For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க சுதந்திர தேவி சிலையைப் பற்றி பலரும் அறியாத வியப்பூட்டும் தகவல்கள்!!

|

ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் இருக்கிறது அமெரிக்க தேவி சிலை. 1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் நாள் இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!!!

அமெரிக்க புரட்சியின் போது, அமெரிக்கா, பிரான்ஸ் மத்தியில் இருந்து நட்புறவின் அடையாமாக இந்த சிலை பரிசளிக்கப்பட்டது. இந்த சுதந்திர தேவி சிலை சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகிறது.

உலகில் வன்முறை தலைவிரித்தாடும் அதிபயங்கர நாடுகள் - 2015

ஐக்கிய அமெரிக்கா விடுதலை அடைந்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவும் பிரான்ஸும் ஒன்றாக ஓர் சிலையை வடிவமைக்க மாநாடு ஒன்றில் ஒப்புக் கொண்டான. இந்த தீர்மானத்தின் படி இரு நாட்டவரும் ஒருகிணைந்து உருவாக்கிய சிலை இது என்றும் கூறப்படுகிறது...

உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான 11 நாடுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிர்சிவப்பு பழுப்பு நிறம்

வெளிர்சிவப்பு பழுப்பு நிறம்

அமெரிக்க சுதந்திர தேவி சிலையானது பச்சை வண்ணம் உடையது என்பது யாவரும் அறிந்தது தான். ஆனால், உண்மையில் இந்த சிலை முதலில் வெளிர்சிவப்பு பழுப்பு (Reddish Brown) நிறத்தில் இருக்க வேண்டும் என்று தான் தீர்மானிக்கப்பட்டு பிறகு மாற்றப்பட்டது.

32 லட்சம் மக்கள்

32 லட்சம் மக்கள்

ஓர் வருடத்தில் மட்டும், அமெரிக்காவின் சிதந்திர தேவி சிலையை காணவேண்டும் என்றே 32 லட்சம் சுற்றுலா பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.

முழுப்பெயர்

முழுப்பெயர்

அமெரிக்க தேவி சிலையை ஆங்கிலத்தில் Statue Of Liberty என்று கூறுவர். ஆனால், இந்த சிலையில் முழுப்பெயர் Liberty Enlightening The World என்பதே ஆகும்.

அமெரிக்க தேவி சிலையின் கிரீடம்

அமெரிக்க தேவி சிலையின் கிரீடம்

அமெரிக்க சுதந்திர தேவியின் தலையில் ஏழு முற்கள் போல் கொண்ட கிரீடம் ஒன்று இருப்பதை அறிந்திருப்பீர்கள். இது உலகில் உள்ள ஏழு கடல் மற்றும் ஏழு கண்டங்களை குறிப்பிடுபவை ஆகும்.

ரோமபுரி கடவுள்

ரோமபுரி கடவுள்

சுதந்திர தேவி சிலையானது ரோமபுரி கடவுளான 'Libertas' என்பவரை ஊக்கம் கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவமாகும்.

சுதந்திர தேவியின் தலை

சுதந்திர தேவியின் தலை

சுதந்திர தேவியின் சிலையின் தலை பகுதி 1878ஆம் ஆண்டு பாரிசில் நடந்த World's Fair எனும் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அமெரிக்க தேவி சிலை 1886ஆம் ஆண்டு தான் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிவிளக்கு

ஒளிவிளக்கு

சுதந்திர தேவியின் கையில் இருந்து உண்மையான ஒளிவிளக்கு கடந்த 1984-ம் ஆண்டு செப்பினால் ஆன 24 காரட் தங்கள் இலையால் மூடப்பட்டுள்ள விளக்கால் மாற்றி வைக்கப்பட்டது.

லிபர்ட்டி தீவு

லிபர்ட்டி தீவு

லிபர்டி எனும் தீவில் வாழ்ந்து வரும் ஓர் குடும்பம் சுதந்திர தேவி சிலைப் போன்றே வீட்டைக்கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.

மின்னல்

மின்னல்

சுதந்திர தேவி சிலைக்கு ஒரு வருடத்தில் ஏறத்தாழ 600 முறையாவது மின்னல் தாக்குதல் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

ஈபில் டவர்

ஈபில் டவர்

ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த அதே குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Statue of Liberty

Here we have shared some lesser known facts about the Statue of Liberty in tamil
Story first published: Monday, November 23, 2015, 11:10 [IST]
Desktop Bottom Promotion