For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் கொண்டாடப்பட்டு வரும் சில வண்ணமயமான திருவிழாக்கள்!!!

By Babu
|

உலகில் எத்தனையோ பண்டிகைகள் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவற்றில் சில நாட்டு பண்டிகைகள் மட்டுமே மற்ற நாட்டு மக்களால் பேசப்படும் வகையில் மிகவும் வண்ணமயமாக, ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டுமென்று தோன்றுமாறு இருக்கும்.

இங்கு உலகில் உள்ள அனைத்து மக்களின் மனதைக் கவர்ந்த பல வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் சில வண்ணமயமான திருவிழாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முடிந்தால் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைனீஸ் வருட பிறப்பு, சீனா

சைனீஸ் வருட பிறப்பு, சீனா

சைனீஸ் காலெண்டரின் படி சீனாவில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா தான் இது. இந்த வருட பிறப்பு திருவிழாவானது சீனாவில் 15 நாட்கள் நடைபெறும். அதிலும் இந்த திருவிழாவில் மிகவும் பெரிய டிரான் வடிவ விளக்குகளைப் பயன்படுத்தி கொண்டாடப்படும்.

ரியோ டி ஜெனிரோவின் கார்னிவல், பிரேசில்

ரியோ டி ஜெனிரோவின் கார்னிவல், பிரேசில்

பிரேசில் நடைபெறும் மிகவும் பெரிய திருவிழா தான் ரியோ டி ஜெனிரோவின் கார்னிவல். இந்த கார்னிவல் கொண்டாட்டத்தில் பலவண்ணம் கலந்த வித்தியாசமான ஆடைகளை அணிந்து ஆட்டம், பாட்டம் என இவ்விழாவே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

ஹோலி, இந்தியா

ஹோலி, இந்தியா

உலகில் உள்ள வண்ணமயமான விழாக்களில் ஒன்று தான் இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி என்னும் வண்ணப்பொடிகளை தூவிக் கொண்டாடும் திருவிழா.

பலூன் திருவிழா, மெக்சிகோ

பலூன் திருவிழா, மெக்சிகோ

மெக்சிகோவில் 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருமும் 9 நாட்கள் நடைபெறும் ஒரு புதுமையான திருவிழா தான் பலூன் திருவிழா. இந்த திருவிழாவின் போது பல்வேறு விதமான வடிவங்களில் உருவாக்கப்பட்ட வண்ணமயமான ராட்சத பலூன்களை விண்ணில் பறக்கவிட்டு, அதில் தொட்டில்களை கட்டி தாங்களும் வின்னில் பறந்து குதூகலம் அடைவார்கள்.

ஸ்பெயின் தக்காளி திருவிழா

ஸ்பெயின் தக்காளி திருவிழா

ஸ்பெயினில் அட்டகாசமான மற்றும் எங்கும் சிவப்பை காணும் வகையில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா தான் தக்காளி திருவிழா. இந்த திருவிழாவில் நன்கு கனிந்த தக்காளியை ஒருவர் மீது மற்றவர் தூக்கி வீசி கொண்டாடி மகிழ்வார்கள். இந்த திருவிழாவானது 1945 ஆம் ஆண்டு முதல், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று கொண்டாடப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Famous Colourful Festivals Of The World

Listed here are some such amazing and well-known festivals from around the world. Very unique to their countries and celebrated since centuries, these festivals still retain their fervour drawing attention from all over the world.
Story first published: Saturday, April 5, 2014, 12:32 [IST]
Desktop Bottom Promotion