மகாபாரத கண்ணனும், மகாத்மா காந்தியும் - ஒருமித்த அதிசய பண்பு!!!

Posted By:
Subscribe to Boldsky

மகாபாரதத்தில் பாண்டவர்களும், உண்மையும் வெற்றிபெற வேண்டும் என்று கண்ணன் அயராது உழைத்தான். ஆங்கிலேயர் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று சுதந்திர நாடாக மலர வேண்டும் என்று அகிம்சை எனும் ஆயுதம் கொண்டு ஆங்கிலேயரை விரட்டினார் காந்தியடிகள்.

மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஒன்பது தகவல்கள்!!!

இவர்கள் இருவர் மத்தியிலும் ஒருமித்த பண்பு ஒன்று இருந்திருக்கிறது. தொழில் என்று வரும் போது அதில் சிறந்தது, தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. தலைவன் என்பவன் வெறுமென வழிகாட்டுபவன் அல்ல, வழி நடத்துபவன் என்பதை, மகாபாரத கண்ணனும், மகாத்மா காந்தியும் அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் நிரூபித்துள்ளனர்...

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி பலரும் அறிந்திராத 10 தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாண்டவர்களின் யாகம்

பாண்டவர்களின் யாகம்

பாண்டவர்கள் இராசசூயம் யாகம் செய்தனர், அதில் பல நாட்டு அரசர்கள் விருந்தினர்களாக பங்கேற்றனர். அந்த சபையில் முதலில் பூசிக்கதகுதியுடையவர்யார்? என்ற கேள்வி எழுந்தது.

சகாதேவன் கருத்து

சகாதேவன் கருத்து

ஆன்றோர்களே, இவ்வுலகத்தின் வடிவம் யாருடையது? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூசைக்கு தகுதியுடையவன் ஆவான். அந்த தகுதி கண்ணனுக்கு மட்டுமே இருக்கிறது என்றான். எனவே, கண்ணனுக்கே பூசை செய்வோம் என்று கூறினான்.

சிசுபாலன் எதிர்ப்பு

சிசுபாலன் எதிர்ப்பு

அணைத்து அரசர்களும், சான்றோர்களும் ஒப்புக் கொண்ட சபையில், சிசுபாலன் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தான். உடனே அனைத்து அரசர்களும் அவனை கொல்ல வாளை ஓங்கினர். மற்றவரது கொந்தளிப்பை அறிந்த கண்ணன் தனது சக்கராயுதம் கொண்டு சிசுபாலனை அழித்தான்.

கண்ணனுக்கு முதல் பூசை

கண்ணனுக்கு முதல் பூசை

பிறகு சகாதேவன் கருத்தின்படி , கண்ணனுக்கு முதல் பூசை ஆரம்பமானது. இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்த கண்ணனை அனைவரும் வியந்து பார்த்தனர். இராசசூயம் வேள்வியில் அனைவரும் ஈடுப்பட தொடங்கினர்.

காணாமல்போன கண்ணன்

காணாமல்போன கண்ணன்

யாகம் நடந்துக் கொண்டிருந்த அதே தருணத்தில், ஒருபக்கம் விருந்தும் போய்க் கொண்டிருந்தது. திடீரென இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணன் காணவில்லை. அனைவரும் தேடத் தொடங்கினர்.

எச்சிலை எடுத்துக் கொண்டிருந்த கண்ணன்

எச்சிலை எடுத்துக் கொண்டிருந்த கண்ணன்

விருந்து பகுதியில், அனைவரம் உண்ட எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டிருந்தான் கண்ணன். இதைக் கண்ட அனைவரும் பதறினர். "கண்ணா, இது என்ன கொடுமை, பூசிக்கப்படும் நீ, எச்சில் இலையை எடுப்பதா? அதற்கென இருப்போர் அதை கவனிப்பார்கள் அல்லவா!" என்று கண்ணனை அழைத்தனர்.

கண்ணன் பதில்

கண்ணன் பதில்

பூசிக்க தலைமையில் இருக்கும் நான் இதை செய்யக் கூடாதா? தொழிலில் பெரிது, சிறிது என்று ஏதும் இல்லை. உணவு சிந்தும்படி இலைகளை எடுத்தால், அடுத்த பந்திக்கு வருபவர் எப்படி சௌகரியமாக உணவருந்த முடியும். நான் இங்கு எப்படி எச்சில் இலையை எடுக்க வேண்டும் என்று கற்பித்துக் கொண்டிருக்கிறேன். தலைவன் என்பவன் வழி காட்டுபவன் அல்ல, வழி நடத்துபவன் என்றார் கண்ணன்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி

தென்னாப்பிரிக்காவில் காந்தி

இனவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த சத்தியாக்கிரகம் என்ற புதிய முறை ஓரளவு வெற்றிபெற்றது. அனைவரையும் ஈர்த்தது. காந்திக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. பின் இந்தியா வந்த காந்தி காங்கிரஸ் மாநாட்டில் பங்கெடுத்தார்.

மாநாட்டில் காந்தி

மாநாட்டில் காந்தி

மாநாட்டில் காந்தியின் வழிக்காட்டுதலின் படி நடப்போம் என்று தலைவர்கள் முன்மொழிந்தார்கள். பிறகு காந்தி பேச வேண்டிய நேரம் வந்தது. ஆனால், மேடையில் காந்தி இல்லை. அனைவரும் காந்தியை தேடினார்கள்.

கழிவறையை கழுவிக் கொண்டிருந்த காந்தி

கழிவறையை கழுவிக் கொண்டிருந்த காந்தி

மேடையின் பின்னால் அமைந்திருந்த கழிவறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார் காந்தி. கையில் பக்கெட்டில் நீருடன் சுத்தம் செய்துக் கொண்டிருந்த காந்தியை கண்டு அனைவரும் அதிர்ந்து போயினர்.

அனைவரின் பதற்றம்

அனைவரின் பதற்றம்

"என்ன காரியம் செய்கிறீர்கள் நீங்கள்? உங்களுக்கான பாராட்டு விழா அல்லவா இது. நீங்கள் ஏன் இந்த செயலை செய்ய வேண்டும்" என்று அனைவரம் பதறியவாறு கூறினார்கள்.

காந்தியின் பதில்

காந்தியின் பதில்

கழிப்பிட பகுதியை கண்டேன், மிகவும் அசுத்தமாக இருந்தது. தலைவர்கள் சிலர் கூட கண்ட இடத்தில் அசுத்தம் செய்து சென்றதை கண்டேன். பிறகு மற்றவர்கள் எப்படி இதைப் பயன்படுத்த முடியும். அதனால் தான் நானே இறங்கி சுத்தம் செய்கிறேன் என்றார்.

வழிநடத்த வேண்டும்

வழிநடத்த வேண்டும்

தலைவன் என்பவன் வழிகாட்டியாக மட்டும் இருந்திட முடியாது, வழிநடத்தி செல்ல வேண்டும். நான் மேடையில் இதைப் பற்றி கூறினால் கூட மறந்திவிடுவார்கள். ஆனால், இப்போது நான் செயலில் இறங்கியதால் தான், மற்றவர்களும் இதை பின்பற்ற முயல்கிறார்கள் என்று கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Resemblance Of Mahabharata Krishana And Mahathma Gandhi

Here we have discussed about the resemblance of mahabharata Krishna and Mahathma Gandhi, in tamil. take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter