TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
இதெல்லாம் பார்க்காட்டி கட்ட எப்படி வேகும்... - அதிசய புகைப்படங்களின் தொகுப்பு!
உலகில் காண கிடைக்காதவை என சில பொருட்கள், இடங்கள் இருக்கின்றன. பணவசதி கொண்டவர்கள் அதை நேரில் கண்டு மெய்சிலிர்த்து போகலாம். இன்டர்நெட் வசதி மட்டும் கொண்டவர்கள் படங்களாக கண்டு சில நிமிடங்கள் வியந்து போகலாம்.
வாழ்க்கை என்பதும் ஒரு கணக்கு, அதில் இருக்கும் குழப்பங்களை சால்வ் செய்துவிட்டால் உங்கள் பிறப்பிற்கான விடையை பெற்றுவிடலாம். அப்படி பார்த்தல், நமது உலகும் ஒரு கணக்கு தான். ஆனால், இதன் கணக்குகள் பெருமளவு, குழப்பமும், வியப்பும் தான் அளிக்கிறது.
வான்வழியில் இருந்த பார்த்தால் இந்த இடங்கள் வரைந்து வைத்தது போல அமைந்திருக்கின்றன... இதை மிக அழகாக பெஞ்சமின் கிரான்ட் என்பது தனது ஓவர்வியூவ் | எ நியூ பர்ஸ்பக்டிவ் என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார்...
All Image Credits: Photographer Benjamin Grant |Overview: A New Perspective
#25 நிஷினோஷிமா எரிமலை
நிஷினோஷிமா எரிமலை வெடிப்பு, இடம்: ஜப்பான் டோக்கியோவின் தெற்கு!
நிஷினோஷிமா எனுமிடம் எரிமலை தீவாகும். இது தெற்கு டோக்கியோவில் இருந்து 940 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. கடந்த நவம்பர் 2013ல் இருந்து, ஆகஸ்ட் 2015வர இந்த எரிமலை வெடித்து கொண்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் அந்த தீவை சுற்றிலும் 2.3 கிலோமீட்டர் சுற்றளவில் சாம்பல் மேடு சூழ்ந்தது.
#24 லாஜிஸ்டிக்ஸ் விமான நிலையம்
தெற்கு கலிபோர்னியா லாஜிஸ்டிக்ஸ் விமான நிலையம் கிரேவியார்ட், இடம்: விக்டோரியாவில், கலிபோர்னியா, அமெரிக்கா.
தெற்கு கலிபோர்னியாவில் அமைந்திருக்கிறது இந்த லாஜிஸ்டிக் விமான நிலையம். இங்கே அமெரிக்காவின் பயன்பாடு முடிந்த நிலையிலான 150 போன்யார்டு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது போக பழுதடைந்த பலவகை விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை காண ஒரு விமான சுடுகாடு போல காட்சியளிக்கிறது.
#23 தி எம்ப்டி குவாட்டர்
தி எம்ப்டி குவாட்டர், இடம்: சவுதி அரேபியா.
ரப் அல் காலி அல்லது தி எம்ப்டி குவாட்டர் என இந்த இடம் அழைக்கப்படுகிறது. இதை உலகின் மாபெரும் பாலைவனம் என கூறுகிறார்கள். இதன் நிலபரப்பு சுமார் 6,50,000 கிலோமீட்டர் சதுரடி ஆகும். இது சவுதி அரேபியா, ஓமன், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்குள் அடங்கி இருக்கிறது. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே ஆழமற்ற குளங்கள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
#22 சென்ட்ரல் பார்க்
சென்ட்ரல் பார்க், நியூயார்க் நகரம். இடம்: நியூயார்க், அமெரிக்கா.
கிட்டத்தட்ட 843 ஏக்கர் நிலபரப்பில் இந்த பூங்காவை அமைத்துள்ளது நியூயார்க். இது மன்ஹாட்டன்ல் ஆறு சதவீத இடத்தை ஆக்கரமிப்பு செய்துள்ளது. இங்கே சைக்கிளிங், குதிரை ஏற்றம், கார் ஒட்டுதல் என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவ்வளவு பெரிய இட வசதி கொண்டுள்ளது. உள்ளே டென்னிஸ், பேஸ்பால், ஐஸ் ஸ்கேட்டிங், நீச்சல் குளம் என பல வசதிகள் இருக்கிறது.
#21 டூலிப்ஸ்
டூலிப்ஸ். இடம்: லிஸ்ஸே, நெதர்லாந்து.
ஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தின் இந்த இடத்தில் மலர்கள் சரியாக மார்ச் மாதம் பூத்து குலுங்கும். மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதை காண குவிகிறார்கள். ஏறத்தாழ 4.3 பில்லியன் பூக்கள் இங்கே வருடத்திற்கு பூக்கின்றன. இதில் 1.3 பில்லியன் மலர்களை நெதர்லாந்திலேயே விற்றுவிடுகிறார்கள். 630 மில்லியன் பூக்கள் ஐரோப்பாவிலும், 370 மில்லியன் பூக்கள் உலக நாடுகளின் இதர பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
#20 ஷேடகன் லாகூன்
ஷேடகன் லாகூன், இடம்: ஈரான்.
ஷேடகன் லாகூன் இடத்தை சுற்றி டெண்ட்ரிடிக் ட்ரைனேஜ் சிஸ்டம் காணப்படுகிறது. டெண்ட்ரிடிக் எனும் வார்த்தை குளங்கள் என்ற பொருள் பெறுகிறது. இது காண மரங்களின் கிளைகள் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த வடிவம் இயற்கையகாவே சில பாறை படிமங்களால் உருவாகியுள்ளது.
#19 எக்சிம்பில் (Eixample )
எக்சிம்பில், இடம்: பார்சிலோனா, ஸ்பெயின்
பார்சிலோனாவில் இருக்கும் எக்சிம்பில் எனும் நகரத்தில் ஒரே மாதிரியான கிரிட் வடிவில் வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதை 1815 - 1876 காலக்கட்டத்தில் திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். இங்கே இந்த வடிவமைப்பின் காரணமாக சூரிய ஒளி மிகுதியாக கிடைக்கிறது, காற்றோட்டம் மிகுதியாக இருக்கிறது, பார்கிங் செய்ய அதிக இடம் கிடைக்கிறது என கூறுகிறார்கள்.
#18 அங்கோர் வாட்
அங்கோர் வாட், இடம்: கம்போடியா
உலகின் பெரிய இந்து கோவிலாக கருதப்படுகிறது. இதை 12ம் நூற்றாண்டில் கட்டியுள்ளனர். இதன் நிலப்பரப்பு 8.8 மில்லியன் சதுரடி ஆகும். இந்த கோவிலுக்குள் அகழி, காடுகள் இருக்கிறது. மிகப்பெரிய இடத்திற்குள் அமைந்துள்ளது இந்த கோவில்.
#17 ஆலிவ்ஸ்
ஆலிவ்ஸ், இடம் : கோர்டோபா, ஸ்பெயின்
ஆலிவ் மரங்கள் கோர்டோபா மலைகள் முழுவதும் படர்ந்துள்ளது. ஏறத்தாழ 90% இந்த மரங்கள் அந்த காடுகளில் இருக்கிது. இங்கிருந்து அறுவடை செய்யப்படும் ஆலிவ் மரங்களில் இருந்து 90% ஆலிவ் எண்ணெய் உற்பத்தி செய்கிறார்கள்.
#16 சோலார் ஆலை
கெமாசோலார் தெர்மோ சோலார் ஆலை, இடம்: செவில்லே, ஸ்பெயின்.
இந்த சோலார் ஆலையில் 2,650 மிரர்கள் சூரிய ஒளி மூலம் 140 மீ உயரம் கொண்ட சென்ட்ரல் தவறுக்கு எனர்ஜியை உற்பத்தி செய்து அனுப்புகிறது. ஆண்டுக்கு இந்த ஆலையில் இருந்து மட்டும் முப்பது ஆயிரம் டன் கார்பன்டை ஆக்சைடு மாசு வெளியேறுகிறது.
#15 அகதிகள் முகாம்
தாபாப் அகதிகள் முகாம், இடம்: வடக்கு கென்யா.
வடக்கு கென்யாவில் இருக்கிறது இந்த தாபாப் அகதிகள் முகாம். இங்கே ஒரு இலட்சம் அகதிகள் வரை தங்கலாம். அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக தாபாபில் எல்.எப்.ஒ எனும் நீட்டிப்பு அகதிகள் முகாம் உருவாக்கியுள்ளது யு.என். இங்கே நான்கு இலட்சம் அகதிகள் வரை தங்கலாம்.
#14 ஐப்பனேமா கடற்கரை
ஐப்பனேமா கடற்கரை, இடம்: ரியோ டி ஜெனிரோ, பிரேசில்.
ரியோவின் தெற்கு மண்டலத்தில் அமைந்திருக்கிறது இந்த கடற்கரை. இது உலகின் அழகான கடற்கரைகளில் ஒன்றாகும். சரியாக மக்கள் வாழ்விடத்தையும், கடலையும் இந்த கடற்கரை ஒரு கோடு போல பிரித்துள்ளது.
#13 ஜாக்சன்வில் இன்டர்சேஷன்
ஜாக்சன்வில் இன்டர்சேஷன், இடம்: ஜாக்சன்வில், புளோரிடா, அமெரிக்கா.
ஜாக்சன்வில், புளோரிடா, அமெரிக்காவில் அமைத்துள்ளது இந்த பாலம். வட்டமான பெரிய இடத்தில் போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் இருக்க சுழல் வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள்.
#12 டல்லாஸ் சர்வதேச விமான நிலையம்
டல்லாஸ் / கோட்டை வொர்த் சர்வதேச விமான நிலையம், இடம்: டெக்சாஸ், அமெரிக்கா.
70 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட டல்லாஸ் விமான நிலையம். உலகின் பத்தாவது பிஸியான விமான நிலையமாக இயங்கி வருகிறது. வருடத்திற்கு 6.4 கோடி மக்கள் இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள்.
#11 போர்ட் ஆண்ட்வெர்ட்
போர்ட் ஆண்ட்வெர்ட் , இடம்: பெல்ஜியம்.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் இந்த போர்ட் ஆண்ட்வெர்ட். ஒரு வருடத்திற்கு 314 டன் கார்கோ ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த எடை உலக மக்களின் எடையில் 68% ஆகும்.
#10 இரும்பு தாது என் டைலிங்ஸ் குளம்
இரும்பு தாது என் டைலிங்ஸ் குளம், இடம்: நெகூனி, மிச்சிகன், அமெரிக்கா
சுரங்க தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து வெளியேறும் கழிவுகளால் இந்த குளம் நாசமாகியுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக குளம், குட்டைகளில் கலக்கின்றன. இதனால் இது வண்ணமையமாக தோற்றமளிக்கிறது. மொத்தம் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது இந்த குளம்.
#௦9 பர்னிங் மேன்
பர்னிங் மேன், இடம்: பிளாக் ராக் டெசர்ட், நெவாடா, அமெரிக்கா.
பர்னிங் மேன் என்பது பிளாக் ராக் டெசர்ட், நெவாடா பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஒரு வார காலம் நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வில் 65,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று வரைகிறார்கள். இது ஒரு சமூகத்தின் கலையை, சுய விருப்பத்தை மேம்படுத்த இதை செய்கிறார்கள்.
#08 சிங்கப்பூர் துறைமுகம்
சிங்கப்பூர் துறைமுகம், இடம்: சிங்கப்பூர்.
மூன்று இலட்சத்திற்கும் மேலான எடை கொண்ட கார்கோ கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தில் நிற்கின்றன. உலகின் இரண்டாது பிஸியான துறைமுகம். மற்றும் உலகின் ஐந்தாவது பெரிய கார்கோ துறைமுகம் என்ற பெருமை பெற்றுள்ளது.
#07 சன் லேக்ஸ்
சன் லேக்ஸ், இடம்: சன் லேக்ஸ், அரிசோனா, அமெரிக்கா
இங்கே மொத்தம் 14,000 பேர் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் சீனியர் சிட்டிசன்கள். இது அமெரிக்க மக்கள் தொகை ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
#06 டேவிஸ்-மோன்தன் விமானப்படை தளம்
டேவிஸ்-மோன்தன் விமானப்படை தளம், இடம்: டஸ்கன், அரிசோனா, அமெரிக்கா
உலகின் மாபெரும் விமான கிடங்காக இருந்து வருகிறது இந்த இடம். இங்கே அமெரிக்க அரசு விமான படையின் 4,400 பயன்பாடு முடிந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
#05 டெல்ரே கடற்கரை
டெல்ரே கடற்கரை, இடம்: டெல்ரே பீச், ப்ளோரிடா, அமெரிக்கா.
மேலிருந்து காண ஒரு அழகான தோற்றம் கொண்டுள்ளது இந்த இடம். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட இடமாக இருக்கிறது. நீர்நிலை மேல இந்த இடத்தை அமைத்துள்ளனர்.
#04 லேக் ஓரோவில் ஹவுஸ்போட்ஸ்
லேக் ஓரோவில் ஹவுஸ்போட்ஸ், இடம்: யுபு கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்கா
நங்கூரமிட்டிருக்கும் படகு இல்லங்கள் இது. கடந்த நான்கு வருடங்களாக வறட்சி நிலவுவதால். இங்கே இருக்கும் படகு இல்லங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இப்பகுதியின் அருகேயும் பல படகு இல்லங்கள் இருக்கின்றன.
#03 மராப் அல் தஃப்ரா
மராப் அல் தஃப்ரா, இடம்: அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
இங்கே ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலகின் அதிக வெப்பம் பதிவாகும் இடமாக இருக்கிறது. இங்கே சாதாரணமாக 49.2 டிகிரி வெப்பம் பதிவாகிறது. உலகின் ஹாட்டான பகுதியாக திகழ்கிறது.
#௦2 அர்லிட் யுரேனியம் மைன்
அர்லிட் யுரேனியம் மைன், இடம்: ஆர்லிட், நைஜர்.
இது பிரெஞ்சு அணு ஆயுத சோதனை மையமாகவும் இருக்கிறது. இங்கே வருடத்திற்கு 3,400 டன் யூரேனியம் பிரித்தெடுக்கிறார்கள்.
#௦1 மோவாப் பொட்டாஷ் குட்டை
மோவாப் பொட்டாஷ் ஆவியாக்கம் குட்டைகள், இடம்: மோவாப், யூட்டா, அமெரிக்கா.
அமெரிக்காவில் இருக்கும் குட்டை. இங்கே ஒரு பொட்டாஷ் சுரங்கமும் இருக்கிறது. வருடத்தின் 300 நாட்களும் நீர் ஆவியாகி, பொட்டாஷ் உப்பு கிறிஸ்டல் போல உருவாகிறது.