மூக்கு பொடப்பா இருந்தா, இப்படி எல்லாம் கண்டுபுடிக்க தோணும் போல...

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பலர் எண்ணற்ற முயற்சிகள், பல தோல்விகள், அவமானத்தால் நிறைந்த வலிகள் போன்றவற்றை கடந்து பல கண்டுபிடிப்புகள் உருவாக்கி, அதன் மூலம் எண்ணற்ற பலன்கள் அடைய செய்து வரலாற்றில் மறையாத இடம் பிடித்துள்ளனர்.

எடிசனில் துவங்கி, ஸ்டீவ் ஜாப்ஸ் வரை இந்த பட்டியலில் பல நூற்றுக்கணக்கான நபர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆனால், இதற்கு நேர் எதிர்மறையாக, ஏன், எதற்கு, இது பயன்படுமா, எதிர்கால சந்ததியினர் இந்த கண்டுபிடிப்பை பற்றி என்ன நினைப்பார்கள், என்றெல்லாம் கருதாமல் சில கருவிகளை சில அதிமேதாவி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றின் தொகுப்பு தான் இங்கே காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி மேக்கர்!

காபி மேக்கர்!

இப்போது வெளியாகும் அதிநவீன கார்களில் கூட இந்த ஃபீச்சர் நீங்க பார்க்க முடியாது. ஆனால், அந்த காலத்தில் ஒரு அதி புத்திசாலி விஞ்ஞானி. கார் ஓட்டும் போது உறங்கி விபத்து ஏற்பட்டுவிட கூடாது என இந்த அற்புத கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். ஆம்! ஓட்டுனர் இருக்காய் அருகையிலேயே காபி மேக்கர் மெஷின்!

Image Credit

செயின் ஸ்மோக்கர்...

செயின் ஸ்மோக்கர்...

செயின் ஸ்மோக்கர் என்பதை தவறாக புரிந்துக் கொண்ட நபரால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் இது. எவ்வளவு பெரிய சிகரட் அடிக்டாக இருந்தாலும், இந்த பொருளை உபயோகப்படுத்த கொஞ்சம் தடுமாறுவார். பல சிகரட்டுகளை ஒரே ஹோல்டரில் வைத்து புகைக்க உதவும் கருவி.

Image Credit

பாலிஷ்!

பாலிஷ்!

சொட்டை விழுந்த இடம் பளபளப்பாக இருக்க இந்த ஹேர்லைன் பிரஷ் கண்டுபிடித்துள்ளனர். இதை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் 1950-களில் வாழ்ந்த வழுக்கை விழுந்த ஆண்கள் இந்த வழுக்கை பாலிஷ்ர் மற்றும் மஸாஜர் பிரஷை பயன்படுத்தியுள்ளனர்.

Image Credit

ரோபாட்!

ரோபாட்!

இந்த ரோபாட் எதற்கு கண்டுபிடித்தார்கள் என்றே தெரியவில்லை. போன் கால்களுக்கு பதில் அளிக்கும் என கூறி கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபாட், பதில் எல்லாம் கூறாது. டெலிபோன் அருகே நிற்க வைத்தால், ரீசிவரை எடுத்து, மீண்டும் கீழே வைக்கும். நீங்கள் சரியாக அதன் அருகே சென்று நின்றால் அப்படியே பதில் கூறிவிடலாம். (எதுக்கு!!!!)

Image Credit

சூப்!

சூப்!

இதெல்லாம் கண்டுபிடிச்ச விஞ்ஞானிய தேடி கண்டுபிடிக்கனும். சூப் சூடாக இருக்கும். ஆகையால், அதை ஊதி, ஆறவைத்து குடிக்க, சூப் ஸ்பூனுடன் ஒரு கூலிங் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளது. இது சூப்பை ஆற செய்துவிடும். பிறகு, நீங்கள சூப்பை சூப்பராக குடிக்கலாம். (எப்பூடி)

Image Credit

நாகரீகமாக...

நாகரீகமாக...

1955ல் கண்டுபிடிக்கப்பட்டது இந்த மெஷின். அதாவது, வாய் திறந்து டிப்ஸ் என்று கேட்காமல், இடுப்பில் இதை கட்டிக் கொள்ள வேண்டும். இந்த கருவியின் பின் புறத்தில் செயற்கை கை இருக்கும். அதில் ஒரு ஓட்டை இருக்கும். அது கை நீட்டி டிப்ஸ் கேட்பது போல அமைந்திருக்கும். உணவு உண்டவர்கள் மனம் விரும்பி அதன் கையில் காசு வைத்தல், அந்த கையில் இருக்கும் ஓட்டை வழியாக, அது சர்வரின் சைடில் இருக்கும் காசு சேமிக்கும் பையில் விழுந்துவிடும்.

Image Credit

விண்டோ!

விண்டோ!

குழந்தைக்கு ஜன்னல் அருகில் உட்கார வைத்து வேடிக்கை காண்பிக்கலாம். ஆனால், அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர்களுக்கு இது சிரமம் என்பதால், ஜன்னலுக்கு வெளியே தொங்கும் படியான ஜன்னல் கூடை என்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதை யார் கண்டுபிடித்தார் என்ற குறிப்பு தான் கிடைக்கவில்லை.

Image Credit

ஸ்பெஷல் ஒருகாலி (நாற்காலி)

ஸ்பெஷல் ஒருகாலி (நாற்காலி)

நான்கு கால்கள் இருந்தால் நாற்காலி என கூறலாம். இதற்கு ஒரு கால் தான் இருக்கு அதனால், ஒருகாலி தான். கொஞ்சம் மாற்றி உச்சரித்தல் ஏடாகூடமாகிவிடும். சரி விடுங்கள்! நாமளும் ஒரு ஜீனியஸ இருந்துட்டு போவோம்.

எங்கேனும் வெளியிடங்களுக்கு சென்றால் பலரும் இந்த தொல்லைக்கு ஆளாவார்கள். முக்கியமாக கல்யாண விழாக்களில். அதாங்க உட்கார நாற்காலி கிடைக்காது. அது போன்ற நேரங்களில் நீங்கள் இந்த ஒருகாலியை வைத்திருந்தால், நீங்களாக அண்டு கொடுத்து உட்கார்ந்துக் கொள்ளலாம்.

Image Credit

வைப்ரேட்டிங் பிரா!

வைப்ரேட்டிங் பிரா!

இதை முதன் முதலில் 1971ல் ஒரு சர்வதேச கண்டுபிடிப்பு விழாவில் அறிமுகப்படுத்தினர். இது ஏதோ செக்ஸ் பொம்மை என்று கருதிவிட வேண்டாம். இது வைப்ரேட்டிங் பிரா. இதை பயன்படுத்தினால் பெண்களின் மார்பகத்தை சரியான வடிவத்திற்கு கொண்டு வரலாம் என கருதியுள்ளனர்.

Image Credit

டூஸம்!

டூஸம்!

த்ரீஸம் தெரியும், அதென்ன டூஸம்..? ஆம்! இரண்டு பேர் சேர்ந்து ஒன்றாக சிகரட் பைப் குடிக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அரியவகை கருவி தான் இந்த டூஸம். இதன் மூலமாக லிப்லாக் கொடுத்துக் கொள்வது போல, இரண்டு ஆண்கள் சேர்ந்து சிகரட் பைப் பிடிக்கலாம்.

Image Credit

பவர் மோட்டார்!

பவர் மோட்டார்!

இது ஒரு பவர் மோட்டார். இதை கடந்த 1957ல் கண்டுபிடித்தனர். அதாவது, மழை வரும் போதும் இதை இயக்கலாம். உட்காரும் நபருக்கு மேலே ஒரு கண்ணாடி கூண்டும் இருக்கிறது.

Image Credit

ராக்கெட் சைக்கிள்!

ராக்கெட் சைக்கிள்!

ஜெர்மன் என்ஜினியர் ஒருவரால் 1931ல் கண்டுபிடிக்கப்பட்ட கருவி இது. அவர் பெயர் ரிச்சர். நீங்கள் மிக ஆச்சரியமாக கேட்கலாம், ஏன் இந்த கண்டுபிடிப்பு 21ம் நூற்றாண்டில் இடம்பிடிக்கவில்லை. காரணம், இது வெடித்து சிதறிவிட்டது.

Image Credit

கிளாமர் குழாய்!

கிளாமர் குழாய்!

அழகாவது இவ்வளவு எளிது என யாரும் கூறிடவில்லை. ஆம், இந்த பிளாஸ்டிக் மூடியை மூடிக் கொண்டு அதன் மூலம் வரும் காற்றை இழுத்துக் கொண்டால் அழகாகிவிவடலாம். இந்த அற்புத கருவியின் பெயர் கிளாமர் குழாய். (ஒரு கோடிப்பு... இந்த பாதி பிஞ்ச குழாயும், அந்த ரப்பர் டியூப்பும்...)

Image Credit

குடும்பத்திற்கான சைக்கிள்!

குடும்பத்திற்கான சைக்கிள்!

சிக்கனமான குடும்பத்திற்கு இந்த சைக்கிள். ஒரே சைக்கிளில் சொகுசாக நால்வர் செல்லலாம். அதிலும், தெரு, தெருவாக... பட்டன் வெச்சது, வெக்காதது... என தையல் வியாபாரம் செய்துக் கொண்டே போகலாம்.

Image Credit

ஜெட் பேக்!

ஜெட் பேக்!

ராபர் கவுசர் என்பவரை தான் இந்த படத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். விர்ஜினியாவில் இவர் ஜெட் பேக் பரிசோதனையில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்தை 1969 ஜூன்'ல் எடுத்துள்ளனர்.

Image Credit

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Useless Inventions That Are Work Of 'Pure' Genius!

15 Useless Inventions That Are Work Of 'Pure' Genius!
Subscribe Newsletter