Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
பாகுபலி ஸ்டார் நடிகர் பிரபாஸ் பற்றி பலரும் அறியாத 15 உண்மைகள்!
தெலுங்கு சினிமா டார்லிங்காக இருந்து, உலகின் பாகுபலி ஸ்டாராக உருவெடுத்து இருக்கும் பிரபாஸ் பற்றிய 15 உண்மைகள்!
தெலுங்கு சினிமா டார்லிங்காக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி முதல் பாகத்தின் வெளியீட்டுக்கு பிறகு தென்னிந்தியாவின் டார்லிங் ஆனார். பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவின் டார்லிங் நடிகராக உருமாறி இருக்கிறார். ஒரே படத்தின் வெற்றியின் மூலம் 30 கோடி ஊதியம் பெரும் நடிகராக மாறியுள்ளார்.
இவ்வாளவு பெரிய தொகை ஊதியமாக இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, நடிகர் பிரபாஸ் பற்றி பலரும் அறியாத சில உண்மைகளை இங்கு காணலாம்...

#1
நடிகர் பிரபாஸின் முழு பெயர் வெங்கட சத்யநாராயண பிரபாஸ் ராஜு உப்பலபத்தி!

#2
பிரபுதேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருப்பார் பிரபாஸ்.

#3
பாங்காக்கில் உள்ள மேடமே துஷாட்ஸ் எனும் வேக்ஸ் சிலை மியூசியத்தில் இடம்பெற்ற ஒரே தென்னிந்தியா நடிகர் பிரபாஸ் தான். இவரது பாகுபலி உருவ பொம்மை அங்கு நிறுவப்பட்டுள்ளது.

#4
பிரபாஸின் தந்தை சூர்யநாராயணா ராஜு ஒரு தயாரிப்பாளர். இவரது மாமா கிருஷ்ணம் ராஜு டோலிவுட் நடிகர்.

#5
ஆரம்பத்தில் நடிகர் பிரபாஸ், ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஆகவேண்டும் என்று தான் விரும்பினார். எதிர்பாராத விதமாக தான் இவர் நடிக்க வந்தார்.

#6
பிரபாசுக்கு பட்டர் சிக்கன், சிக்கன் பிரியாணி என்றால் மிகவும் பிரியம். ஒருவேளை இதற்காக தான் ஹோட்டல் உரிமையாளர் ஆக நினைத்தாரோ...?!!?

#7
பிரபாஸ் இந்தியாவின் முன்னணி இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் தீவிர ரசிகர். 3 இடியட்ஸ், முன்னா பாய் எம்.பி.பி.எஸ் போன்ற படங்களை 20 தடவைகளுக்கும் மேலாக பார்த்துள்ளாராம்.

#8
பாகுபலி நடிக்க கதை கேட்டு ஒப்புக்கொண்ட நாள் முதல், பிரபாஸ் வேறு எந்த கதைகளையும் கேட்கவும் இல்லை, நடிக்கவும் முற்படவில்லை என கூறப்படுகிறது. தனக்கு என்ன சம்பளம் என்று கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

#9
பாகுபலி தோற்றத்திற்காக உழைக்க, தனது வீட்டில் ஒரு வாலிபால் கோர்ட் கட்டி இருந்தார் பிரபாஸ்.

#10
தனது உடல் எடையில் இருந்து முப்பது கிலோ அதிகம் ஏற்றினார். இதனால் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் பெரும் அழுத்தத்திற்கு ஆளானார் பிரபாஸ். நான்கு வருடங்கள் தான் தாண்டி வந்த கஷ்டங்களை அவர் பெரிதாக யாரிடமும் கூறவில்லை.

#11
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவை தான் தனது ரோல் மடலாக பார்க்கிறார், மிகவும் விரும்புகிறார் நடிகர் பிரபாஸ்.

#12
தனது திருமணத்தை பாகுபலி படத்திற்காக தள்ளி வைத்திருந்தார். இந்த நான்கு வருடங்களில் இவருக்கு 6000 வரன்கள் வந்து குவிந்தனவாம். ஆனால், யாரையும் தேர்வு செய்யவில்லை பிரபாஸ். இடையே 23 வயது பொறியியல் மாணவியை தான் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள போகிறார் என புரளிகளும் வந்தன.

#13
பாகுபலி மொத்த ஷூட்டிங் முடித்த கையோடு ஐரோப்பிய சுற்றுலா சென்று விட்டனர்.

#14
பாகுபலி நடித்துக் கொண்டிருக்கும் போதும், இப்போது நடித்து முடித்த பிறகும் என தனக்கு வந்த பல கோடி விளம்பர நடிப்பு வாய்ப்புகளை உதறி தள்ளியுள்ளார் பிரபாஸ். பாகுபலி ஸ்பான்சர் விளம்பரங்களில் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் தோன்றி வருகிறார்.

#15
பாகுபலி முதல் பாகம் வெற்றி பெற்ற பிறகும், பாகுபலி இரண்டாம் பாகம் நடித்துக் கொண்டிருந்த போது பல தயாரிப்பாளர்கள் இவரை, இவரது மேனேஜரை அணுகி பல கொடிகள் சம்பளமாக கொடுத்து படங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால், பிரபாஸ் எந்த வாய்ப்பிற்கும் செவி சாய்க்க வில்லை.



Click it and Unblock the Notifications