For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூனை நடத்திய நெகிழ்ச்சி நாடகம்! வீடியோ இணைப்பு

தன் முதலாளி இறந்தும் புதைக்கப்பட்ட இடத்தை சுற்றி வரும் செல்லப் பூணை

|

செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்முடைய ஸ்ட்ரஸ் பஸ்ட்டராக பல்வேறு விஷயங்களை தேடுவதில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. நாயைப் போல கொஞ்சிக் குலாவுவதும், பூனையைப் போல சுதந்திரமாய் உரிமை எடுத்துக் கொள்வதும் நம்மை திசை திருப்பும் விஷயங்களாக இருக்கிறது. வாட்ஸப்பில், பேஸ்புக்கில் எதாவது செல்லப்பிராணிகள் குறித்த வீடியோ வந்தால் உடனேயே பார்க்கத் தோன்றுவதும் அப்படித்தான்.

மனிதர்கள் யாவரும் எதிர்ப்பார்ப்பில்லாத யதார்த்தமான அன்பைத் தான் விரும்புகிறோம். அதற்காக ஏங்கும் சமயத்தில் நம்மிடம் அன்பு செலுத்தும் எதனிடமும் நாம் மனதை பறிகொடுப்பது நடக்கும். இப்படி மனதை பறிகொடுத்த ஒருவருக்காக பூனை நிகழ்த்திய நாடகம் தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலேசியா பூனை :

மலேசியா பூனை :

மலேசியாவில் இறந்த ஒருவரைப் புதைத்த இடத்தை விட்டு நகராமல் பூனை ஒன்று சுற்றிச் சுற்றி வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மலேசியாவில் இறந்துபோன இஸ்மாயில் மேட் என்பவரை அவரின் உறவினர்கள் கொண்டுபோய் அடக்கம் செய்துள்ளனர்.

அவர்கள் இறுதிச் சடங்கு செய்த நேரத்தில் வெள்ளை நிறப் பூனை ஒன்று அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்துள்ளது.

நெகிழ்ச்சிக்கதை :

நெகிழ்ச்சிக்கதை :

அவரைப் புதைத்த இடத்தை, அந்தப் பூனை தோண்ட முயற்சி செய்கிறது. அதைப் பெண் ஒருவர் தடுக்கிறார். அதையும் மீறி அந்தப் பூனை அந்த இடத்தைத் தோண்ட முயற்சி செய்கிறது. அதை தூக்க முயற்சித்தால் அதனை தவிர்க்கும் பொருட்டு தூங்குகிறது.

சுற்றித் திரியும் பூனை :

சுற்றித் திரியும் பூனை :

இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கூறும்போது, இஸ்மாயில் பூனைகளின் மீது மிகுந்த அன்பாக இருப்பார். ஆனால், இது அவர் வளர்த்த பூனை அல்ல. அவர் இந்தப் பகுதியிலுள்ள மசூதிக்கு அடிக்கடி வருவார்.

இது இங்கு சுற்றித் திரியும் பூனையாக இருக்கலாம்' என்கிறார்கள்.

ஆச்சரியப்படுத்தும் செயல்பாடுகள் :

உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து சென்ற பின்பும் அந்தப் பூனை இஸ்மாயில் புதைக்கப்பட்ட இடத்தையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது. இது குறித்து பூனை ஆய்வாளர்கள் கூறுகையில்,

'பூனையின் இந்தச் செய்கை மிகவும் வித்தியாசமாகவுள்ளது. பொதுவாக நாய்கள் இதேபோன்று நடக்கும். எனக்கு இந்தப் பூனையின் செயல்பாடு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது' என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இஸ்மாயில் புதைக்கப்பட்டபோது பூனையின் செயல்பாட்டை வீடியோ எடுத்தவர் அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பதிவிட்ட ஒரு நாளில் அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Emotional behavior of a cat after his master death.

Emotional behavior of a cat after his master death.
Story first published: Wednesday, September 20, 2017, 11:16 [IST]
Desktop Bottom Promotion