மனித உடலில் கண்டுபிடிக்கப்பட்ட வித்யாசமான பொருட்கள்

Posted By: Aashika
Subscribe to Boldsky

 மருத்துவ உலகம் எப்போதும் தனக்குள்ளே ஆச்சரியங்களை நிரப்பி வைத்திருக்கும் விந்தையான உலகம். தொழில்நுட்பங்களைத் தாண்டி மருத்துவ உலகில் நடக்கும் சில வேடிக்கையான விஷயங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திடும். குழந்தைகள் பல்பம்,மண் எடுத்து வாயில் போட்டுக் கொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கே மருத்துவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்த பல விஷயங்களை முழுங்கியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயிருள்ள விலங்கு :

உயிருள்ள விலங்கு :

சீனாவைச் சேர்ந்த ஜியாங் முசெங் என்ற நபருக்கு தவளைக்கறி என்றால் மிகவும் பிடிக்குமாம். தன் உடல் வலிமையை அதிகரிக்க ஒரு நாள் குட்டி தவளை ஒன்றை உயிருடன் அப்படியே விளுங்கிவிட்டிருகிறார். தொடர்ந்து அவருக்கு இருந்த வயிற்று வலி மற்றும் இருமல் வேறு குணமாகிவிட்டதாம். எந்த பிரச்சனையும் வராததையடுத்து குட்டி எலிகளையும் உயிருடன் சாப்பிட்டிருக்கிறார்.

சுமார் ஒரு வருடம் கழித்து அவருக்கு வயிற்று வலி வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட மருத்து சிகிச்சையில் அவரது வயிற்றுக்குள் இருந்து குட்டி சாம்ராஜ்ஜியமே வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

துருப்பிடித்த கத்தி :

துருப்பிடித்த கத்தி :

இவரும் சீனாவைச் சேர்ந்தவர் தான்.சில வருடங்கள் தொடர்ந்து தலைவலி மூச்சுத்திணறல் இருக்கவே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரை சோதித்த போது தான், அவரது தலையில் துருப்பிடித்த கத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்ரேஷன் மூலம் அந்த கத்தி அகற்றப்பட்டது. நல்ல வேலையாக அந்த கத்தி தலையில் எந்த நரம்புகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னர் திருடன் ஒருவனுடன் சண்டையிட்டபோது தலையில் அடிப்பட்டது என்று நினைவு கூர்கிறார் ஷார்ப் மேன்.

Image Courtesy

ப்ளாஸ்டிக் ஃபோர்க் :

ப்ளாஸ்டிக் ஃபோர்க் :

ஃபோர்க் ல சாப்பிட சொன்னா ஃபோர்க்கையே சாப்பிட்டா இப்டித்தான். ஜான் மான்லே என்பவர் தொடர்ந்து தனக்கு மூச்சு வாங்குவதாகவும் இருமல் இருப்பதாகவும் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

சோதித்த மருத்துவரக்ள் அவரது மூச்சுக்குழாயில் பெரிய கட்டி வளர்ந்திருப்பதாக தெரிவித்தனர். அது புற்றுநோய்க்கட்டியாக இருக்குமோ என்றெல்லாம் சோதித்தனர். கடைசியில் ஆப்ரேஷன் செய்து அதை வெளியே எடுத்தபோது தான் உணவுக்குழாயில் இருந்தது கட்டியல்ல ப்ளாஸ்டிக் ஃபோர்க் என்று தெரிந்தது.

Image Courtesy

வயிறா குடவுனா?

வயிறா குடவுனா?

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஓர் கைதியின் நடை வித்யாசமாக இருக்கவே சந்தேகமடைந்த போலீசார் அவனை விசாரித்தனர். தொடர்ந்து அவன் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியிருக்கிறான், உடனடியாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போது தான் அவனது வயிற்றுக்குள் சிகரெட், தீப்பெட்டி, போதைப்பொருள், லிப் பாம்,காண்டம்,சிரிஞ் என எக்கச்சக்கமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

போஸ்டர் :

போஸ்டர் :

இங்கிலாந்தையே வைரலாக கலக்கிய விஷயம் இது. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாகவும் அதே போல தன்னுடைய பிறப்புறுப்பிலும் அதீத வலி எடுப்பதாகவும் கூறி மருத்துவரை சந்தித்திருக்கிறார்.

அவருக்கு அலர்ஜி எதாவது ஏற்ப்பட்டிருக்கும் என்று நினைத்து சோதித்த போது தான் உள்ளே டானி ஆஸ்மாண்ட் என்கிற இங்கிலாந்து பிரபலத்தின் போஸ்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Image Courtesy

முடி :

முடி :

சிகாகோவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக மருத்துவரை சந்தித்திருக்கிறார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சையாக உடனடியாக வயிற்றை ஆப்ரேசன் செய்த போது தான் உள்ளே பத்து பவுண்ட் அளவில் முடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முடியை சாப்பிடும் அரிதான நோய் அவருக்கு இருப்பதாகவும் அதனால் தன்னுடைய முடியையே தினமும் சாப்பிட்டு வந்ததன் விளைவு தான் இது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

Image Courtesy

உடன்பிறப்பே :

உடன்பிறப்பே :

நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத் என்பவருக்கு பிறந்ததிலிருந்து வயிறு பெரிதாகவே இருந்திருக்கிறது. அது எந்த தொந்தரவையும் கொடுக்காததையடுத்து அப்படியே அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். பல ஆண்டுகள் கழித்து அதீத மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறி மருத்துவரை சந்தித்தனர். சோதித்த போது வயிற்றில் ஏதோ பிரச்சனை இருக்கிறதென உணர்ந்த மருத்துவர்கள் ஆப்ரேசன் செய்த போது தான் உள்ளே பாதி வளர்ந்த நிலையில் கரு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சஞ்சு வயிற்றிலிருக்கும் போதே அந்த கரு உள்ளே சென்று விட்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவரகள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, health, food
English summary

Craziest Things Found In Human's body

Most Unusual things found in human body
Story first published: Tuesday, July 18, 2017, 16:11 [IST]
Subscribe Newsletter