உங்களைப் பற்றி உங்கள் உதடுகள் என்ன சொல்கிறது என்று தெரியுமா?

By Maha

ஒருவரின் குணங்களை அவரது உதடுகளைக் கொண்டே சொல்ல முடியும் என்பது தெரியுமா? மேலும் இது சீனாவில் நடைமுறையில் உள்ளது. அறிவியலில் உதடுகளைக் கொண்டு ஒருவரின் குணங்களைக் கூறுவதற்கு லிப்ஸோலாஜி என்று பெயர். லிப்ஸோலாஜியின் படி, உதடுகளின் வடிவம், அளவு கொண்டு ஒருவரின் குணநலன்கள் கூறப்படுகிறது. நகத்தின் வடிவங்களும்... மனிதனின் குணநலன்களும்...

உங்களைப் பற்றி உங்கள் உதடுகள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் லிப்ஸோலாஜியில் உதடுகளின் வடிவம் என்ன குணங்களை வெளிப்படுத்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய வடிவ உதடுகள்

இதய வடிவ உதடுகள்

ஒருவருக்கு இதய வடிவ உதடுகள் இருந்தால், அவர்கள் எப்போதும் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்த விரும்புவார்கள். எதையும் மிகவும் வேகமாக யோசித்து செயல்பட்டு அனைவரையும் வசீகரிப்பார்கள். இந்த வகையினர் எதற்கும் அஞ்சாமல் செயல்படுவார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்களும் கூட.

பருத்த உதடுகள்

பருத்த உதடுகள்

பருத்த உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் தைரியமானவர்கள் மற்றும் துணிச்சலானவர்கள். மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து கவனிப்பார்கள். தாராள மனம் படைத்தவர்கள் மற்றும் எளிதாக பல நல்ல நண்பர்களைப் பெறுவார்கள்.

பரந்த உதடுகள்

பரந்த உதடுகள்

சிலருக்கு வாய் மிகவும் பெரிதாக இருக்கும். இத்தகையவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். எதையும் பரிபூரணமாக செய்ய முயல்வார்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வம் காண்பிப்பார்கள். இந்த வகையினர் வளைந்து கொடுக்கும் தன்மையினர் மற்றும் இவர்களுக்கு மிகப்பெரிய நண்பர் கூட்டம் இருக்கும்.

மெல்லிய உதடுகள்

மெல்லிய உதடுகள்

சிலருக்கு உதடுகள் இருப்பதே தெரியாது. அந்த அளவில் மெல்லிய உதடுகளைக் கொண்டிருப்பார்கள். இத்தகைய மக்கள் வெளிப்படையாக பேசமாட்டார்கள், தனிமையை விரும்புவார்கள், வாழ்க்கையில் தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பார்கள். மேலும் எதிலும் எப்போதும் உஷாராக இருப்பார்கள். மெல்லிய உதடுகளைக் கொண்ட பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள்.

வட்டமான உதடுகள்

வட்டமான உதடுகள்

வட்டமான உதடுகளைக் கொண்டவர்கள் மிகவும் அழகான இதயத்தைப் படைத்தவர்கள் மற்றும் துணிச்சலானவர்கள். மேலும் இத்தகையவர்கள் மிகவும் தன்னம்பிக்க கொண்டவர்கள் மற்றும் இவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் போன்றது. இவர்கள் தன் வாழ்வில் நடந்த கடந்த கால கெட்ட சம்பவங்களை மனதில் நினைத்துக் குழப்பிக் கொண்டு இருக்காமல், வாழ்வில் முன்னேற நினைப்பார்கள். சொல்லப்போனால் இவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகம்.

கீழ் உதடு பருத்து இருப்பது

கீழ் உதடு பருத்து இருப்பது

இந்த வகையினர் சிறந்த செயல்திறனாளர் மற்றும் இவர்களது திறமையால் மிகவும் பிரபலமாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் எந்த ஒரு இடத்திலும் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்க விரும்புவார்கள். இந்த வகையினர் நல்ல நகைச்சுவை குணம் படைத்தவர்கள் மற்றும் இனிமையானவர்களும் கூட.

சமச்சீரான உதடுகள்

சமச்சீரான உதடுகள்

சமச்சீரான உதடுகள் என்பது உதடுகள் பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல், சரியான வடிவத்தில் அழகாக இருப்பதைக் குறிக்கும். இந்த மாதிரியான உதடுகளைக் கொண்டவர்களைக் காண்பது அரிது. இவர்கள் மற்றவர்களுடன் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். இதனால் இவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் குறைவாகத் தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, December 18, 2015, 13:46 [IST]
Desktop Bottom Promotion