Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஜப்பான் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
ஜப்பான் மிகவும் அழகான மற்றும் கண்களைக் கவரும்படியான நாடு. இது ஆசிய கண்டத்தில் பல தீவுகளைக் கொண்ட ஓர் நாடு. அதுவும் சுமார் 6852 தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இதன் தலைநகரம் டோக்கியோ ஆகும்.
மேலும் உலகத்திலேயே அதிகபட்ச சராசரி வாழ்நாளைக் கொண்ட நாடும் கூட. இத்தகைய ஜாப்பானில் தான் பல கடுமையான நிலநடுக்கங்கள் வரும். எனவே இந்நாட்டில் வாழும் மக்கள் எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருக்க வேண்டியிருக்கும்.
இங்கு ஜாப்பான் குறித்து உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குதிரைக் கறி
ஜப்பானில் குதிரைக் கறி மிகவும் பிரபலமானது. இங்குள்ள மக்கள் வேக வைக்காத குதிரைக் கறியை உட்கொள்வார்கள். ஏனெனில் மற்ற இறைச்சிகளை விட குதிரைக் கறியில் புரோட்டீன் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும், லிகோலியிக் அமிகம் அதிகமாகவும் உள்ளதாம்.

பூகம்பம்
ஜப்பானில் ஒவ்வொரு ஒருடமும் 1,500 பூகம்பங்கள் வருமாம். இதற்கு ஜப்பானின் புவியியல் இடம் தான் காரணம். அதுவும் நான்கு பெரும் நிலப்பலகை தட்டுக்கு மேல் ஜப்பான் அமைந்துள்ளதால், இத்தட்டுக்களில் நகர்வு ஏற்படும் போது பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

அதிசயிக்க வைக்கும் இயந்திரங்கள்
உலகிலேயே ஜப்பானில் தான் அதிசயிக்க வைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அதுவும் எந்த ஒரு பொருளையும் காசை கையில் கொடுத்து வாங்க மாட்டார்கள். ஸ்நாக்ஸ் வகைகள், குளிர் பானங்கள், முட்டைகள், அரிசி பாக்கெட்டுகள், ஏன் பூங்கொத்துக்களும் இயந்திரங்கள் மூலம் பெறுவார்கள்.

உறிஞ்சி தான் உண்பார்கள்
ஜப்பானில் இருக்கும் அனைத்து உணவுகளும் உறிஞ்சி உண்ணும் வகையில் தான் இருக்கும். ஏனெனில் இங்கு நூடுல்ஸ்களும், சூப்புகளும் தான் அதிகம் உண்ணப்படுகிறது. அதே சமயம் இம்மாதிரி உண்பதை சமைத்தவர்கள் பாராட்டின் அடையாளமாகவும் கருதுகின்றனர்.

பேஸ் பால் பிரபலமானது
ஜப்பானின் தேசிய விளையாட்டு சுமோவாக இருந்தாலும், அங்குள்ளோர் பேஸ் பாலை தான் விரும்பி விளையாடுவார்கள்.

தற்கொலை வீதம் அதிகம்
ஜப்பானில் தற்கொலை வீதம் அதிகம். ஏனெனில் இங்கு வேலையின்மை பிரச்சனைகள் அதிகம். எனவே அங்குள்ள மக்கள் வேலை கிடைக்காதால், மன இறுக்கத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் தான் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஒரே நீரில் குடும்பமே குளிப்பது
ஜப்பானில் அனைத்து வீடுகளிலும் பாத் டப்கள் இருக்கும். இந்த குளியல் டப்பில் நீரை நிரப்பி, அந்நீரில் தான் குடும்பம் முழுவதும் குளிப்பார்களாம்.

பெயர் இல்லாத தெருக்கள்
ஜப்பானில் பெரும்பாலான தெருக்களுக்கு பெயரே இல்லையாம். மாறாக அவர்கள் ஒரு பகுதியைக் கண்டறிய ப்ளாக் எண்களைப் பயன்படுத்துவார்களாம். அதாவது ப்ளாக் 1, 2 என்று.

வயதான ஆண்களைத் தத்தெடுப்பது
பொதுவாக தம்பதிகள் குழந்தைகள் அல்லது வளர்ந்த குழந்தைகளை பல காரணங்களுக்காகத் தத்தெடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஜப்பானில் சற்று வித்தியாசமாக ஒரு நல்ல வளமான குடும்பம் வயதான ஆணைத் தத்தெடுத்துக் கொள்வார்களாம்.



Click it and Unblock the Notifications
