இறுதி சடங்கில் கதறி அழ ரூ. 65 ஆயிரம் - நூதன முறையில் சம்பாதிக்கும் சில்வெஸ்டர் மோஸ்!

Posted By:
Subscribe to Boldsky

அளவிற்கு மீறி பணம் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் காலம், காலமாக தற்புகழ்ச்சி செய்து தங்களை பிரபலப்படுத்தி வந்த கதைகள், நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால், இந்த சமூகதள யுகத்தில் தற்-இகழ்ச்சி செய்துக் கொண்டு தங்களை இணையத்தில் வைரலாக்கிக் கொள்ள பெரும் கும்பல் ஒன்று இயங்கி வருகிறது.

தங்கள் திறமையை வைத்து வைரலாகும் நபர்களை விட, இவர்கள் சீக்கிரம் வைரலாகிவிடுவார்கள். இதன் நிலை என்ன? எத்தனை நாட்கள் இவர்கள் இப்படி தாக்குப்பிடிப்பார்கள் என்பது தான் கேள்வி.

சென்ற இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் கூட இப்படி சிலர் வைரலாகி பிரபலமானார்கள். ஆனால், அவர்கள் இன்றும் அதே பிரபலத்துடன் இருக்கிறார்களா? என்றால்... இல்லை என்பது தான் பதில்.

இந்த வகையில், பஹாமாஸ் எனும் தீவின் தலைநகரான நாசுவே என்ற பகுதியை சேர்ந்த நபர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள செய்த பதிவுகள் குறித்து தான் நாம் இங்கே காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்வெஸ்டர் மோஸ்!

சில்வெஸ்டர் மோஸ்!

இவரது முழு பெயர் சில்வெஸ்டர் ரிக்கார்டோ மோஸ். இவரது ஃபேஸ்புக் யூசர் ஐ.டி.-யில் போதகர் (Pastor) என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இவர் பஹாமாஸ் தீவின் தலைநகரான நாசுவேவில் வாழ்ந்து வருகிறார்.

Image Credit : Sylvester Ricardo Moss / Facebook

வைரல் பதிவு!

மாற்றவது இறுதி சடங்கள் அழ சம்மர் ஆஃபர் என்று கூறி ஒரு பதிவை இவர் சில நாட்களுக்கு முன்னர் தனது முகநூலில் இட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தவை...

1. சாதாரணமாக அழ - $50 / ரூ. 3,200

2. உள்ளூர் முறையில் கூவி அழ $100 / ரூ. 6,400

3. நிலத்தில் உருண்டு, பிரண்டு அழுவதற்கு - $150 / ரூ. 9,600

4. அழுதப்படியே கல்லறையில் குதித்து விடுவேன் என அச்சுறுத்த $200 / ரூ. 12,800

5. அழுதப்படி உண்மையாகவே கல்லறையில் குதிக்க $1000 / ரூ. 64,320

வேண்டுவோர் என்னை புக் செய்ய இன்பாக்ஸ் செய்யவும் என பதிவிட்டிருந்தார்.

பகிர்வுகள்!

பகிர்வுகள்!

கடந்த செப்டம்பர் 14 தேதி, சில்வெஸ்டர் ரிக்கார்டோ மோஸ் முகநூலில் இட்டிருந்த இந்த பதிவை இன்றுவரை, 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர், 1.4 இலட்சம் பேர் ஷேர் செய்துள்ளனர், 1.27 இலட்சம் பேர் கமென்ட் செய்துள்ளனர்.

இந்த பதிவின் மூலம் தன்னை வைரலாக்கிய ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் தன்னை பின்தொடரும் நபர்களுக்கும் நன்றிகள் கூறியுள்ளார் சில்வெஸ்டர் மோஸ்.

Image Credit : Sylvester Ricardo Moss / Facebook

கன்றாவி வீடியோக்கள்!

கன்றாவி வீடியோக்கள்!

இது போன்ற விசித்திரமான பதிவுகள் மட்டுமின்றி, தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள அவ்வப்போது ஏதேனும் கன்றாவி வீடியோக்களும் பதிவு செய்து வருகிறார் சில்வெஸ்டர் மோஸ்.

Image Credit : Sylvester Ricardo Moss / Facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Want To Boost Your Funeral? Call Sylvester Ricardo Moss!

Do You Want To Boost Your Funeral? Call Sylvester Ricardo Moss!