For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரவானின் சோகமான கதை!

By Ashok CR
|

நம்மில் பலருக்கும் மகாபாரதம் மிகவும் குழப்பமான ஒரு கதையாக விளங்கும். அதற்கு காரணம் மகாபாரதத்தில் உள்ள அத்தனை பாத்திர படைப்புகளும், அந்த ஒவ்வொரு பாத்திரமும் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபடுத்தப்பட்டுள்ள விதமும் தான். இந்த காவியத்தில் பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் போன்ற பல புராந்த பாத்திரங்கள் உள்ளனர். இவர்களைச் சுற்றி தான் முழுக் கதையும் சுழலும். அதனால் இந்த காவியத்தில் வரும் இதர பாத்திரங்களைப் பற்றி பலருக்கும் பெரிதாக தெரிவதில்லை.

காதல் மற்றும் துயரம் நிறைந்த கதை: தேவலோக அழகி ஊர்வசியும்... புருரவாவும்...

இன்று நாம் பார்க்க போவது அரவானின் கதையைப் பற்றி. இது ஒரு சின்ன பாத்திரம் தான் என்றாலும் கூட, மகாபாரதத்தில் வரும் முக்கியமான பாத்திரமாகும். இவரின் பரம்பரையில் இருந்து தான் திருநங்கை என்ற மற்றொரு பாலினமே பிறந்தது. அதனால் தான் திருநங்கைகளை அரவாணி என அழைக்கப்படுகின்றனர்.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: காந்தாரிக்கு உண்மையிலேயே 101 குழந்தைகள் இருந்தார்களா?

மகாபாராதத்தில் உள்ள சோகமான கதைகளில், அரவான் தேவன் பற்றிய கதையும் ஒன்றாகும். பிறரின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்து கொண்ட கதையாகும். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு தன் பரம்பரையை விட்டு சென்றார். இதனால் மனித இன வரலாற்றில் அவர் நிலைத்து நின்றார். அவர் கதையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரவான்: அர்ஜுனனின் மகன்

அரவான்: அர்ஜுனனின் மகன்

அரவான் என்பது மிகப்பெரிய மகாபாரத போர் வீரரான அர்ஜுனன் மற்றும் அவர் மனைவியான நாக தேவதை உலுப்பிக்கும் பிறந்த புதல்வனாவான். அரவான் என்பது கூத்தாண்டவர் வழிப்பாட்டின் மைய கடவுளாவார். அவர் தந்தையைப் போல அரவானும் கடுமையான போர் வீரராக திகழ்ந்தார். தன் தந்தை மற்றும் பிற பாண்டவர்களுடன் குருக்ஷேத்ர போரில் கலந்து கொண்டார். போரில் மிக வீரமாக சண்டையிட்டு, மிகப்பெரிய தியாகத்தை செய்தார்.

போருக்காக அரவானின் பலி

போருக்காக அரவானின் பலி

9 ஆம் நூற்றாண்டின் தமிழ் பதிப்பான, பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றி முன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலி சடங்கைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அதற்கு போர்களத்துக்காக பலி கொடுத்தல் என அர்த்தமாகும். இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளி தேவிக்கு பலி கொடுத்து கொள்ள வேண்டும். இந்த சடங்கில் தன் உயிரை தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார்.

Image Courtesy: Kabir Orlowski/Kirk Siang

மூன்று வரங்கள்

மூன்று வரங்கள்

போரில் தான் வீர மரணம் அடைய வேண்டி கிருஷ்ணரிடம் அரவான் வரம் கேட்டதாக பாரத வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

அரவானுக்கு இரண்டாவது வரம் அளிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அதன் படி, அவர் 18-ஆம் நாள் போரைக் காண வேண்டும்.

Image Courtesy: Robert Heng

மூன்று வரங்கள்

மூன்று வரங்கள்

மூன்றாவது வரம் வாய்வழி சடங்குகளில் மட்டுமே உள்ளது. அதன் படி, பலி கொடுப்பதற்கு முன் அரவானுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். அதற்கு காரணம் தன் ஈமச்சடங்குகளை (திருமணமாகாதவர் என்றால் புதைக்கப்படுவார்கள்) உரிமை கொண்டாட ஒருவர் வேண்டும் என்பதாலேயே. இருப்பினும் எந்த ஒரு பெண்ணும் அரவானை திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. அதற்கு காரணம் தவிர்க்க முடியாத விதவை கோலத்தைப் பெற வேண்டும் என்பதால் தான். கூத்தாண்டவர் வழிபாடு பதிப்பில், கிருஷ்ணரே இதற்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவரே மோகினி என்ற பெண் வடிவத்தை எடுத்து, அரவானை திருமணம் செய்து கொண்டார். அன்றைய இரவு முழுவதும் அரவானுடன் கழித்தார். கூவாகம் பதிப்பு கூடுதலாக இப்படி கூறுகிறது - மறுநாள் அரவானின் பலிக்கு பிறகு ஒரு விதவையாக கிருஷ்ணர் ஒப்பாரி வைத்தது நிகழ்ந்தது. அதன் பின் போரின் போது தன் சுய ரூபத்திற்கு சென்றார் கிருஷ்ணர்.

Image Courtesy: Praveen P

மூன்றாம் பாலினம்: அரவாணிகள்

மூன்றாம் பாலினம்: அரவாணிகள்

அரவானை கூத்தாண்டவர் என சிலையில் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. அதுவே முதன்மையான கடவுளாகவும் விளங்குகிறது. இங்கே அரவான் மற்றும் மோகினியின் திருமணம், அவள் விதவையாவது, அரவானின் பலிக்கு பின் ஒப்பாரி வைப்பது, என இவையனைத்துமே வருடாந்திர திருவிழாவின் 18-ஆம் நாளின் மைய கொண்டாட்டங்களாகும். இது தமிழ் மாதமான சித்திரையில் பௌர்ணமியின் போது நடைபெறும்.

அரவாணிகள் கூவாகம் திருவிழாவில் கலந்து கொண்டு, அரவான் மற்றும் மோகினியின் திருமணத்தை அரங்கேற்றுவார்கள். அனைத்து அரவாணிகளும் அரவானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நம்பப்படுகிறது. அதனால் இந்த பலி மீண்டும் அரங்கேற்றப்பட்டு, அரவாணிகள் அரவானின் விதவை மனைவியாக மாறி, ஒப்பாரி வைப்பார்கள்.

Image Courtesy: Ian Taylor Photography

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Tragic Story Of Aravan: Origin Of The Third Gender

The story of Lord Aravan can be called one of the most tragic tales of Mahabharata where he sacrifices himself for the greater good.
Desktop Bottom Promotion