உலகில் உள்ள சில விசித்திரமான பருவமடைதல் சார்ந்த சடங்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு பெண் பருவமடைந்திருந்தால், விருந்தினர்களை அழைத்து ஓர் நிகழ்ச்சி வைத்து கொண்டாடும் பழக்கம் அக்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இச்செயல் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் வேறுசில பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள சில வினோதமான உடலுறவு சார்ந்த சடங்குகள்!!

ஆனால் சில பகுதியில் பருவமடைதல் சார்ந்த சடங்குகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இங்கு அப்படி உலகில் உள்ள சில விசித்திரமான பருவமடைதல் சார்ந்த சடங்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றளவும் உலகில் பின்பற்றப்படும் ஐந்து வினோதமான சடங்குகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்களை கூர்மையாக்குவது

பற்களை கூர்மையாக்குவது

பாலி என்னும் பகுதியில் வாழும் மக்கள், ஒரு பெண் பருவமடைந்திருந்தால், அப்பெண்ணின் பற்களை கூர்மையாக்குவார்கள். இப்படி செய்வதால் அப்பெண்ணைச் சுற்றியுள்ள தீய சக்திகள் விலகுவதாகவும் நம்புகின்றனர். மேலும் இவர்கள் பற்கள் பேராசை, பொறாமை, குழப்பம், ஆசை, வலிமையான உணர்வுகள் மற்றும் கோபம் போன்ற மனிதனின் தீய குணங்களை கொண்டுள்ளதாகவும் நம்புகின்றனர்.

எறும்புகளை விட்டு கடிக்க விடுவது

எறும்புகளை விட்டு கடிக்க விடுவது

அமேசானில் உள்ள பழங்குயினரான Satere Mawe என்னும் மக்கள் பருவமடைந்த ஆண்களுக்கு ஒரு கையுறையில் புல்லட் எறும்புகளை நிரப்பி, அதனுள் கைகளை விட்டு 10 நிமிடம் இருக்கச் செய்வார்கள். முக்கியமாக இந்நேரத்தில் அவர்கள் எந்த ஒரு சப்தமும் கொடுக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தன் அவர் ஓர் உண்மையான ஆண்மகன் என்று நம்புகின்றனர். புல்லட் எறும்புகள் நியூரோடாக்ஸின்களைக் கொண்டது. இது கடித்தால் சாதாரண குளவி கொட்டினால் ஏற்படும் வலியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும்.

Source

மொட்டையடித்து அரை நிர்வாணமாக சுற்றி வருவது

மொட்டையடித்து அரை நிர்வாணமாக சுற்றி வருவது

கானாவின் கிழக்கு பகுதியில் ஏப்ரல் மாதத்தில் பருவமடைந்த பெண்களுக்கான சடங்கு திருவிழா போல் கொண்டாடப்படும். இதனை 'Dipo' என்று அழைப்பார்கள். ஒரு ஆணுடன் உறவில் ஈடுபடும் முன் ஒரு பெண் இந்த திருவிழாவில் பங்கு கொண்டால், நல்ல மனைவியாக இருப்பர் என்று நம்பப்படுகிறது. இந்த திருவிழாவில் மொட்டை அடித்து, அரை நிர்வாணமாக பெண்கள் இருப்பார்கள்.

Source

கோபுரத்தில் இருந்து குதிப்பது

கோபுரத்தில் இருந்து குதிப்பது

பெந்தெகொஸ்தேவில் உள்ள சிறிய தீவில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையே, 20-30 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் இருந்து, மரத்தின் கொடிகளால் ஆண்களின் கால்களைக் கட்டி குதிக்க வேண்டும். இந்த சடங்கானது ஒரு ஆணின் ஆண்மையைக் குறிக்கும். இந்த சடங்கு தான் தற்போது பங்கி ஜம்ப் விளையாட்டாக மாறியுள்ளது.

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Puberty Customs Around The World

Read on to find out how different places in the world celebrate a person’s coming of age with puberty rituals.
Subscribe Newsletter