For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கால்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Maha
|

நாம் இதுவரை கைவிரல்கள், கைரேகைகள், கண்கள், நகங்கள், மூக்கு, முகத்தின் வடிவம் போன்றவற்றைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் கால் பாதங்களின் வடிவம், கால்விரல்களின் நீளம் போன்றவை வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாடும் ஒருவரின் குணாதிசயங்களை சொல்கிறது.

உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!

இக்கட்டுரையில் கால்களின் அளவு, கால்விரல்களின் நீளம் போன்றவை ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த நிறத்தைக் கொண்டே உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரந்த பாதம்

பரந்த பாதம்

பரந்த பாதங்களைக் கொண்டவர்கள் மிகவும் சுறுசுறுப்புடனும், எப்போதும் பிஸியாகவும் இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு நடப்பது என்பது மிகவும் பிடிக்கும், மேலும் இவர்கள் பெரும்பாலும் நின்றவாறே வேலையை செய்வார்கள்.

குறுகிய பாதம்

குறுகிய பாதம்

குறுகிய பாதங்களைக் கொண்டவர்களின் உடலில் சோம்பேறித்தனம் அதிகம் இருக்கும். இவர்கள் தேவையில்லாமல் எதிலும் ஈடுபடமாட்டார்கள். மேலும் கடின உழைப்பை இவர்கள் விரும்பமாட்டார்கள்.

வளைவுகளின் உயரம்

வளைவுகளின் உயரம்

குறைந்த வளைவு கொண்டவர்கள், எப்போதும் மற்றவர்களை சார்ந்து வாழ்வதோடு, எந்த ஒரு செயலை செய்யும் முன்னும் மற்றவர்களின் அனுமதியை நாடுவார்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும் தனிமையை விரும்பமாட்டார்கள்.

பெரிய வளைவுகளைக் கொண்டவர்கள், மற்றவர்களின் கருத்துக்களை கேட்கமாட்டார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் மற்றும் வெளிப்படையாக எதையும் பேசாமல் தன்னுள் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தனிமையை விரும்புவார்கள்.

கட்டைவிரல் நீளம்

கட்டைவிரல் நீளம்

கால் கட்டைவிரல் மற்ற விரல்களை விட நீளமாக இருந்தால், அவர்கள் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பதோடு, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண நினைப்பார்கள்.

இரண்டாம் விரல்

இரண்டாம் விரல்

கட்டைவிரலுக்கு அருகில் உள்ள இரண்டாம் விரல் நீளமாக இருப்பவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், பேச்சுத்திறமை மிக்கவுர்கள் மற்றும் பாதகமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருப்பார்கள். ஒருவேளை இரண்டாம் விரல் சிறியதாக இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பார்கள். அதாவது இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.

நடுவிரல்

நடுவிரல்

நீளமான நடுவிரலைக் கொண்டவர்கள் வணிகத் தீர்வுகள் என்று வரும் போது வலிமையானவராக இருப்பார்கள். மேலும் இவர்களிடம் எந்த ஒரு கேள்விக்கும் பதில் இருக்கும். மொத்தத்தில் தைரியசாலி. ஒருவேளை நடுவிரல் சிறியதாக இருந்தால், இவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இவர்களால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியாக தீர்வு காண முடியாது.

நான்காம் விரல்

நான்காம் விரல்

நான்காம் விரல் குடும்பத்தைக் குறிக்கும். அதாவது நான்காம் விரல் நீளமாக இருந்தால், அவர்கள் உறவினர்களுடன் நன்கு நெருக்கமாக இருப்பதோடு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள். அதுவே நான்காம் விரல் சிறியதாக இருந்தால், இத்தகையவர்கள் குடும்பத்தை சார்ந்து இருக்கமாட்டார்கள்.

கடைசி விரல்

கடைசி விரல்

கடைசி விரல் அனைவருக்குமே சிறியதாகத் தான் இருக்கும். பெரும்பாலானோரால் கடைசி விரலை தனியாக அசைக்க முடியாது. ஒருவேளை அப்படி தனியாக அசைக்க முடிந்தவராயின், நீங்கள் மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Foot Says About Your Personality

Here you can find out which characteristics can be revealed based on the size of your feet and shape and length of your toes.
Desktop Bottom Promotion