Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
ஆட்டோ ஓட்டுனர் முதல் தேசிய விருது வரை - கலாபவன் மணி!
சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி தென்னிந்திய திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. காமெடி, நடிப்பு, குணச்சித்திரம் என ஒரு வெர்சடைல் நடிகரார சிறந்து விளங்கினார் கலாபவன் மணி.
மிமிக்ரி மூலம் சினிமா வாய்ப்பு பெற்றிருந்தாலும், திரையுலகில் நுழைந்த பிறகு காமெடி மட்டும் இல்லாமல், சிறந்த நடிப்பு, இசை, கதை எழுதுதல் என பல துறைகளில் தனது முத்திரையை பதித்தார். இவரது மறைவு உறவினர்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு சினிமா ரசிகரையும் அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. முன்னேற திறமையை தவிர வேறெதுவும் தேவையில்லை என்பதற்கு கலாபவன் மணி ஓர் சிறந்த எடுத்துக் காட்டு...

ஆரம்பக் காலக்கட்ட வாழ்க்கை
கேரளாவின் சாலக்குடி எனும் பகுதியில் 1971-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்தார் கலாபவன் மணி. சாதாரண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை கடந்து தனது திறமையால் திரையுலகில் உயர்ந்தவர் கலாபவன் மணி.

ஆட்டோ ஓட்டுனர்
சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் கலாபவன் மணி ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். ஆரம்பம் முதலே இவர் பலக்குரல்களில் பேசும் திறன் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலக்குரல் திறமை
கேரளாவில் கலாபவன் மணியின் நாடகக்குழு மிகவும் பிரபலமானதாக இருந்து வந்தது. இவர்கள் பல மேடை நிகழ்சிகள் நடத்தியுள்ளனர். பல நடிகர்களின் குரல்கள் மட்டுமின்றி விலங்குகள் போல நகைச்சுவையாக பேசுவதிலும் திறமைவாய்ந்த்து இருந்தார் கலாபவன் மணி.

திரையில் தோற்றம்
மை டியர் குட்டிச்சாத்தானில் ஆரம்பித்து, சமுதாயம், தி போர்ட்டர், அக்ஷாரம் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றினார் கலாபவன் மணி. இதன் பிறகு பல படங்களில் காமெடி வேடங்கள் ஏற்று நடித்தார் கலாபவன் மணி.

வசந்தியும், லக்ஷிமியும் பின்னே நானும்
வசந்தியும், லக்ஷிமியும் பின்னே நானும் என்ற திரைப்படம் தான் இவரது முதல் சீரியஸ் படமாக அமைந்தது. இந்த படத்திற்காக கலாபவன் மணி தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்காக கேரள மாநில விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகளும் வாங்கினர்.

ராமு
வசந்தியும், லக்ஷிமியும் பின்னே நானும் என்ற படத்தில் இவர் வேடமேற்று நடித்த ராமு கதாப்பாத்திரம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

நாட்டுப்புற பாடல்கள்
மிமிக்ரி, மேடை நாடகம், காமெடியன், நடிகன் மட்டுமின்றி, கலாபவன் மணி நாட்டுப்புற பாடல்களும் பாடியுள்ளார். இவரது முதல் இசை ஆல்பம் "Kannimanga Prayathil" என்பதாகும். மேலும், பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் கலாபவன் மணி.

இசையமைப்பாளர்
நாட்டுப்புற பாடல்கள் மட்டுமின்றி கலாபவன் மணி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். "மணி மழுகுன்னது யார்க்குவேண்டி" (Mani Mazhugunnathu Arkkuvendi), "எம்.எல்.எ மணி பத்தாம் கிளாசும் குஸ்தியும்" போன்ற இரண்டு படங்களுக்கு இவர் இசை அமைத்தார்.

கதை
"எம்.எல்.எ மணி பத்தாம் கிளாசும் குஸ்தியும்" என்ற படத்திற்கு கதை எழுதியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ ஓட்டுனர் முதல் தேசிய விருது வரை
சாதாரண ஆட்டோ ஓட்டுனராக இருந்து படிப்படியாக முன்னேறியவர் கலாபவன் மணி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில டிவி நிகழ்சிகளிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications