Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மக்கள் விரும்பும் பைத்தியகாரத்தனமான டாட்டூக்கள்!!!
"என் பெயர் உன்னிடம் பெண்ணே, அதனால் அது உண்மை என்பதை அறிந்தேன்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இப்போதுள்ள காலத்தில் டாட்டூ மீது பலரும் பைத்தியமாக உள்ளனர். உங்கள் உடம்பில் டாட்டூ குத்திக் கொள்வது என்பது ஒரு பெரிய முடிவே. அதற்கு காரணம் அது காலாகாலத்திற்கும் உங்கள் உடலில் நீடித்து நிலைத்திருக்க போகிறது. அதனால் உஷாராக இருங்கள்.
உங்கள் மன கவர்ந்தவரின் பெயர்கள் மற்றும் சுருக்கொப்பங்கள் முதல் பைத்தியகாரத்தனமான படங்கள் வரை, பல வகையான டாட்டூக்களை உங்கள் உடலில் குத்திக் கொள்ளலாம். அதனால் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், அதன் அமைமுறையை முடிவு செய்து கொள்ளுங்கள். தினமும் அதை தான் பார்க்க வேண்டும் என்பதால் அதனை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

வெறும் ஆடைகள் மற்றும் ஷூக்கள் மட்டும் ட்ரெண்ட்களை உருவாக்குவதில்லை. டாட்டூக்களும் கூட இதனை செய்கிறது. ஒரு டாட்டூ பார்லருக்கு சென்றால், அவரே உங்களுக்கு டிசைனை தேர்ந்தெடுப்பார் என்று எண்ணாதீர்கள். அப்படி நினைத்தால், அந்த எண்ணத்தை முதலில் மாற்றுங்கள்.
இப்போதெல்லாம் விந்தையான, பைத்தியக்காரத்தனமான டாட்டூ வகைகளை அனைவரும் விரும்புகின்றனர். டாட்டூக்களை பற்றி தெரிந்து கொள்ளும் போது ஆச்சரியமும் அடைவீர்கள். நீங்கள் டாட்டூ மீது பைத்தியமாக இருந்தால் இதனை படியுங்கள். மக்கள் எவ்வாறான பைத்தியகாரத்தாமான டாட்டூக்களை விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கண் கண்ணாடி டாட்டூ
பைத்தியகாரத்தனமான டாட்டூக்களில் இதுவும் ஒரு ரகம். மாத்யூ என்ற நபர் கண் கண்ணாடியை போன்ற டாட்டூவை கண்களை சுற்றி, நிரந்தரமாக குத்திக் கொண்டார். அது புத்திசாலித்தனமான ஒன்றாக அவர் கருதினார். மற்றவர்களை எந்த வகையிலும் காயப்படுத்தாத அவர், தன்னை தானே காயப்படுத்திக் கொண்டார். இது புகழை தேடி கொடுத்தது. இதனை அனைவரும் சுவாரசியத்துடன் அறிந்து கொள்கின்றனர்.
பேஸ்புக்கை குறிக்கும் டாட்டூகள்
பேஸ்புக் என்பது 10 லட்ச பயனாளிகளுக்கு மேல் கொண்ட புகழ் பெற்ற சமூக வலைத்தளமாகும். ஒத்துக் கொள்கிறோம். ஆனால் பேஸ்புக் மீது பைத்தியமாக உள்ள சிலர், அதனை குறிக்கும் வகையில் பேஸ்புக் சின்னம் போன்ற பைத்தியகாரத்தனமான டாட்டூக்களை குத்திக் கொள்கின்றனர். பேஸ்புக் என்பது பல பேரின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அது பலே பேரின் உடலிலும் இடம் பிடித்துள்ளது என்பதும் உண்மை.
மை ஸ்பேஸ் டாட்டூ
பேஸ்புக் டாட்டோ குத்திக் கொள்ள பிரியப்படுபவர்கள் இருக்கும் போது, மை ஸ்பேசை விரும்புபவர்களும் இருக்கத் தானே செய்வார்கள். ஆம் இருக்கிறார்கள். இவ்வகையான ஆட்கள் மை ஸ்பேசை தங்கள் உடலில் டாட்டூவாக குத்திக் கொள்கின்றனர். சமுதாய வலைத்தளங்களின் மீதுள்ள பற்றால் பைத்தியகாரத்தனமான டாட்டூக்களை பைத்தியகாரத்தனமான இடங்களில் குத்திக் கொள்கின்றனர். வேடிக்கையாக இருக்கிறதா?
ஆபாச நகைச்சுவை டாட்டூ
பைத்தியகாரத்தனமான டாட்டூ என்றும் வரும் போது சில பேர் குறும்புத்தனமாகவும் நடந்து கொள்கின்றனர். சில ஆபாசமான நகைச்சுவையை தேர்ந்தெடுத்து அதனை தங்களின் உடலில் டாட்டூவாக குத்திக் கொள்கின்றனர். இப்போதுள்ள ட்ரெண்ட்டில் இதுவும் ஒரு வகையான பைத்தியகாரத்தனமான டாட்டூ வகையே. எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று இவ்வகையான ஆட்கள் இப்படி ஆபாசமான டாட்டூக்களை குத்திக் கொள்கின்றனர்.
முட்டாள் டாட்டூ
முட்டாள் (ஸ்டுபிட்) என்ற வார்த்தையை நெற்றியில் டாட்டூவாக குத்திக் கொள்வது எப்போது நாகரீகமாக மாறி வருகிறது. ஒருவரை முட்டாளாக சித்தரிக்க இதை விட சிறந்த வழி வேண்டுமா என்ன? மக்கள் தேர்ந்தெடுக்கும் பைத்தியகாரத்தனமான டாட்டூவே அவர்களை பற்றி தெளிவாக எடுத்துக் காட்டும். இப்படி பைத்தியகாரத்தனமான டாட்டூக்களை குத்தும் போது சந்தோஷமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் உங்கள் உடலில் நிரந்தரமாக இருக்கப்போகிறது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.
கங்கணம் ஸ்டைல் டாட்டூ
கங்கணம் ஸ்டைல் டாட்டூவும் பலரையும் விட்டு வைக்கவில்லை. கங்கணத்தின் படத்தை டாட்டூவாக குத்தும் சில ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையான பைத்தியகாரத்தனமான டாட்டூவே. பைத்தியகாரத்தனமான டாட்டூக்களை பைத்தியகாரத்தனமான இடத்தில் குத்திக் கொள்வது ட்ரெண்ட்டாக மாறி வருகிறது. தன்னுடைய படத்தை ரசிகர்கள் அவர்களின் உடலில் குத்திக் கொண்டிருப்பதை பார்க்கையில் கங்கணம் சந்தோஷப்படுவார். இதை விட பெரிய அங்கீகாரம் என்னவாக இருக்க போகிறது அவருக்கு?
டாய்லெட் மற்றும் கப் கேக் டாட்டூ
இன்று வரையில் உள்ள பைத்தியகாரத்தனமான டாட்டூ இது. கழிவறை கோப்பையின் மீது கப் கேக் போன்ற படத்தை டாட்டூவாக குத்திக் கொள்கின்றனர். இது சுவாரசியமாக உள்ளதா அல்லது எரிச்சலை ஏற்படுத்துகிறதா? எப்படியிருந்தாலும் இதை பிடித்தவர்களுக்கு, எந்த வித மாற்று கருத்தும் இருக்க போவதில்லை. ஒன்னும் சொல்வதற்கில்லை.



Click it and Unblock the Notifications
