For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018ஆம் ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?

பிறக்கப்போகும் புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் தெரியுமா?

|

இன்னும் இரண்டு வாரங்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. 'விளம்பி'ஆண்டாக வரக்கூடிய இந்த 2018 ஆம் ஆண்டு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் மட்டுமல்ல உங்களுக்கு வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்களை கொடுக்கப்போகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையின் முக்கிய சமாசாரங்களான படிப்பு, பணம், ஆரோக்கியம், வேலை, கல்யாணம், உறவு, நட்பு, குடும்பம், கேளிக்கை ஆகியவற்றை இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

கிட்டத்தட்ட அனைத்து பலன்களும் நல்லதாகவே இருக்கும். சனி 9ஆம் வீடு தனுசில், குரு 7ஆம் வீடு துலாமில், ராகு 4ஆம் வீடு கடகத்தில், கேது 10ஆம் வீடு மகரத்தில் உள்ளன.

ராசி அதிபதி செவ்வாய் வருடத்தின் மத்தியில் ஆரம்பித்து இறுதி வரைக்கும் 10ஆம் வீடு மகரத்தில் கேதுவுடன் இருக்கிறார். இது உச்ச வீடு என்பதால் எல்லா கவனமும் செய்யும் வேலையில் முன்னேறுவதில் இருப்பீர்கள். வருடத்தை உற்சாகத்துடன் ஆரம்பிப்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு.

வாழ்க்கை துணையுடன் நெருக்கம் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குறைவாக இருக்க காண்பீர்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்னையாகலாம்.

ரிஷபம் :

ரிஷபம் :

இந்த வருடம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கும். சனி 8ஆம் வீடு தனுசில், குரு 6ஆம் வீடு துலாமில், ராகு 3ஆம் வீடு கடகத்தில் மற்றும் கேது 9ஆம் வீடு மகரத்தில் சஞ்சாரம் செய்கின்றனர்.

அஷ்டம சனியின் பிடியில் வருடம் முழுவதும் இருக்கிறீர்கள். குரு வருட இறுதியில் 6ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு விருச்சிகத்திற்கு மாறும் போது உங்கள் நிலைமை பெரிதளவில் சரியாகும். ராகுவின் வலுவான பார்வையினால் எந்த வித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பீர்கள்.

வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகள் இருக்கும். வியாபாரிகள் பண சம்பந்தமான எந்த விஷயமும் பல முறை யோசித்து செய்தால் நல்லது. புதிய கூட்டோ அல்லது முதலீடோ வருட இறுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் வரலாம்.

மிதுனம் :

மிதுனம் :

பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கினாலும் சமயோஜித அறிவையும் நேர்மறை சிந்தனையையும் பிரயோகித்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சனி 7ஆம் வீட்டில், குரு 5ஆம் வீட்டில், ராகு 2ஆம் வீட்டில் மற்றும் கேது 8ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள்.

உங்கள் வாய் வார்த்தைகளினால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிற்சில விஷயங்களில் சண்டை சச்சரவுகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள். முதலில் மண-வாழ்க்கை பிரமாதமாக இருந்தாலும், வருட இறுதியில் சிறு வேறுபாடுகள் தலைதூக்கலாம். பாடுபட்டு உழைத்த பணம் விரயமாகும்.

கடகம் :

கடகம் :

2018 ஆம் ஆண்டு நிறைய சவால்களும் சில புதிய திருப்பங்களும் கொண்டு வரும். சனி 6ஆம் வீட்டில், குரு 4ஆம் வீட்டில், ராகு ஜென்மத்தில் மற்றும் கேது 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள்.

மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்கும். வீட்டில், குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஆனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிறிய பிரச்னையானாலும் உடனே தீர்வு காண முயலுங்கள்.

சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வேலை செய்யும் இடத்தில் விடா முயற்சியுடன் வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

சிம்மம் :

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு இது ஒரு பிரமாதமான வருடம். குரு 3ஆம் வீட்டில், சனி 5இல், கேது 6இல் மற்றும் ராகு 12இல் கோச்சாரம் செய்கின்றன. புனித யாத்திரையும் மேற்கொள்ளலாம். கூட பிறந்தோர் மற்றும் நண்பர்களின் உதவி, ஆதரவு உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.

காதல் சம்பந்தங்களில் சில இன்பமான அனுபவங்களுடன் சிற்சில சிக்கல்களும் வரலாம். ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும். வாழ்க்கை துணையுடன் சந்தோஷத்துடன் இருப்பீர்கள், இருந்தாலும் வருட மத்தியில் அனாவசிய பிரச்னைகளை பெரிது படுத்தாமல் தீர்வு காண முயலுங்கள்.

செய்யும் வேலையில் கடுமையாக போட்டி இருந்தாலும், அயரா உழைப்புடன் காரியத்தில் இறங்கி, வேலையை செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் வருடத்தின் இறுதியில் இருக்கிறது. அதற்குமுன் முயற்சி எடுக்காதீர்கள், வீண் அலைச்சலும் பண விரயமும் தான் மிஞ்சும்.

கன்னி :

கன்னி :

உங்களுக்கு அவ்வப்பொழுது வரும் அற்பமான பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். குரு 2இல், சனி 4இல், கேது 5இல் மற்றும் ராகு 11இல் சஞ்சாரம் செய்கிறார்கள். வாய்ப்புகள் ஏராளமாக வரும், சாதனையும் நிறைய செய்வீர்கள். இந்த வருடம் தன லாபத்தை குறிக்கிறது.

உங்கள் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் உங்களுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும். செய்யும் வேலையில் வேகமாக முன்னேறுவீர்கள். சமுகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் வருவார்கள், மற்றும் புதிய தொடர்புகள் உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் முயற்சியில் முழு மூச்சுடன் சிலர் இறங்குவார்கள்.

இந்த மாதிரி விஷயங்களுக்கு இது உகந்த சமயம். குழந்தைகள், குறிப்பாக அவர்கள் படிப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்த விஷயங்களில், ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

துலாம் :

துலாம் :

உங்கள் விருப்பம்படி சில விஷயங்கள் உருவாகவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை குறிக்கிறது. வருடத்தை ஒரு புத்துணர்ச்சியுடன் ஆரம்பிப்பீர்கள்.

ஆனால் கூடவே ஒரு ஆக்ரோஷமும் கலந்து இருக்கும். உங்கள் வற்புறுத்தலும், வலியுறுத்தலும் சில சமயங்களில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் உருவெடுக்கும்.

தக்க சமயத்தில் நிலைமை கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். இருந்தாலும், உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் உங்கள் மனம் லயிக்காது. செய்யும் வேலையில் மாற்றங்கள் திடீரென வரும், நீங்களும் உங்கள் படைப்பாற்றல், உத்வேகம் மூலம் பல விதமான சவால்களை கையாள்வீர்கள்.

குழந்தைகள் தங்கள் படிப்பிலோ, வேலையிலோ பிரமாதமாக பிரகாசிப்பார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான காலம் இது.

விருச்சிகம் :

விருச்சிகம் :

இந்த ஆண்டு உங்களுக்கு கெடு பலன்கள் அதிகம். சனி 2ஆம் வீட்டில், கேது 3இல், ராகு 9இல் மற்றும் குரு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. பண தட்டுப்பாடு, வீண் விரையம், தன நாசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும்.

நீங்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நிகழ்வுகள் நடக்காதலால் ஏமாற்றம் கலந்த கோவம் உங்களுக்குள் நிறைய இருக்கும்.

எந்த விஷயத்திலும் நிதானம் உங்களுக்கு நன்மை தரும். வெளிநாட்டு கல்வி விரும்புகிற மாணவர்களுக்கு இது ஒரு அனுகூலமான நேரம். படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளவும்.

தனுசு :

தனுசு :

ஜென்மத்தில் சனி, 2இல் கேது, 8இல் ராகு மற்றும் 11ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்.

பண வரவு இருந்து கொண்டே இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட வருவாய் ஆதாரங்கள் உள்ளன. கடினமாக உழைக்கவும் செய்வீர்கள்.

அளவுக்கு அதிகமாக எதுவும் நல்லதில்லை. ஆதலால் அதிகமாக வேலைப்பளு எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய விஷயங்களை புறக்கணிக்காதீர்கள்.

உங்கள் அணுகுமுறை மற்றும் பேசும் தோரணையினால் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்னைகள் உருவாகலாம்.

வேலை செய்யும் பரபரப்பில் உங்கள் உடல் நலத்தின் மேல் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வருட முடிவில் இது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். தொழில்-நுட்ப-ரீதியாக படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலம்.

அவ்வப்போது வரும் இடையூறுகளை கவனித்து கொண்டீர்களானால், உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

மகரம் :

மகரம் :

இந்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்த பல விதமான அனுபவங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். சனி 12இல், கேது ஜென்மத்தில், ராகு 7இல் மற்றும் குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன.

உடல் ஆரோக்கியக்குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் உங்களுக்கு பல விதத்தில் ஆதாயம் கிடைக்க இருக்கிறது.

வேலை செய்யும் இடத்தில் உங்கள் அதிகாரம் ஓங்கும், ஆனால் அது உங்களை சர்சையிலோ, விவாதத்திலோ கொண்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுய முன்னேற்றத்திற்கு ரொம்பவே நல்ல வருடம் இது.

கும்பம் :

கும்பம் :

இந்த வருடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்தது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் உங்களுக்கு பிரமாதமாய் முடியும்.

பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் உங்கள் கவனம் முழுவதும் செலுத்துவீர்கள். வெகு தூர பிரயாணம் உங்களுக்கு சாதகமாக முடியும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பீர்கள்.

ஆன்மீகம் உட்பட, எல்லா விஷயத்திலும் ஆர்வம் காண்பிப்பீர்கள். மேல் அதிகாரிகள் இடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள்.

குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாய் முன்னேறுவார்கள். காதலர்கள் ஆரம்பத்தில் சிரமங்களை சந்தித்தாலும், புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள்.

எதிர்ப்புகளும், தடைகளும் உங்களை அசைக்க முடியாது. சகல சுகத்தையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வீர்கள்.

மீனம் :

மீனம் :

சோதனைகளும் சாதனைகளும் கலந்த வருடம் இந்த 2018. சனி 10இல், கேது, 11இல், ராகு 5இல் மற்றும் குரு 8இல் சஞ்சரிக்கிறார்கள். வருடம் முழுவதும் உங்கள் உடல் நலனிலும், ஆரோகியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். செய்யும் வேலையில் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும், ஒரு வெறியில் கார்யம் செய்வீர்கள்.

இதன் விளைவு, உங்கள் உடல் அசௌகர்யப்படலாம் மற்றும் அந்தரங்க வாழ்க்கை குலையலாம். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் கடுமையான உழைப்பை எதிர்பார்க்கலாம்.

வருட இறுதியில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்கள் வரும். அதுவரைக்கும் நிலமையையம், பிரச்னைகளையும் சமாளியுங்கள். பண வரவு சீராக இருக்கும். வேண்டாத அலைச்சலை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse astrology
English summary

2018 is Going to be Lucky For This Zodiac Signs

2018 is Going to be Lucky For This Zodiac Signs
Story first published: Tuesday, December 12, 2017, 11:35 [IST]
Desktop Bottom Promotion