குருஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்களின் குலத்தை வேர் அறுக்க வந்த அசுவத்தாமன்!!!

By: John
Subscribe to Boldsky

பல இடையூருகளையும், சூழ்ச்சிகளையும், அதர்மங்களையும் தாண்டி, கர்ணன், பீஷமர் போன்ற நல்லவர்களின் உயிர்களை பலி வாங்கி குருஷேத்திரப் போரின் முடிவில் தர்மத்தை நிலை நிறுத்தினர் பாண்டவர்கள்.

மகாபாரதம்! நிஜம் என்பதற்கான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட உண்மைகள்!

இதற்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் கண்ணும், அர்ஜுனனும். துரியோதனின் துரோகத்தை முறியடித்து அஸ்த்தினாபுரத்தில் நல்லாட்சிப் புரிய பாண்டவர்கள் முற்பட்ட போது தான் அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

துரியோதனன் போர்கலத்தில் உயிருக்குப் போராடுவதைக் கண்டு பதபதைத்துப் போன அசுவத்தாமன் கோவத்தின் உச்சிக்கே சென்றான், பாண்டவர்களை பழிவாங்கியே தீருவேன் என்று துவண்டெழுந்தான்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போர்க்களக் காட்சி

போர்க்களக் காட்சி

பீமனின் கதயில் (கதாயுதம்) அடியுண்டு துரியோதனன் குற்றுயிராக கிடந்தான். அகிலமெல்லாம் ஆணை செலுத்திய அரசன், அனாதையாக கிடப்பதைக் கண்டு அசுவத்தாமன் மனம் வருந்தினான்.

பழிவாங்கும் சபதம்

பழிவாங்கும் சபதம்

உன்னை அழித்தவர்களை இன்று இரவுக்குள் வேரோடு அழித்து, அவர்களது தலையை உன் காலடியில் வைக்கிறேன் நேட்று சபதம் செய்தான் அசுவத்தாமன்.

கண்ணன் அறிந்துக் கொண்டான்

கண்ணன் அறிந்துக் கொண்டான்

அசுவத்தாமன், துரியோதனனிடம் சபதம் செய்து பாண்டவர்களின் குலத்தை வேரோடு அழிக்க வருவதை அறிந்துக் கொண்டான் கண்ணன். அதனால், பாசறையில் இருந்த பாண்டவர்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டான்.

பாஞ்சாலியின் புதல்வர்கள் மரணம்

பாஞ்சாலியின் புதல்வர்கள் மரணம்

பாண்டவர்களை கொல்ல பாசறைக்குள் புகுந்த அசுவத்தாமன், பாஞ்சாலியின் புதல்வர்களை பாண்டவர்கள் என்று கருதி தலையை அறுத்துவிட்டான்.

தருமர் கவலை

தருமர் கவலை

குருஷேத்திரம் போரில் வென்று வந்தும், தங்களுக்கு பிறகு இந்நாட்டை ஆள்வதற்கு இருந்த வாரிசுகள் இறந்துவிட்டனரே என்று தருமர் கவலையுற்றார்.

உத்திரை கருவுற்றிருந்தாள்

உத்திரை கருவுற்றிருந்தாள்

அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவள் நல்லமுறையில் குழந்தையை பெற்றால், வாரிசு இல்லை என்ற கவலை தீரும் என நம்பினார் தருமர்.

அசுவத்தாமன் மீண்டும் வருகை

அசுவத்தாமன் மீண்டும் வருகை

"இடி இடித்திடு சிகரிகள் ஆம்என

எறிமருச்சுதன் முதல்இக லோர்தலை

துடிதுடித்திட அவர்அவர் சேனைகள்

துணிப டப்பொருது எழுபுவி நீபெற

வடிவ தற்குமுன் வாகுவென் யான்" - என்று சபதமெடுத்து உத்திரையின் கருவையும் அழிப்பதற்கு பிரமசிரசு என்ற அம்பை ஏவினான் அசுவத்தாமன்

கண்ணனின் கருணை

கண்ணனின் கருணை

கண்ணனின் கருணையால் உத்தரையின் கரு காக்கப்பட்டது. ஆயினும் அந்த அம்பு, கருவிலுள்ள சிசுவைக் கருகச் செய்தவிட்டது.

உத்திரையின் குழந்தை பிறந்தது

உத்திரையின் குழந்தை பிறந்தது

உரிய காலத்தில் உத்திரை குழந்தை பெற்றால். ஆனால், குழந்தை இறந்தே பிறந்தது கரிக்கட்டையாக.

பாண்டவர்கள் அழுகை

பாண்டவர்கள் அழுகை

உத்திரையின் கருவும் அழிந்ததை கண்ட பாண்டவர்கள் கதறி அழுதனர். குழந்தை உயிர் பெற்றுவிடும் என்று கண்ணன் ஆறுதல் கூறினான்.

அதிசயம்...

அதிசயம்...

கரிகட்டையாய் இருந்த குழந்தை உயிர்பேரப் போகும் அதிசயத்தைக் காணப் பராசர், வியாசர் முதலிய முனிவர்கள் மற்றும் பலர் திரண்டனர்.

பிரம்மச்சரிய விரதம்...

பிரம்மச்சரிய விரதம்...

பிரம்மச்சாரிய விரதத்தை சிறுதும் தவறாமல் கடைப்பிடித்தவர் யாராவது தொட்டால், கரிக்கட்டையாக இருக்கும் குழந்தை உயிர்பெறும் என்று கண்ணன் கூறினான்.

முனிவர்கள் முயற்சி

முனிவர்கள் முயற்சி

கூடியிருந்த முனிவர்கள் பலர், பிரம்மச்சரியத்தில் எங்களில் விஞ்சியவர் யாரும் இல்லை என, குழந்தைக்கு உயிர் கொடுக்க முற்பட்டனர். ஆனால், யார் தொட்டும் கரிக்கட்டையாக இருந்த குழந்தை உயிர் பெறவில்லை.

கண்ணன் வாக்கு பொய்த்தது...

கண்ணன் வாக்கு பொய்த்தது...

அனைவரும், கண்ணன் விளையாடுகிறார் என்று கேலி செய்தனர். இவ்வளவு பெரிய முனிகள் நாங்கள் தொட்டே குழந்தைக்கு உயிர் வர வில்லையே என்று நகைத்தனர்.

கண்ணன் முற்படுதல்

கண்ணன் முற்படுதல்

நான் தொடுகிறேன், குழந்தை உயரி பெரும் என்று, கண்ணன் முற்பட்டார். அனைத்து முனிகளும், நாங்கள் தொட்டே உயிர்பெறவில்லை. நீ தொட்டால் எப்படி உயிர் வரும் என்று கூறினார்கள். உனக்கு எண்ணற்ற அரசிகளும்ம், மங்கையருடனும் பழக்கம் உள்ளது என்று கூறி நகைத்தனர்.

கண்ணன் தொடுதல்

கண்ணன் தொடுதல்

நான் தொடுவதால் யாருக்கும் நட்டம் இல்லையே என்று கூரு, கரிகட்டையாக இருந்த குழந்தையை தொட்டார் கண்ணன், குழந்தை உயிர் பெற்றது.

பாண்டவர்கள் பரவசம்

பாண்டவர்கள் பரவசம்

குழந்தை உயிர் பெற்றதும் பாண்டவர்கள் பரவசம் அடைந்தனர். முனிவர்கள் நாணத்தால் தலைக் குனிந்தனர். பின் முனிவர்களிடம், நான் பல்லாயிரம் மங்கையரோடு உறவாடினாலும், மனதளவில் தூய்மையானவன் என்று கூறினார் கண்ணன்.

கீதையின் வாக்கு

கீதையின் வாக்கு

நான் பகவத் கீதையில் ஸ்திதப் பிரக்ஞன் உலக போகத்தில் ஈடுபட நேர்ந்தாலும் தாமரையிலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதுபோல் பற்றற்றுப் பந்தப்படாமல் வாழ வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி, வாழ்ந்தும் காட்டினேன் என்று கூறினார் கண்ணன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aswathaman Cause For Destruction Of Pandavas Generation

Do you know about the destroy of pandavas generation after gurushethra war? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter