துர்கா பூஜை - தோற்றமும் வரலாறும் !

Posted By: Staff
Subscribe to Boldsky

இந்தியாவின் மிகவும் முக்கிய இந்துப் பண்டிகைகளில் ஒன்று துர்கா பூஜை. இந்து பஞ்சாங்கப்படி புரட்டாசி மாதத்தில் வரும் இது 10 நாட்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் மகிஷாசுரனை வாதம் செய்த சக்தியின் வடிவமான தேவி துர்கையை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்த பத்து நாட்களில் கடைசி ஆறு நாட்கள் மஹாளயம், ஷஷ்டி, மஹா சப்தமி, மஹா அஷ்டமி, மஹா நவமி மற்றும் விஜய தசமி என சிறப்பாகக் துர்கா பூஜை அல்லது துர்கோத்சவம் எனக் கொண்டாடப் படுகிறது. இது இந்திய கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு ஒரு அங்கமாக இருந்து வருகிறது என்பதோடு (குறிப்பாக வங்காளத்தில்) முதல் ஒன்பது நாட்களில் தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப் படுகின்றன. பத்தாவது நாள் விஜய தசாமியாக தீமைகளை நன்மை அழிப்பதாக கொண்டாடப் படுகிறது.

Durga Pooja Origin and History

துர்கா பூஜை இந்து மத நம்பிக்கைகளில் இருந்து பிறந்ததாகக் கருதப்படுகிறது. எய்திரிகளை அழிக்கும் தெய்வமாக, மூன்று கண்களோடு, பத்து கரங்களோடும், புனித ஆயுதங்களோடும் மற்றும் சிங்கத்தின் மீதமர்ந்தவளாகவும் உள்ள தேவி "அபய முத்திரையில்" அமர்ந்து அதாவது மகிஷாசுரனை வாதம் செய்யவந்த வீர தீர தோற்றத்தோடு வந்தவளாகப் போற்றப்படுபவள். மகிஷாசுரன் தேவர்களின் எதிரியாக விளங்கியதுடன் ஒரு பெண்ணின் கையாலேயே தான் மாளவேண்டும் என்ற வரம் பெற்றவன்.

சகல சக்திகளையும் சித்திகளையும் ஒன்றிணைத்த அந்த தேவியால் மட்டுமே அவனை வெற்றிகொள்ள முடியும் என்பதால் அவள் தலைமையில் தேவர்கள் அவனை எதிர்கொண்டனர். ராமரே ராவணன் மீது போர் தொடுக்குமுன் சக்தியை வழிபட்டதாக சரித்திரம் சொல்லுகிறது. அதன் படி முதன் முதலில் ராமர்தான் 108 நீலநிறத் தாமரைகளை சமர்ப்பித்து 108 விளக்குகளை ஏற்றி மகிஷாசுர மர்த்தினியை வணங்கினார் என்பது ஐதீகம். வரலாற்றுக் கூற்றுக்கள் படி பார்த்தால் வங்காளத்தில் 16 நூற்றாண்டு முதலே கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய காலங்களில் கூட கொண்டாடப் பட்டிருந்தாலும் 16 ஆம் நூற்றாண்டு முதல் தான் முழுவடிவம் பெற்றது.

Durga Pooja Origin and History

வரலாற்று ஆய்வாளர்கள் இதனை முதலில் தொடங்கியது யார் எனபது பற்றி பல்வேறு கூற்றுகளை முன்வைக்கிறார்கள். தாஹீர்ப்பூரின் ராஜா காங்ஷா நாராயண் இதனை தொடங்கினார் என்று சிலரும், நதியாவின் பாபானந்தா மஜூம்தார் என்று சிலரும் கூறுகின்றனர். இன்னும் சிலர் மால்டாவின் ஜமீன்தார்கள் வசந்தகால துர்கா பூஜையாக இதைத் தொடங்கினார்கள் என்றும் கூறுவதுண்டு. காலப் போக்கில் பல புதிய அம்சங்கள் தோன்றி தற்போது அது மிகப்பெரும் விழாவாக உருவெடுத்துள்ளது. உதாரணமாக 1832 ஆம் ஆண்டு ராஜா ஹரிநாத் இந்த துர்கா பூஜையை ஒரு ஒன்றிணைந்து கொண்டாடச் செய்து பின்னர் இந்த முயற்சியே வங்காளத்தின் கலாச்சாரமாக உருவெடுத்தது.

Durga Pooja Origin and History

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு இந்த கொண்டாட்டம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. இந்துக்களை மகிழ்விக்க ஆங்கிலேயர் துவக்கக் காலங்களில் இதில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர் என்றாலும் பின்னர் அதனை நிறுத்திக் கொண்டனர். எனினும், 1910 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் தங்களுடைய தலைமையகத்தை கொல்கட்டாவிலிருந்து டில்லிக்கு மாற்றியதும் வங்காள அரசு அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் முதன் முதலில் டில்லியில் துர்கா பூஜையை துவக்கினார். அவர்கள் இன்னும் மங்கள கலசத்துடன் தொடங்கும் முறையையும் தொடங்கி பின்னர் இது நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போதுதான் சீர்திருத்தவாதிகள் துர்கையை இந்தியாவோடு தொடர்புப் படுத்தி துர்கையை அதன் அடையாளமாகக் கொண்டனர். அதன் பிறகுதான் இந்த பண்டிகை நாடு முழுதும் மிகவும் பிரபலமானது. சுதந்திரத்திற்குப் பிறகு உலகில் பலபகுதிகளில் கொண்டாடப் படும் பண்டிகைகளில் ஒன்றாகவும் இது உருவானது.

English summary

Durga Pooja Origin and History

Durga Pooja Origin and History
Subscribe Newsletter