உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

உலகில் உள்ள விசித்திரமான உயிரினங்கள்!!!

இப்பட்டியலில் ஒருசில பெண்களின் உடல் பாகங்கள் விசித்திரமாகவும், அளவுக்கு அதிகமாக பெரியதாகவும் இருக்கும். மேலும் ஒரு பெண் மிகவும் நீளமான கூந்தலையும், பொம்மை போன்று தன்னையும் பராமரித்து வருகிறார். இவர்களைப் பார்க்கும் போது, அனைவரது புருவங்களும் நிச்சயம் மேல் எழும்.

நம்ப முடியாத சில விசித்திரமான உண்மைகள்!

சரி, இப்போது அனைவரது புருவங்களையும் மேல் எழச் செய்யும் உலகில் இருக்கும் விசித்திரமான பெண்களைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபிகாயில் மற்றும் பிரிட்டானி ஹென்ஸ்

அபிகாயில் மற்றும் பிரிட்டானி ஹென்ஸ்

இரண்டு மூளை, இரண்டு இதயம், ஆனால் ஓர் உடல் கொண்டவர்கள் தான் இந்த அபிகாயில் மற்றும் பிரிட்டானி ஹென்ஸ்.

அலிஷா ஹெஸ்லர்

அலிஷா ஹெஸ்லர்

இரண்டு மார்பங்களையே தாங்க முடியாமல் பெண்கள் தவிக்கையில், அலிஷா என்னும் பெண் மூன்று மார்பகங்களை சுமந்து கொண்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்... ஆச்சரியமாக உள்ளது தானே!

ஆஷா மண்டேலா

ஆஷா மண்டேலா

இந்திய பெண்களுக்கு நீளமான முடியின் மீது ஆசை அதிகம் இருக்கும். உங்களுக்கும் நீளமான முடியின் மீது ஆசையெனில், ஆஷா மண்டேலாவின் முடியைப் பாருங்கள். இவரது முடியின் நீளம் 19 1/2 அடி ஆகும்.

கிரேஸ் மெக்டேனியல்

கிரேஸ் மெக்டேனியல்

188 இல் பிறந்த கிரேஸ் என்னும் பெண்மணி ச்டர்ஜ்-வெபர் நோயினால் பாதிக்கப்பட்டு, அதனால் முகத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டு, விசித்திரமான தோற்றத்தைப் பெற்றார்.

ஜூலியா

ஜூலியா

தற்போது டாட்டூ மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதனால் பலரும் தங்கள் உடலின் சிறு பகுதியில் தான் டாட்டூ போட்டுக் கொள்வார்கள். ஆனால் ஜூலியா என்னும் பெண், தன் உடல் முழுவதும் கண்டபடி டாட்டூ குத்தியுள்ளார். இதனால் அவர் பார்ப்பதற்கே விசித்திர பெண்ணாக காணப்படுகிறார்.

 ஜோதி

ஜோதி

இந்தியாவைச் சேர்ந்த ஜோதி என்பவர் உலகிலேயே மிகவும் குட்டையான பெண்ணாவார். இவரது உயரம் 23 இன்ச். இவர் குட்டையாக இருந்தாலும், அதனைக் கொண்டே கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கிம் குட்மேன்

கிம் குட்மேன்

கிம் குட்மேனைப் பார்த்தாலே புல்லரிக்கும். ஏனெனில் இவரது கண்களைப் பார்த்தால் அவ்வளவு பயங்கரமாக இருக்கும். இவரது மிகப்பெரிய கண்களானது .43 அங்குலம் விரிவடையுமாம்.

மாண்டி செல்லார்ஸ்

மாண்டி செல்லார்ஸ்

உலகிலேயே மிகப்பெரிய தொடை மற்றும் கால்களைக் கொண்டவர்ன தான் மாண்டி செல்லலார்ஸ். இவர் பிறந்ததில் இருந்து, இவர் வளர வளர கால்களும் வளர்ந்து கொண்டே உள்ளதாம். தற்போது இவவது கால்கள் சாதாரண நிலையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளதாம்.

மேரா ஹில்ஸ்

மேரா ஹில்ஸ்

மேரா ஹில்ஸ் என்பவர் உலகிலேயே மிகவும் பெரிய மார்பகங்களைக் கொண்டவராவார். எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

மிகெல் ரஃப்பிநெல்லி

மிகெல் ரஃப்பிநெல்லி

மிகெல் என்னும் பெண்மணி மிகப்பெரிய இடுப்பைக் கொண்டவராவார். இவரது இடுப்பின் சுற்றளவானது 8 அடி ஆகும்.

சுபத்ரா சாசுபன்

சுபத்ரா சாசுபன்

பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது பெரும் தொல்லையாக இருக்கும். ஆனால் தாய்லாந்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிற்கு முகம் முழுவதும் முடி வளர்ந்துள்ளது.

வலெரியா லக்யானோவா

வலெரியா லக்யானோவா

வலெரியா லக்யானோவா என்ற இளம் பெண் பார்பி பொம்மையின் மீது உள்ள ஆசையால், தன்னை பார்பி பொம்மை போன்று மாற்றிக் கொண்டுள்ளார். இவரைக் காண்டால், உண்மையிலேயே பார்பி பொம்மை போன்றே இருப்பார் என்றால் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Twelve Freaky Women That Exist In The World

Have you seen the smallest woman in the world or the woman with the largest hips? These strange women on our list will make your jaws drop.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter