For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட சாதியக் கொடுமை - கருப்பு வரலாறு!!

|

கி.பி 7-ம் நூற்றாண்டின் போது கேரளா பகுதியில் நம்பூதிரிகளின் குடியேற்றம் அதிகமானது, ஆதிக்கமும் கூட. இவர்கள் தாங்கள் தான் பூமியிலுள்ள கடவுள்கள் என்று கூறி சாதாரண மக்கள் மட்டுமின்றி அரசர்களே மதிக்கும் வண்ணம் போற்றப்பட்டு வாழ்ந்து வந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களுக்காக பரசுராமனால் தரப்பட்டது எனவும், அரசர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை தங்களுக்கு தொண்டு செய்யக் கடமைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கூறி வந்ததாக கூறப்படுகிறது.

உலக வரலாற்றில் பெரும் புரட்சியும், அழியா தடமும் பதித்த சாதனை மனிதர்கள்!!!

இதற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் சாதியக் கொடுமைகளும், தீண்டாமைக் கொடுமைகளும் அதிகரிக்க ஆரம்பித்தது. நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைப்பெற்றிருந்தன. வர்ண தர்மம் என அந்நாளில் கூறப்பட்ட இந்து மத வர்ண (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்கள் பிரிக்கப்பட்டு இருந்தன. இதை நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன்!!

இதன் பிறகு தான் உயர் ஜாதி மக்கள் வரும் போது கீழ் ஜாதி மக்கள் அருகே வரக் கூடாது, கோவிலுக்குள் இறைவழிபாடு தடை, மற்றும் பெண்கள் மேலாடையும், மூட்டுக்கு கீழ் ஆடையும் அணியக் கூடாது என்பது போன்ற தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் அரங்கேறின.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேலாடை அல்லது தோள்சீலை

மேலாடை அல்லது தோள்சீலை

திருவிதாங்கூரில் "மேலாடை", அல்லது "Upper cloth" என்பதை மலையாளிகள் "மேல்முண்டு" என்று அழைக்கின்றனர். நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள், திருமண நிகழ்வுகளின் போது கடைபிடித்து வருகின்றனர்.

மூன்று முண்டுகள்

மூன்று முண்டுகள்

முண்டுகள் மூன்று வகையாக பயன்படுத்தும் வழக்கம் அக்காலத்தில் கேரள நாட்டில் இருந்து வந்துள்ளது,

உடுமுண்டு - உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேட்டி - ஒற்றை அல்லது இரட்டை)

மார்பு துண்டு - மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேட்டி.

மேல்முண்டு - அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற மேலடை போன்ற வேட்டித் துண்டுகளாகும்

போராட்டம் காரணம்

போராட்டம் காரணம்

12-ம் நூற்றாண்டில் மேல் ஜாதி இந்து, கீழ் ஜாதி இந்து என்ற பாகுபாடுகள் உருவாகி இருந்தன. இதனால், காணாமை, நடவாமை, தொடாமை, போன்ற சமுதாய முறைகள் பின்பற்றப்பட்டன. இந்த வகையில் ஒன்றாக தான் கீழ் ஜாதி பெண்கள் மேலாடை உடுத்த தடையும் மீறி உடுத்துவது மேல்சாதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் கருதப்பட்டது. மரியாதைக் காரணமாக மேல் ஜாதி மக்கள் முன்பு, கீழ் ஜாதி பெண்கள் தங்கள் மார்பகங்களை காட்டியப்படி தான் வலம்வர வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

உடைக் கட்டுபாடு

உடைக் கட்டுபாடு

திருவாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதிக்கி வைக்கப்பட்ட மக்கள், தங்கள் இடுப்பிற்கு மேல் ஆடை அணிய மறுக்கபப்ட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் ஜாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிகள் முன்பு நாடார் சாதி பெண்கள் திறந்த மார்புடன் நிற்க வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. இந்த கட்டுபாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே ஜாதியை கண்டறியும் முறையும் இருந்தது.

அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர் என்பவர் இந்த சாதியக் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் மேலாடை உடுத்த வேண்டும் என போராடினர். பெண்கள் மேலாடை அணிய தொடங்கிய போது, அதை கிழித்து எறிந்த கொடுமைகளும் நிகழ்ந்தன. போராட்டம் பெரிதானது, அய்யா வைகுண்டர் அவர்கள் இந்த போராட்டங்களில் பெரும் பங்கு வகித்தார்.

கலவரம்

கலவரம்

ஆங்கில அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, சீர்திருத்த கிறிஸ்துவ சமயத் தொண்டரான சார்லஸ் மீட் பாதிரியார், முதலில் கிறிஸ்துவ பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால், கிறிஸ்துவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைக்க தொடங்கினர். மேலும், மேலாடையும் பயன்படுத்தினர். இதனால் அந்நாளில் கலவரம் எல்லாம் மூண்டதாக கூட கூறப்படுகிறது.

மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இந்த சம்பவங்களை குறித்துவிரிவான கடிதம் ஒன்று எழுதினார்.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

அந்த கடிதத்தின் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிட்டார். கர்னலின் உத்தரவின் பேரில் 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்பு வழங்கப்பட்டது.

இரண்டாம் போராட்டம்

இரண்டாம் போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823-ம் ஆண்டு வ வெளியிடப்பட்ட அரசானை ஓர் நிரந்தரமான தீர்வை அளிக்க தவறியது. இதன் பிறகு விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தை அடுத்து தோல் சீலைப் போராட்டம் தீவிரமடைந்து.

விக்டோரியா மகாராணியின் பிரகடனம்

விக்டோரியா மகாராணியின் பிரகடனம்

கீழ்வரும் செய்தியை விக்டோரியா ராணி தனது பிரகடனத்தில் கூறியிருந்தார்.....

'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'

மூன்றாம் கட்ட போராட்டம்

மூன்றாம் கட்ட போராட்டம்

சில அரசானை சிக்கல்கள் மற்றும் குளறுபடிகளால் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில், மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் மார்பகங்களை மறைத்து உடை உடுத்தும் போராட்டத்தில் வெற்றிப் பெற்றனர்.

அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை

அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை

அதன் பயனாக 1859 -ம் ஆண்டு ஜுலை மாதம் 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "அனைத்து சமயத்தைச் சேர்ந்த சாணார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் (மேலாடை) கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்றும் அணியாமல் மற்றும் வேறு எவ்விதத்திலும் தங்கள் மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை" என அறிவிக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Channar Revolt A Black History Of Kerala

The Channar Lahala or Channar revolt refers to incidents surrounding the rebellion by Nadar climber women asserting their right to wear upper-body clothes against the caste restrictions sanctioned by the Travancore kingdom, a part of present-day Kerala.
Desktop Bottom Promotion