தேவதாசிகளை பற்றிய மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்!

இங்கு தேவதாசிகளின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும் தேவர் அடியார்கள். இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவிவிட்டது. போதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் சித்தரிக்கப்பட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழ் மரபு

தமிழ் மரபு

தேவதாசிகள் தமிழ் கலாச்சாரத்திற்கும், கலைகளுக்கும் செழுமை சேர்த்த ஓர் சமூக மரபு கொண்டிருந்தவர்கள்.

தேவதாசி

தேவதாசி

தேவதாசி என்பவர்கள் கடவுள் அல்லது கோவிலுக்காக அர்பணிக்கப்பட்ட பெண்கள் ஆவர்கள். இவர்கள் கோவில் மற்றும் கடவுளுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தானம் கொடுக்கப்பட்டவர்கள்.

தேவதாசி ஆவதற்கு சடங்கு

தேவதாசி ஆவதற்கு சடங்கு

தேவதாசியின் வாழ்க்கை என்பது ஆர்வம் நிறைந்த சுவாரஸ்யமான கதையாகும். ஒரு பெண் தேவதாசியாக வேண்டும் எனில், அவள் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் சிலவற்றின் ஊடாகப் பயணித்து வர வேண்டும் எனப்படுகிறது.

தேவதாசி ஆவதற்கு சடங்கு

தேவதாசி ஆவதற்கு சடங்கு

சடங்குகள்...

1. சடங்கு பூர்வமான திருமணம்

2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு

3. நிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்

4. அரங்கேற்றம்

5. கடமைகள் மற்றும்

6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்

கி.பி. 900

கி.பி. 900

பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.

கி.பி. 1230

கி.பி. 1230

கி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில் இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது.

மேகதூத்

மேகதூத்

தேவதாசி எனும் இந்த பெயர் முதன் முதலில் காளிதாஸ் எழுதிய மேகதூத் எனும் படைப்பில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. தேவரடியார்கள் எனும் பெயரின் பொருளானது தேவர் (இறைவன்) + அடியவர்கள் (சேவகர்கள்), அதாவது இறைவனுக்கு சேவை செய்து வந்தவர்கள் ஆகும்.

அர்ச்சகர்கள்

அர்ச்சகர்கள்

தேவதாசிகள் என்பவர்கள் சமூகத்தில் பெரும் புகழ் மற்றும் மரியாதையுடன் காணப்பட்டவர்கள். கோவில்களில் அர்ச்சகர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்கள் இவர்கள் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

சமூக சேவைகள்

சமூக சேவைகள்

தேவதாசிகள் அவர்களது கலைக்கு கிடைத்த பரிசுகளை மக்களுக்கு நல்ல சேவைகளும் செய்து வந்துள்ளனர். கால்வாய் அமைப்பது, கிராமப்புற சேவைகள் செய்வது என நல்ல வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் தான் இந்த தேவதாசிகள்.

விண்ணமங்கலம்

விண்ணமங்கலம்

விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டு தோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகிய இரண்டு தேவதாசிகள் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர்.

அன்னாடு

அன்னாடு

அன்னாடு (அ) அன்னநாடு என்ற இடத்திலும் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயே படையெடுப்பு

ஆங்கிலேயே படையெடுப்பு

சமூகத்தில் புனிதமாக காணப்பட்டு வந்த இவர்கள், ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பிறகு தான் களங்கப்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அரசர் கொடுமைகள்

அரசர் கொடுமைகள்

சில அரசர்கள் மற்றும் சாம்ராஜியத்திலும் கூட கடவுள் திருப்பணிக்காக அர்பணிக்கப்பட்ட இவர்கள், தனிப்பட்ட அரசர்கள் அல்லது பெரும் நபர்களின் இச்சைக்காக இரையாக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.

சாதிப்பிரிவுகள்

சாதிப்பிரிவுகள்

சாதி பிரிவுகள் வரத் துவங்கிய காலக்கட்டத்தில் இவர்கள் இக்காரணம் கண்டு கீழ் சாதி பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்கள் காமத்திற்காக மட்டும் காணப்படுபவர்கள் எனும் சாயம் பூசப்பட்டது.

அவச்சொல்

அவச்சொல்

கடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட இவர்கள், சிலரது இச்சை பசிக்கு இரையாகி, இப்போது இவர்களது பெயரே சமூகத்தில் ஓர் அவச்சொல்லாக மாறியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion