தருமனுக்கு பீஷ்மர் அரசநீதி கூறியதற்கான காரணங்களும், பாஞ்சாலியின் ஏளன சிரிப்பும்!!!

By: John
Subscribe to Boldsky

குருஷேத்திரப் போரில் பாண்டவர்கள் தங்களது வெற்றியை உறுதி செய்துக் கொண்டிருந்த தருணம் அது. எட்டுத்திக்கிலும் வெற்றிக் கொடியுடன் பாண்டவர்களின் படை போரிட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் போர்களத்தில், தங்களது பிதாமகர் பீஷ்மரை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சகுனியின் சூழ்ச்சி முடிச்சுகளால் பின்னப்பட்ட குருஷேத்திரப் போர்!!!

அர்ஜுனன் தான் பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டான். உடனிருந்த விஷமக்காரன் கண்ணனின் பேச்சு, அர்ஜுனனை பந்த பாசங்கள் அறுத்துப் போரிடத் தூண்டியது. பீஷ்மரையும் சாய்த்தான் அர்ஜுனன். கொஞ்சம் பலமாகவே, அம்புப் படுக்கையில் அவரை வீழவைத்தான். தன் தலை தொங்கக் கூடாது என்பதற்காக பீஷ்மரே தலைக்கும் ஓர் அம்பு ஏய்தக் கூறி வேண்டினார்.

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரும் என்ன ஆனார்கள்?

அம்புப் படுக்கையில் தனது உயிர் துறக்கக் காத்திருந்த சமயத்தில் தான் தருமனுக்கு அரசநீதி வழங்கினார் பீஷ்மர்....

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்தது பற்றி நீங்கள் கேட்டிராத கதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோட்சத்திற்காக அம்புப் படுக்கையில் உயிரைக் காத்திருந்தார்

மோட்சத்திற்காக அம்புப் படுக்கையில் உயிரைக் காத்திருந்தார்

அம்புகளால் பீஷ்மர் வீழ்ந்த காலமானது தட்சிணாயனம். ஆனால் உத்திராயண காலத்தில் உயிர் பிரிந்தால் தான் மோட்சம் கிடைக்கும் என பீஷ்மர் காத்திருந்தார்.

பீஷ்மரின் வரம்

பீஷ்மரின் வரம்

தான் விரும்பும் காலத்தில் உயிர் துறக்கும் வரம் பெற்றிருந்தமையே பீஷ்மர் மோட்சத்திற்காக உயிரைக் காத்திருந்த காரணமாகும்.

அரசநீதி கூற வேண்டுகோள்

அரசநீதி கூற வேண்டுகோள்

அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரை வேண்டி வணங்கி, தனக்கு அரச நீதி கூறுமாறு வற்புறுத்தினான் தருமன். உடனிருந்த கண்ணனும் தருமனுக்கு அரசநீதி கூறுமாறு பீஷ்மரைக் கேட்டுக் கொண்டான்.

முன் வந்த பீஷ்மர்

முன் வந்த பீஷ்மர்

அம்புப் படுக்கையில் படுத்துள்ள துன்பத்தையும் பொருட்படுத்தாமல், கண்ணன் மற்றும் தருமன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பீஷ்மர் அரசநீதியை தருமனிடம் கூறத் தொடங்கினார்.

பாஞ்சாலி ஏளன சிரிப்பு

பாஞ்சாலி ஏளன சிரிப்பு

அப்போது அருகிலிருந்த பாஞ்சாலி பீஷ்மரைக் கண்டு ஏளனமாக சிரித்தாள். இது அனைவரையும் திகைப்படைய வைத்தது. ஏன் பாஞ்சாலி சிரிக்கிறாள் என்ற கேள்வி அனைவரின் மனத்திலும் எழுந்தது.

பாஞ்சாலியின் பதில்

பாஞ்சாலியின் பதில்

ஏன் அம்மா சிரிக்கிறாய் என்று பாஞ்சாலியிடம் பீஷ்மர் வினவினார். அப்போது பாஞ்சாலி, "பிதாமகரே, நீங்கள் அனைத்து நல்லறமும் அறிந்தவர். உலகிலேயே உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்ந்தவர். அப்படியிருந்தும், துரியோதனன் சூதாட்டம் என்ற பெயரில் எங்கள் நாடை அபகரித்த போதோ, துட்சாதனன் என்னை அனைவரின் முன்னிலையில் மானபங்கம் படுத்திய போதோ ஏன் நீங்கள் அவர்களுக்கு அரசநீதி கூறி தடுக்கவில்லை" என்று பீஷ்மரிடம் கூறினால்.

அநீதி இழைக்கப்பட்டது

அநீதி இழைக்கப்பட்டது

அந்த தருணங்களில் நீங்கள் அவர்களுக்கு அரசநீதி கூறியிருந்தால். நாங்கள் எங்கள் நாட்டையும், நான் எனது மானத்தையும் இழந்திருக்க மாட்டேன். மற்றும் நாங்கள் வனவாசம் சென்றதற்கான வாய்ப்புகளே வந்திருக்காது என தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள் பாஞ்சாலி.

பீஷ்மரின் பதில்

பீஷ்மரின் பதில்

"குழந்தையே, நீ நினைத்ததும், சிரித்ததும், உன் ஆதங்கத்தை வெளிக்காட்டியதும் நியாயமானவை தான். நான் உண்ட உணவு துரியோதனனுடையது. அந்த உணவால் உண்டான இரத்தம் என் உடலில் அறநெறியை கழுவி, அநீதி எனும் சேறாய் தேங்கிவிட்டது. அதனால் தான் அந்நேரத்தில் என் வாயில் இருந்து அவர்களுக்கு அரசநீதி கூற இயலவில்லை." என்றும்...

அர்ஜுனனின் அம்புகள்..

அர்ஜுனனின் அம்புகள்..

இப்போது அர்ஜுனனின் அம்புகள் என் உடலை துளைத்து, அந்த அநீதி சேற்றை முழுவதுமாய் வெளியேற்றிவிட்டது. ஆகையால் தான் இப்போது தான் தருமனுக்கு அரசநீதி கூறுவதாகவும் பீஷ்மர் பதிலளித்தார்.

உணர்வு வெளிபாடு

உணர்வு வெளிபாடு

"இப்போது எனது உடலில் அறநெறி மட்டுமே மிஞ்சி இருக்கிறது. கண்ணன் கூறியதன் காரணத்தினாலோ, தருமன் கேட்டுக் கொண்டதனாலோ நான் அரசநீதி கூறவில்லை. என் அறநெறிகளுக்கும், சுய உணர்வின் வெளிபாட்டினாலும் தான் தருமனுக்கு அரசநீதி கூறினேன்" என்று பீஷ்மர் மேலும் பதிலளித்தார்.

பீஷ்மர் நாணுதல்

பீஷ்மர் நாணுதல்

"மகளே பாஞ்சாலி..., அன்று பாண்டவர்களுக்கும், உனக்கும் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு நான் வருந்தாத நாளில்லை. இப்போதும் நான் அச்செயலை கண்டு வெறுமென நின்றுந்ததை எண்ணி வருந்துகிறேன் என்றார்.

அரசநீதி கூறுதல்

அரசநீதி கூறுதல்

இந்த பதிலைக் கேட்டு அனைவரும் மீளா துயரம் கொண்டனர். அர்ஜுனன் பிதாமகரிடம் தன்வருத்தத்தை தெரிவித்தான். பிறகு மீண்டும் தருமனுக்கு அரச நீதியை கூறத் தொடங்கினார் பீஷ்மர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reason Behind Paanjali Laugh At Bheeshmar Death Time

Reason Behind Paanjali Laugh At Bheeshmar Death Time
Subscribe Newsletter