார்ட் அதே சமயம் நிறைய அரட்டை அடிப்பீர்கள். நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர் அல்ல. உங்களை விட்டு சற்று சுற்றி இருக்கும் நபர்கள் நீங்கள் அதிகம் பேசாத நபர் என்று எண்ணுவர்.

ப்ளஸ், மைனஸ்!

ப்ளஸ், மைனஸ்!

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதன் வேர் எங்கிருக்கிறது என்பதை அறியும் திறன் உங்களுக்கு கிடைத்த பரிசு. நீங்க செம்ம ஷார்ப். உங்கள் பார்வை, கண்ணோட்டம் சில சமயங்களில் விலைமதிப்பற்றதாக திகழும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும்.

துல்லியமாக, தெளிவுடன் பேசுவது உங்கள் சிறப்பு. நீங்களாகவே ஆவலாக பேசி ஆர்வம் காட்டுவீர்கள். அதனாலேயே உங்களை பற்றி நீங்கள் பேசாமல் மற்றவர் அறிய கொஞ்சம் கடினமாக இருக்கும்.

வெளிப்புறம்!

வெளிப்புறம்!

அனைவருக்கும் அவரவருக்கான சொந்த பாதை இருக்கிறது என்பதே உங்கள் கருத்து. உங்கள் பாதை எப்போதும் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். உங்கள் பிராக்டிக்கல் சிந்தனை, வேகப்படுத்தும் இயல்பு, உங்களின் மதிப்பை உயர்த்தும்.

ப்ளஸ், மைனஸ்!

ப்ளஸ், மைனஸ்!

தோல்வியின் மீதான உங்கள் அச்சம் சில சமயங்களில் தைரியமான முடிவுகள் எடுப்பதில் இருந்து தடுக்கும். இந்த ஒரு விஷயம் மட்டுமே உங்களது தைரியத்தை கொஞ்சம் ஆட்டிப் பார்க்கும்.

உங்கள் நண்பர்கள் உங்கள் சின்சியாரிட்டி, நம்பகத்தன்மை, புத்திக் கூர்மையை மதிப்பார்கள். உங்களுடன் இருப்பதை மகிழ்வாக எண்ணுவார்கள்.

மேல்நோக்கி!

மேல்நோக்கி!

நீங்கள் புத்திசாலி, பன்முக திறமை கொண்டவர். நீங்கள் ஒரு ஐடியா மணி. உங்கள் தலையில் சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கும். புதுபுது சிந்தனைகள் பிறந்துக் கொண்டே இருக்கும்.

ப்ளஸ், மைனஸ்!

ப்ளஸ், மைனஸ்!

இந்த உலகை இன்னும் சிறந்த முறையில் காணும் உங்கள் விஷன் அழகானது. உங்களிடம் இருக்கும் ஒரே குறை ஒரே நேரத்தில் பல இடங்களில் கால் வைக்க முயல்வது. இதற்கு காரணம் எல்லாவற்றையும் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு.

அனைவரும் நீங்கள் ஒரு என்சைக்ளோபீடியா என எண்ணுவார்கள். உங்களிடம் அறிவுரை கேட்டு வருவார்கள். ஆனால், உட்புறமாக பார்த்தல் நீங்கள் ஒரு அமைதியான ஆள், எதையும் யோசனை செய்து கவனமாக தான் செய்வீர்கள்.

நீங்கள் அறிவுரை செய்தாலும் மிகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு யோசித்து தான் கூறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fist Shapes That Reveal Your Personality’s Secrets!

Fist Shapes That Reveal Your Personality’s Secrets,
Subscribe Newsletter