For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மூடநம்பிக்கைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை காரணங்கள் !!

இந்திய பண்பாடுகளில் சில பழக்கங்கள் மூட நம்பிக்கைகளாக பின்ப்பற்றப்படுகிறது. அதற்கான உண்மை காரணங்கள்

|

தெரிந்தோ தெரியாமலோ சில பழக்கங்கள் நமக்க வழக்கமாகி விட்டது. வழிவழியாக பின்பற்றப்படுகிறது என்ற ஒரே காரணத்திற்காக சில பழக்கங்களின் உண்மை காரணம் தெரியாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில அன்றாட வழக்கங்கள் திரிந்து மூடப்பழக்கங்களாக தொடர்கிறது. சில மூடப்பழக்கங்கள் பற்றியும் அவற்றின் உண்மையான காரணங்களையும் இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிரும் சர்க்கரையும் :

தயிரும் சர்க்கரையும் :

வெளியே செல்வதற்கு முன் தயிர் குடிப்பது, வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். 18 ஆம் நூற்றாண்டுகளில், வெயில் காலத்தில் வெளியே செல்பவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தார்கள். அது உடனடி க்ளுகோஸாக செயல்பட்டது. இந்த பழக்கம் அப்படியே அதிர்ஷ்டத்துடன் தொடர்பு படுத்தி இன்றும் பின்பற்றப்படுகிறது.

செவ்வாய்கிழமை ஹேர்கட் :

செவ்வாய்கிழமை ஹேர்கட் :

ஆரம்ப காலங்களில் இந்தியர்கள் பலரும் விவசாயிகளாக இருந்தனர். ஒரு வாரம் அயராமல் வேலை பார்க்கும் அவர்களுக்கு திங்கட்கிழமை தான் ஓய்வு தினமாக இருந்தது. அதனால் பலரும் திங்கட்கிழமைகளில் தான் தங்களின் வீட்டை சுத்தப்படுத்தி, தலை முடியையும் வெட்டினார்கள். இதனால் செவ்வாய்கிழமை என்றால் முடி திருத்துபவர்களுக்கு வேலை இருக்காது. அதனால் பெரும்பாலானோர் தங்கள் முடி திருத்தும் கடைகள் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறையாக அறிவித்துக் கொண்டனர்.

மாலையில் வீடு கூட்டக்கூடாது :

மாலையில் வீடு கூட்டக்கூடாது :

கரண்ட் புழக்கத்தில் வராத 18 ஆம் நூற்றாண்டுகளில், வெளிச்சத்திற்கு எண்ணெய் விளக்கு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. மோசமான வெளிச்சத்தில் தரையை பெருக்கினால் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தொலையக்கூடும். மேலும் பெருக்கும் போது, விளக்கின் தீயால் விளக்குமாறில் எளிதில் தீ பற்றிக் கொள்ளும் அபாயமும் இருந்தது. அதனால் தான் விளக்கு வைத்தவுடன் வீட்டை பெருக்காதே என கூறப்பட்டது.

உப்பு மிளகாய் :

உப்பு மிளகாய் :

உப்பு, மிளகாய் போன்றவற்றை நேரடியாக கைகளில் கொடுக்கக்கூடாது, இது வசதிக்காகவே இப்படியான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஒருவரின் கைகளில் உப்பு கொடுப்பதற்கு பதிலாக கிண்ணத்தில் கொடுத்தால் அவருக்கு தேவையானதை எடுத்துக் கொள்வார்.

இறுதிச்சடங்கு :

இறுதிச்சடங்கு :

இறுதிச்சடங்குக்கு சென்று விட்ட வந்தவர்கள் குளித்துவிட்டே வீட்டிற்க்குள் வர வேண்டும் என்று சொல்லப்படுகிறது, இறந்த உடலில் இருந்து எந்த ஒரு தொற்றுக்களும் நம்மை பாதிக்காமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கையே இந்த பழக்கம். அன்றைய தினங்களில் எல்லாம் ஹெபடைடிஸ், சின்னம்மை மற்றும் இதர கொடிய நோய்களுக்கு எல்லாம் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தினால் எளிதில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தது.

பூனை அபசகுனம் :

பூனை அபசகுனம் :

நம் செல்லும் போது கருப்பு பூனை கடந்து சென்றால் அது அபசகுனமாக பார்க்கப்படுகிறது. பல இடங்களில் அவர்களின் பண்பாடுகளில் கருப்பு பூனையை சூனியத்திற்கு பயன்படுத்தியிருக்கின்றனர்.

அதனால் சூனியத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருளை பார்த்தவுடன் அபசகுனம் என்று சொல்லிவிட்டனர். இதன் பின்னணியில் நேர்மறையான விளக்கங்கள் ஏதும் இல்லை. அதே நேரத்தில் இந்த கருப்பு பூனை எகிப்தியர்களின் அதிர்ஷடமாக பார்க்கப்பட்டது.

இப்பூனை வகையறாவை சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகும் போது ஒருமுறை நின்று பார்த்து விட்டு தான் கடக்கும். வழியில் அதற்கான இறை இருக்கிறது என்றோ அல்லது ஆபத்தான மிருகங்கங்கள் இருக்கிறதென்றோ அர்த்தமாம்.

அதனால் தூரத்தில் இப்பூனைகளை கண்டாலோ அல்லது நம்மைக் கடந்து சென்றாலோ திரும்பி போய் விடுவார்கள். அந்த காரணம் தான் இக்காலத்தில் மருவி இப்படி ஆகிவிட்டது.

அதே போல பூனை பெரும்பாலும் மக்கள் வசிக்கும் இடங்களில் தான் இருக்கும். முந்தைய காலத்தில் கோட்டையை கைப்பற்ற வரும் எதிரி நாட்டினர் அவ்வூர் மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பூனை வந்தால் அந்த இடங்களில் மக்கள் வசிக்கிறார்கள் என்பதை அறிந்து வேறு வழியில் செல்வார்களாம். இதுவே மருவி பூனை வந்தாலே செல்லும் காரியம் தடைப்பட்டுவிடும் என்றானது.

உப்பைக் கொட்டினால் துரதிஷ்டம் :

உப்பைக் கொட்டினால் துரதிஷ்டம் :

இடைக்காலங்களில் உப்பு என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்தது. மேலும் அதனை மருத்துவத்திற்காக பயன்படுத்தினார்கள். அதனால் தான் உப்பை கொண்டு செல்லும் போது, அதனை கவனமாக எடுத்து செல்ல அறிவுறத்தப்பட்டு, பின்னாட்களில் இந்தப்பழக்கமே மூடநம்பிக்கையாக திரித்துக் கொண்டார்கள்.

பாம்பு புற்றுக்கு பால் :

பாம்பு புற்றுக்கு பால் :

பாம்புக்கு பாலும் முட்டையும் பிடிக்கும் என்பதால் அதனை பால் புற்றில் ஊற்றி வேண்டினால் நினைத்தது நடக்கும் என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய காலத்தில் எங்குமே காடும் புதர்களும் நிரம்பிக்கிடந்தன, பெண் பாம்புகளின் மேல் வருகின்ற திரவ வாசத்தைக் கொண்டு ஆண் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வரும். இப்படி பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணி முட்டையும் பாலும் புற்றில் ஊற்றப்பட்டது.

இந்த இரண்டுக்குமே பாம்பின் வாசத்தை போக்கும் குணமுண்டு. உண்மையில் பாம்பு பாலையும் முட்டையையும் சாப்பிடாது.

மாலையில் பூப் பறிக்க கூடாது :

மாலையில் பூப் பறிக்க கூடாது :

மாலை நேரங்களில் பூப்பறித்தால் அது வீட்டிற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். இதற்கு காரணம், செடிகளில் பூச்சி,பாம்பு போன்றவை இருக்ககூடும். இருட்டில் இவை இருப்பது தெரியாமல் நாம் அருகில் சென்றால் அது நம்மை கடித்து விடக்கூடும் என்பதாலேயே இப்படியான மூட நம்பிக்கை உருவாக்கப்பட்டது.

கொள்ளைப்புற வழி :

கொள்ளைப்புற வழி :

சாவு வீட்டிற்கு சென்றுவந்தவர்கள் கொள்ளைப்புறம் வழியாக வர வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு, இதற்கு காரணம், முந்தைய காலத்தில் குளியலறை வீட்டிற்கு வெளியில் உள்ள கொள்ளைப்புறத்தில் தான் இருக்கும். நோய்க்கிருமிகள் நம்மை அண்டாமல் இருக்க குளித்துவிட்டு தான் வர வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த யுக்தி பின்பற்றப்பட்டது.

Image Courtesy

தும்மல் :

தும்மல் :

சுப காரியங்கள் செய்யும் போதோ அல்லது வெளியில் செல்லும் போது தும்மல் வந்தால் அது கெட்ட சகுனம் என்று சொல்லப்படுவதுண்டு. இதற்கு காரணம், தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயம் தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால், உடம்பு சுகமில்லை போகவேண்டாம் என்றும் ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையம் வழக்கமாக்க வைத்திருந்தனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம்.

புரட்டாசியில் அசைவம் கூடாது :

புரட்டாசியில் அசைவம் கூடாது :

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம் என்பதால் அசைவம் கூடாது என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதால் அசைவம் தவிர்க்க இப்படியான கதை உருவாக்கப்பட்டது.

இரவுகளில் அரச மரத்தடியில் படுக்க கூடாது :

இரவுகளில் அரச மரத்தடியில் படுக்க கூடாது :

இரவு நேரத்தில் மரத்தடியில் தூங்கினால் பேய்பிடிக்கும் என்று சொல்வார்கள். இதற்கு உண்மையான காரணம், அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும். மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள் கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்படும், உயிர் போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் இரவில் அரச மரத்தடியே படுக்க கூடாது என சொல்லி வைத்தார்கள்.

Image Courtesy

ஒற்றைப்படையில் மொய் :

ஒற்றைப்படையில் மொய் :

மொய் வைக்கும் போது ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும். அது தான் சம்பிரதாயம் என்று சொல்வார்கள், சம்பிரதாயத்திற்கு பின்னால் இருக்கும் யுக்தி என்ன தெரியுமா? இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். உதாரணம்: (100/2=50) , (101/2=50.5)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Common Myths and their real reason

Common Myths and their Facts
Desktop Bottom Promotion