பல வருடங்களாக வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்ட நாய்! அடுத்து நடந்தது என்ன?

Posted By:
Subscribe to Boldsky

விலங்கு பிரியர்கள் பலரும் தாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய் மற்றும் பூனையை தங்கள் படுக்கையறையில் அனுமதியளிப்பது வரை தான் பாசமெல்லாம் இருக்கும். இங்கே ஒருவர் தன்னுடைய செல்லப் பிராணிக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா?

மனிதர்களைப் போலவே நாயும் மனரீதியாக மாற்றங்களை சந்திக்கிறது, மன அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்பதற்கு இந்த சம்பவம் மட்டுமே போதும். உண்மையில் நடந்த இந்த சம்பம் விலங்கு நல ஆர்வலர்களுக்கு இடையே வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களைத் தவிர பொதுமக்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் பென்னி என்ற நாய்க்குட்டியின் ப்ளாஸ்பேக்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்டர் கிரவுண்ட் ஆப்ரேஷன் :

அன்டர் கிரவுண்ட் ஆப்ரேஷன் :

பென்னி என்ற நாய்க்குட்டி தன் வாழ்நாளின் பாதியை அடைத்து வைக்கப்பட்ட அண்டர்கிரவுண்டிலேயே கழித்தது. வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே சாப்பாடு என வெளியுலகமே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

தினமும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளை சந்தித்திருக்கிறது பென்னி. கடந்த வருடம் சில தன்னார்வலர்கள் அண்டர்கிரவுண்டிலிருந்து மீட்டிருக்கிறார்கள்.

பென்னி :

பென்னி :

பல வருடங்கள் ஒரேயிடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் வெளியுலக தொடர்பின்றி சோர்வாக சுருண்டு படுக்கும் நிலையில் இருந்திருக்கிறது.இதனால் யாருமே இதனை வாங்கிக் கொள்ள முன்வரவில்லை

டெலுகா என்பவருக்கு பென்னி மீது தனிப்பிரியம் வந்துவிட்டது. அவர் அந்த நாயை அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவிக்க, நாயை மீட்டவர்களோ இந்த நாயைப் பற்றி விவரித்திருக்கிறார்கள். இந்த நாய் மனதளவில் சரியில்லாமல் இருப்பதால் கொடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

டெலுகாவின் பென்னி :

டெலுகாவின் பென்னி :

கிடைக்காது என்ற எண்ணத்தில் பென்னி அருகில் சென்று தடவிக்கொடுக்க, பென்னி டெலுகாவை நோக்கி வந்து வாலாட்டியிருக்கிறது. அப்போதே இந்த நாய் தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிவிட்டார் டெலுகா.

பென்னியை வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் தான் டெலுகா சில பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார். வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் எதைப்பார்த்தாலும் பயந்து கொண்டேயிருந்தது.

வாக்கிங் கூட செல்ல முடியாது :

வாக்கிங் கூட செல்ல முடியாது :

மனிதர்கள், டிவி, சேர்,டேபிள் என்று எல்லாவற்றிற்குமே பயந்திருக்கிறது பென்னி. கண்ணை பார்க்க கூட தெரியவில்லை பென்னிக்கு, இப்படியான சூழலில் வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாது. முழுவதும் கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நாயை வாக்கிங் அழைத்துச் செல்லக்கூட முடியவில்லையாம்.

என்ன ஆனாலும் சரி பென்னி என் குழந்தை என்றே நினைத்து செயல்பட ஆரம்பித்தார் டெலுகா. இந்த உலகத்தை பென்னிக்கு பழக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

புதிய பயணம் :

புதிய பயணம் :

இவரின் நண்பர்கள் தாங்கள் வைத்திருக்கும் நாயுடன் டெலுகா வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவற்றுடன் பழக ஆரம்பித்த பிறகு பென்னியிடம் நல்ல மாற்றம் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து உலகத்தை அறிமுகப்படுத்த நினைத்த டெலுகா பென்னியுடன் அட்வென்ச்சர் ட்ரிப் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.

அட்வென்ச்சர் :

அட்வென்ச்சர் :

பல வருடங்கள் வீட்டிற்க்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருந்த பென்னி வெளியுலகத்தை வெகுவாக ரசிக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம், கையிற்றின் மூலமாக மலையேறுவது, பாறைக்கு பாறை தாவுவது என பயங்கர பிஸியாகிவிட்டார் பென்னி. பென்னி கொஞ்சம் கொஞ்சமாக பழைய ஃபார்முக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்!

பென்னியுடன் தன சென்ற பயணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர அது தான் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கிறது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Dog went to an adventure trip

Dog went to an adventure trip
Story first published: Tuesday, September 19, 2017, 14:45 [IST]