Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த உணவுகள்!!!
மோடிக்கு பிடித்த உணவுகளுள் ஒன்று தோக்லா. ஒருவேளை உங்களுக்கு இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அப்போது அவருக்கு பிடித்த உணவை எடுத்துச் சென்று அவரை சந்தோஷப்படுத்துங்கள்.
பல மாதங்கள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு, அந்த பிரச்சாரத்தின் பயனாய் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி. பிரதமர் பதவி ஏற்பு விழாவில் மோடிக்கு பிடித்த உணவுகளுள் ஒன்றான தோக்லாவும் இடம் பெற்றுள்ளதாம்.
இங்கு நரேந்திர மோடிக்கு பிடித்த ஒருசில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவேளை உங்களுக்கு இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அப்போது அவருக்கு பிடித்த உணவை எடுத்துச் சென்று அவரை சந்தோஷப்படுத்துங்கள். சரி இப்போது அந்த உணவுகளைப் பார்ப்போமா!!!

தோக்லா
தோக்லா என்பது ஒரு பாரம்பரிய குஜராத்தி ரெசிபி. இது மிகவும் மென்மையாக ஸ்பாஞ்சு போன்று இருக்கும். இந்த ரெசிபி நரேந்திர மோடியின் மிகவும் விருப்பமான உணவாகும்.

கிச்சடி
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சாப்பிடப்படும் ஒரு உணவு தான் கிச்சடி. இந்த கிச்சடியும் மோடிக்கு பிடித்த உணவுகளுள் ஒன்று.

காந்த்வி
காந்த்வி என்பது ஒரு ஸ்நாக்ஸ். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதனையும் மோடி விரும்பி சாப்பிடுவாராம்.

மாங்காய் சட்னி
மாங்காய் பிடிக்காதவர் எவரும் இலர். அத்தகைய மாங்காய்க்கு நம் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியும் அடிமை தான். அதிலும் அவருக்கு இனிப்பு மற்றும் காரம் சேர்த்து செய்யப்படும் மாங்காய் சட்னி தான் பிடிக்குமாம்.

பாதாம் மற்றும் பிஸ்தா ஷ்ரிகந்த்
பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து செய்யப்படும் ஷ்ரிகந்த் மோடி விரும்பி சுவைத்து சாப்பிடும் உணவுகளுள் ஒன்று.



Click it and Unblock the Notifications
