பிக் பாஸை தொடரும் சூப்பர் பாஸ் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மறுபடியும் பிக்பாஸா என்று கடந்து விடாதீர்கள். பிக் பாஸை தீவிரமாக கவனிக்கும் சூப்பர் பாஸ் பற்றிய கதை இது! ஓவியா மற்றும் ஜூலி பிக் பாஸ் வீட்டை விட்டு நீங்கியதும், பிக் பாஸ் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

என்ன தான் தாங்கள் எதிர்பார்க்கும் சுவாரஸ்யம் கிடைக்காவிட்டாலும் சிலர் பிக் பாஸை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் யார் என்ன காரணத்திற்காக பிக் பாஸை தொடர்கிறார்கள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓவியா விசிறி :

ஓவியா விசிறி :

மனம் ஒடிந்த நிலையில் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் ஓரளவு சந்தோஷமும் கொள்வார்கள். ஏனென்றால் ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்றாவது ஆரம்பித்து விடாதா என்று ஏக்கத்துடன் பார்க்கிறார்கள். அதை விட தங்கள் தலைவியைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஓவியா இல்லாததை அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய தொடர்ந்து பார்க்கிறார்கள்.

பொழுது போக்க :

பொழுது போக்க :

இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த காரணங்களும் இருக்காது. பொழுது போக்க... ஒரு சுவாரஸ்யத்திற்க்காக இதனை பார்ப்பார்கள். துவங்கிய பழக்கத்தை கைவிட முடியாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

ஜூலி :

ஜூலி :

சைலண்ட் கில்லர் மாதிரியான மறைமுக ஜூலி ரசிகர்களாக இருப்பவர்கள் இவர்கள். ஜூலியை வெறுப்பது போல ஆதரிப்பவர்கள் குறும்படத்தை காட்டி ஜூலி செய்த எதாவது ஒரு தவறை பிக் பாஸ் வெளிப்படுத்தமாட்டாரா என்று காத்திருப்பவர்கள்.

பொய்களையும், புறம் பேசுவதையும் எப்படியெல்லாம் கச்சிதமாக காய் நகர்த்தினார் என்பதை வீட்டில் உள்ளவர்கள் உணர்கிறார்களா என்று அறியவும் இவர்கள் தொடர்கிறார்கள்.

அண்டப்புழுகு ஆகாசப்புழுகு :

அண்டப்புழுகு ஆகாசப்புழுகு :

ஒரு விஷயத்திற்கு அதிக கிரேஸ் இருக்கிறதென்றால் அதன் மீதான விமர்சனம் தனக்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறவர்கள். பிக் பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா எல்லாம் வேஸ்ட் ஸ்க்ரிப்டட் ... சுவாரஸ்யமே இல்ல என்று நம்மிடம் சொல்லிவிட்டு பின்னால் ஹாட்ஸ்டாரில் பார்ப்பது வழக்கம்.

 நீதிபதி ஐயா :

நீதிபதி ஐயா :

பலரும் செய்கின்ற வேலை இது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் நம்மோடு பயணிக்கும் ஒரு நபருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது. ஒவ்வொரு சூழலைப் பற்றியும், ஒவ்வொருவர் செய்கின்ற செயலையும் விமர்சிப்பது. கோபப்பட்டால் காய்த்திரி மாதிரி பண்ணாத என்பதும் அழுதால் இந்தா... ஜூலி வந்துட்டாளா என்று கிண்டலடிப்பதும் இவர்களது பாணி. யார் சரி யார் தவறு என்று ஒரு கருத்தை சொல்வதற்க்காகவே தொடர்கிறார்கள்.

சீரியல் லவ்வர் :

சீரியல் லவ்வர் :

இன்னொருவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பவர்கள். அதுவும் கொஞ்சம் ரியாலிட்டி என்ற மாயை வேறு இருப்பதால் பிக் பாஸை தொடர்ந்து தொடர்கிறார்கள்.

பார்வை :

பார்வை :

பார்வையாளன். பார்ப்பான், ரசிப்பான் அங்கேயே விட்டுச் சென்றுவிடுவான். இவன் பார்ப்பதை மனதில் ஏற்றி சரியெது தப்பெது என்று பிரித்து நிரூபித்துக் கொண்டிருக்க மாட்டான். டிவியில் பிக் பாஸ் பார்த்துக்கொண்டே பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் எல்லாம் போட மாட்டான். பொழுது போக்கு நிகழ்ச்சியை பொழுது போக்காக மட்டுமே அணுகுவது இவனது பாணி...

சும்மா டைம் பாஸுக்கு என்று சொல்லி தொடர்ந்து பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருப்பான். சரி, இதில் நீங்கள் எந்த வகை?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Are You watching still bigg boss?

Are You watching still bigg boss?
Story first published: Friday, August 11, 2017, 15:10 [IST]