மனித உயிருடன் விளையாடும் அடுத்த போட்டி? வருகிறது பிங்க் வேல் கேம்!!

Posted By:
Subscribe to Boldsky

இணையத்தை பயன்படுத்துபவர்களை கதிகலங்கச் செய்த ப்ளூவேல் கேம் போலவே இப்போது பிங்க் வேல் என்ற கேம் வேகமாக பரவி வருகிறது. ப்ளூவேல் கேம் விளையாடுபவர்கள் இறுதியில் தற்கொலை செய்து கொள்ளச் சொல்லும் ஆனால் பிங்க் வேல் என்ன சொல்கிறது தெரியுமா? அன்பு செய்யவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே சொல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூவேல் கேம் :

ப்ளூவேல் கேம் :

ப்ளீ வேல் கேம் விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என பல புகார்கள் எழுந்து வருகிறது. ஆன்லைன் கேமான இதனை விளையாடுபவருக்கு தினசரி ஒரு டாஸ்க் என 50 நாட்கள் சில வேலைகளை செய்யச் சொல்லும்.

இறுதியாக அந்த கேம் விளையாடுபவர் தற்கொலை செய்ய தூண்டும்.ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Image Courtesy

கோரிக்கை :

கோரிக்கை :

2015- 2016 வரை புளூ வேல் விளையாடி 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் புளூ வேல் பல உயிர்களை பறித்து வருகிறது. புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த கேம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Image Courtesy

பிங்க் வேல் :

பிங்க் வேல் :

இந்தியாவில் புளூ வேல் விளையாட்டை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரேசில் நாட்டை சேர்ந்த டெவலப்பர் ஒருவர் பிங்க் வேல் என்ற கேமினை உருவாக்கியுள்ளார்.

போர்ச்சுகீஸ் மொழியில் பலீயா ரோசா என அழைக்கப்படும் பிங்க் வேல் சேலஞ் ஏற்கனவே அச்சுறுத்தலாக இருக்கும் புளூ வேல் சவால்களுக்கு மாறாக இருக்கிறது.

Image Courtesy

என்ன செய்கிறது பிங்க் வேல்? :

என்ன செய்கிறது பிங்க் வேல்? :

ப்ளூவேல் போலவே பிங்க் வேலிலும் தினமும் ஒரு டாஸ்க் இருக்கும். இது நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை தூண்டும் விதமாகவும் அன்புச்செய்யச் சொல்லியும் தான் இருக்கும். இந்த கேம் ஒருவருக்குள் அன்பை பரிமாறச் செய்வதோடு, நேசிக்கச் செய்யும் சவால்களை கொண்டுள்ளது.

Image Courtesy

 வரவேற்பு

வரவேற்பு

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும். புளூ வேல் போன்றே 50 சவால்களை கொண்டுள்ள பிங்க் வேல் அவை அனைத்தையும் வித்தியாசமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. இதன் ஐம்பதாவது சவால் ஒரு உயிரை காப்பாற்றுவது ஆகும். இதுவரை 500,000க்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்றுள்ள பின்க் வேல் சேலன்ஜ் அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Detail about Pink whale challenge

Detail about Pink whale challenge
Story first published: Monday, August 21, 2017, 12:01 [IST]
Subscribe Newsletter