For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம்!!!

By Ashok CR
|

நோன்பு இருப்பது என்பது இஸ்லாமிய மதத்தின் மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த தார்மீகம் மற்றும் ஆன்மீக குணாதிசயமாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாம் மாதமான ரமலான் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து அதன் அஸ்தமனம் வரை உணவு, பானங்கள், உடலுறவு மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றில் இருந்து முழுமையாக விலகியிருப்பதே நோன்பாகும். ஆனால் இஸ்லாமிய நோன்பிற்கான அர்த்தத்தை வறையரைப்படுத்தினால், அதனைப் பற்றிய புரிதல் நம்மிடம் தவறாகவே இருக்கும்.

நோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்...

இஸ்லாம் மதம் தொடங்கப்பட்ட போது முடிவில்லா நல்லொழுக்கம் மற்றும் மதிப்பில்லா பொருட்களை கொண்ட பசுமையான மரத்தை வித்திட்டது. இஸ்லாமிய நோன்பின் ஆன்மீக ரீதியான அர்த்தம் பற்றி விரிவாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மையான காதல்

உண்மையான காதல்

நேர்மையான காதலை பற்றி மனிதனுக்கு கற்றுக் கொடுக்கும்: அதற்கு காரணம், கடவுளின் மீதுள்ள ஆழமான காதலால் தான் மனிதன் நோன்பிருக்கிறான்.

நம்பிக்கை

நம்பிக்கை

நம்பிக்கையின் மீது படைப்பு உணர்வு மற்றும் வாழ்க்கையின் மீதான நன்னம்பிக்கைப் பார்வையை மனிதனிடம் தயார்ப்படுத்தும்; அதற்கு காரணம், அவன் நோன்பு இருக்கும் போது கடவுள் மனம் குளிர்ந்து, அருள் வழங்குவார் என்ற நம்பிக்கையை பெறுவான்.

நல்லொழுக்கம்

நல்லொழுக்கம்

சிறப்பான பக்தியின் உண்மையான நல்லொழுக்கம், நேர்மையான அர்பணிப்பு மற்றும் கடவுளிடம் அருகாமை போன்றவற்றை ஊக்குவிக்கும். அதற்கு காரணம், அவன் நோன்பிருப்பது கடவுளுக்காகவும், அவனுக்காகவும் மட்டுமே.

விழிப்பு மற்றும் ஆழமான மனசாட்சி

விழிப்பு மற்றும் ஆழமான மனசாட்சி

மனிதனிடம் விழிப்பு மற்றும் ஆழமான மனசாட்சியை விதைக்கும். அதற்கு காரணம், அவன் மேற்கொள்ளும் நோன்பு ரகசியமாகவும் இருக்கும், அனைவருக்கும் தெரிந்தபடியும் இருக்கும். நோன்பிருக்கையில், மனிதனின் நடவடிக்கையை சோதிக்கவோ அல்லது அவனை நோன்பிருக்க கட்டாயப்படுத்தவோ எந்த ஒரு அதிகாரியும் கிடையாது. ரகசியமாக அல்லது அனைவருக்கும் தெரிந்த படி உண்மையாக இருந்திட, கடவுளை குளிர்விக்கவும் தன்னுடைய மனசாட்சியை திருப்திப்படுத்தவும் இதனை செய்வான். ஒரு மனிதனுக்குள் ஆழமான மனசாட்சியை விதைக்க இதை விட சிறந்த வழி இருக்க முடியாது.

பொறுமை மற்றும் சுயநலமின்மை

பொறுமை மற்றும் சுயநலமின்மை

பொறுமை மற்றும் சுயநலமின்மையை மனிதனுக்கு இது போதிக்கும். அதற்கு காரணம், நோன்பிருப்பது மூலமாக இழப்பதன் வழியை அவன் உணரலாம். ஆனால் அவற்றை அவன் பொறுமையாக கையாளுவான்.

அடக்கத்தை போதிக்கும்

அடக்கத்தை போதிக்கும்

அடக்கம் மற்றும் மனத் திண்மைக்கு ஒத்துப்போகும் மிகச்சிறந்த பாடம் இது.

குழப்பமில்லாத மனம்

குழப்பமில்லாத மனம்

வெளிப்படையான ஆன்மா, தெளிவான மனம் மற்றும் லேசான உடலை நோன்பு அளிக்கும்.

வாழ்க்கையை மேம்படுத்த புது வழி கிட்டும்

வாழ்க்கையை மேம்படுத்த புது வழி கிட்டும்

புத்திசாலித்தனமான சேமிப்பு மற்றும் சிறந்த பட்ஜெட்டிற்கான புதிய வழியை மனிதனுக்கு காட்டும்.

வாழ்க்கை முறையில் நல்ல மாற்றம்

வாழ்க்கை முறையில் நல்ல மாற்றம்

ஒத்துப்போவதில் முதிர்ச்சி பெறும் கலையில் வல்லுனராக மனிதனுக்கு உதவும். தன் அன்றாட வாழ்க்கையின் முழுமையான போக்கை மாற்ற நோன்பு உதவும் என்பதை நாம் உணர்ந்தால் இந்த வரியை நாம சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை

ஆரோக்கியமான வாழ்க்கை

ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வை ஒரு மனிதனுக்குள் விதைத்திடும்.

நல்ல எண்ணம் மேலோங்கும்

நல்ல எண்ணம் மேலோங்கும்

சமூகத்தை சார்ந்து இருத்தல், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம், கடவுள் மற்றும் சட்டத்திற்கு முன்பாக சமத்துவம் போன்ற மெய்ப்பொருளை மனிதனுக்குள் இது தொடங்கி வைக்கும்.

இறைத்தன்மையுள்ள மருந்து

இறைத்தன்மையுள்ள மருந்து

சுய மன நிம்மதி மற்றும் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இறைதன்மையுள்ள மருந்து இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Spiritual Meaning Of The Islamic Fasting

When Islam introduced this matchless institution, it planted an ever-growing tree of infinite virtue and invaluable products. Here is an explanation of the spiritual meaning of the Islamic Fasting:
Desktop Bottom Promotion