எண் கணிதத்தில் உள்ள எண்களும்... அதன் சாதகமான மாதங்களும்... பலன்களும்...

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

எண் கணிதத்தில் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் அதனுடனான ஒன்று முதல் ஒன்பது வரையிலான அடிப்படை எண்களும், அவைகளின் பெருக்கமும் முக்கியமான நேர காலத்தைக் கொண்டுள்ளது. அதை வைத்து தான் ஒருவரின் திட்டங்கள் அல்லது எண்ணங்களில் வெற்றியோ தோல்வியோ கிட்டும்.

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

அதனைப் பொறுத்து தான் சில முக்கியமான நிகழ்வுகளும் கூட நடைபெறும். சரி, இப்போது எண் கணிதத்தில் உள்ள எண்களையும், அதன் சாதகமான மாதங்களையும் குறித்து காண்போம்.

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண் 1

எண் 1

எண் 1 நபர்கள் தங்களின் முக்கிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான ஒன்று வரும் அனைத்து நாளன்றும் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும். உதாரணமாக ஏதேனும் ஒரு மாதத்தில் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள்; குறிப்பாக மார்ச் 21 முதல் ஏப்ரல் 28 வரை மற்றும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 28 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். அதிர்ஷ்ட கற்கள் மாணிக்கம். இந்த எண்ணுக்கு உரியவர்கள் புகழ் விரும்பிகளானாலும், நீதியும் நேர்மையும் கொண்டவர்கள் மற்றும் பழகுவதற்கு எளிமையானவர்கள்.

எண் 2

எண் 2

எண் 2 நபர்கள் தங்கள் முதல் திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான இரண்டு வரும் அனைத்து நாளன்றும் நடைமுறைப்படுத்திட வேண்டும். உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 2, 11, 20, 29 ஆகிய தேதிகள்; குறிப்பாக ஜூன் 20 முதல் ஜூலை 27 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி சந்திரன். அதிஷ்ட கற்கள் முத்து. இந்த எண்ணுக்கு உரியவர்கள் அன்பால் அனைவரையும் அடக்கிவிடுவர். ஒரு புள்ளி கிடைத்தால் பெரிய கோலமே போட்டுவிடும் அளவில் திறமைசாலிகள். பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக் கொண்டேயிருப்பார்கள்.

எண் 3

எண் 3

எண் 3 நபர்கள் தங்களின் மிக முக்கியமான திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான மூன்று வரும் அனைத்து நாளன்றும் நடைமுறைப்படுத்திட வேண்டும். உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 3, 12, 21, 30 ஆகிய தேதிகள்; குறிப்பாக பிப்ரவரி 19 முதல் மார்ச் 27 வரை மற்றும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 27 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி குரு. அதிஷ்ட கற்கள் புஷ்பராகம். இந்த எண்ணுக்கு உரியவர்கள் வசீகரமான பார்வை கொண்டவர்கள். புகழ் மற்றும் உயர்வுக்காக இவர்களது மனம் அலைப்பாயும். ஆலோசனை வழங்குவதில் சிறந்தவர்.

எண் 4

எண் 4

எண் 4 நபர்கள் தங்களின் மிக முக்கியமான திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான நான்கு வரும் அனைத்து நாளன்றும் என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்திட வேண்டும். உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 4, 13, 22, 31 ஆகிய தேதிகள்; குறிப்பாக ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 27 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி ராகு. அதிஷ்ட கற்கள் கோமேதகம். இந்த எண்ணுக்கு உரியவர்கள் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். மனதில் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லிவிடுவர். இவர்களின் மனதில் ரகசியம் என்ற ஒன்றே இருக்காது. முக்கியமாக எப்போதும் பேசிக் கொண்டே இருப்பர். இல்லாதவர்களுக்கு உதவுவதில் சிறந்தவர்கள்.

எண் 5

எண் 5

எண் 5 நபர்கள் தங்களின் மிக முக்கியமான திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான 5 வரும் அனைத்து நாளன்றும் செயல்படுத்திட வேண்டும். உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 5, 14, 23 ஆகிய தேதிகள்; குறிப்பாக மே 21 முதல் ஜூன் 20 வரை மற்றும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி புதன். அதிஷ்ட கற்கள் வைரம். இந்த எண்ணுக்கு உரியவர்கள் அதிக உழைப்பு, மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். ஒரே இடத்தில் இருக்கமாட்டார்கள். காதல் திருமணத்தை விரும்புபவர்.

எண் 6

எண் 6

எண் 6 நபர்கள் தங்களின் மிக முக்கியமான திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான ஆறு வரும் அனைத்து நாளன்றும் செயல்படுத்த முயற்சி செய்திட வேண்டும். உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 6, 15, 24 ஆகிய தேதிகள்; குறிப்பாக ஏப்ரல் 21 முதல் மே 20 வரை மற்றும் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி சுக்கிரன். அதிஷ்ட கற்கள் மரகதம். இந்த எண்ணுக்கு உரியவர்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள்.

எண் 7

எண் 7

எண் 7 நபர்கள் தங்களின் மிக முக்கியமான திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான ஏழு வரும் அனைத்து நாளன்றும் செய்து முடிக்க வேண்டும். உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 7, 16, 25 ஆகிய தேதிகள்; குறிப்பாக ஜூன் 21 முதல் ஜூலை 20 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி கேது. அதிஷ்ட கற்கள் வைடூரியம். இந்த எண்ணுக்கு உரியவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். மிகப்பெரிய வெற்றிகளையெல்லாம் சாதாரணமாக பெற்றுவிடுவர். அதே சமயம் வெற்றி கிட்டும் என்ற அதீத நம்பிக்கையில் பல கோடிகளை கைவிடக்கூடியவர்களும் இவர்களே. இந்த எண்ணுக்குரியவர்கள் மிக விரைவில் காதலில் விழுந்து தோல்வியைப் பெற்றுவிடுவர்.

எண் 8

எண் 8

எண் 8 நபர்கள் தங்களின் மிக முக்கியமான திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான எட்டு வரும் அனைத்து நாளன்றும் கடைப்பிடிக்க முயற்சி செய்திட வேண்டும். உதாரணமாக, ஏதேனும் ஒரு மாதத்தில் 8, 17, 26 ஆகிய தேதிகள்; குறிப்பாக டிசம்பர் 21 முதல் பிப்ரவரி 26 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி சனி. அதிஷ்ட கற்கள் நீலக்கல். இந்த எண்ணுக்கு உரியவர்கள் நற்குணம் கொண்டவர்கள். பிறருக்காக உழைப்பவர்கள். மற்றவர்கள் போராடிப் பெறும் வளர்ச்சியை எளிதில் பெற்று விரைவில் உயர்ந்துவிடுவர். இந்த எண் காரர்கள் கண்டவர்களிடம் ஆலோசனைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் சுயமாக சிந்தித்தால், உங்களால் நிச்சயம் வாழ்வில் முன்னேற முடியும்.

எண் 9

எண் 9

எண் 9 நபர்கள் தங்களின் மிக முக்கியமான திட்டங்கள் மற்றும் எண்ணங்களை, கூட்டு தொகையாக தங்கள் எண்ணான ஒன்பது வரும் அனைத்து நாளன்றும் செயல்படுத்த முயற்சி செய்திட வேண்டும். உதாரணமாக ஏதேனும் ஒரு மாதத்தில் 9, 18, 27 ஆகிய தேதிகள்; குறிப்பாக மார்ச் 21 முதல் ஏப்ரல் 26 வரை மற்றும் அக்டோபர் 21 முதல் நவம்பர் 27 வரையிலான கால கட்டத்தில். இந்த எண்ணுக்கு அதிபதி செவ்வாய். அதிஷ்ட கற்கள் பச்சைக்கல். இந்த எண்ணைக் கொண்டவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்கள் எதிலும் முதலிடத்தில் இருப்பவர்கள். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற கொள்கையைக் கொண்டவர்கள். இவர்களது பேச்சு, வேகமான முடிவுகள், எதிலும் கலக்கும் திறன் போன்றவை மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். இவர்கள் உணவை மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். சாப்பாட்டைக் காட்டியே இவர்களை மயக்கிவிடலாம். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். இந்த கோபத்தை அடக்கினால், நல்ல வாழ்வை வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Numbers And Their Favourable Months In Numerology

In numerology every date of birth with their Base numbers from one to nine and multiple of them, has its important time duration, in which, concerned person can get success in his /her plans or ideas or can have important happening