For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

By Babu
|

இதுவரை எத்தனையோ பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி படித்திருப்போம். ஆனால் மனித உடலைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இரத்தம், தசை, நரம்பு, எலும்பு போன்றவற்றால் ஆன மனித உடலைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையிலேயே அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் உடலில் நடப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு: சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளை

மூளை

மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி

உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

நடுவிரல்

நடுவிரல்

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இரைப்பை அமிலம்

இரைப்பை அமிலம்

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.

கண் சிமிட்டல்

கண் சிமிட்டல்

ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்ககளை சிமிட்டுவார்கள்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

பெண்களை விட, ஆண்கள் தங்களது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைப்பார்கள். அதிலும் ஆண்கள் ஒரு நாளைக்கு 50 கலோரிகளை குறைப்பார்கள்.

விக்கல்

விக்கல்

பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

கைவிரல் நகங்கள்

கைவிரல் நகங்கள்

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.

இரத்தம்

இரத்தம்

ஆண்களின் உடலில் 6.8 லிட்டர் இரத்தம் இருக்கும். பெண்களின் உடலில் 5 லிட்டர் இரத்தம் மட்டுமே இருக்கும்.

செல்

செல்

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.

எச்சில்

எச்சில்

மனிதனின் வாழ்நாளில், வாயில் சுரக்கப்படும் எச்சிலானது 2 நீச்சல் குளங்களை நிரப்பும் அளவில் உற்பத்தியாகும்.

நீல நிற கண்

நீல நிற கண்

குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.

ஆணுறுப்பு எழுச்சி

ஆணுறுப்பு எழுச்சி

ஆண்களுக்கு தூக்கத்தின் போது மணிக்கு ஒரு முறை செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு ஆணுறுப்பானது எழுச்சி பெறுகிறது. இதற்குக் காரணம், இரத்த ஓட்டமும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியும் இணைவது தான். இதன் காரணமாக தூக்கத்தின் போதும் கூட ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி ஏற்பட்டு உபாதையைக் கொடுக்கும். இதனால் தான் பலருக்கு தூக்கத்தின் போது விந்தணு வெளிப்படுகிறது.

காது

காது

ஒருவர் நன்கு வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

உயரம்

உயரம்

முக்கியமாக மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.

வலிமையான தசை

வலிமையான தசை

உடலிலேயே வலிமையான தசை என்றால் அது நாக்கு தான்.

கடினமான எலும்பு

கடினமான எலும்பு

மனித உடலிலேயே கடினமான எலும்பு தாடை எலும்பு தான்.

பிறக்கும் போது தெரியும் நிறம்

பிறக்கும் போது தெரியும் நிறம்

பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.

கார்னியா/விழி வெண்படலம்

கார்னியா/விழி வெண்படலம்

உடலிலேயே இரத்த ஓட்டம் இல்லாத பகுதி தான் கார்னியா. இந்த கார்னியாவானது தனக்கு வேண்டிய ஆக்ஸிஜனை காற்றின் மூலம் பெற்றுக் கொள்கிறது.

உணவு

உணவு

மனிதனால் 20 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ முடியும். ஆனால் 2 நாட்கள் கூட நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது.

கண்கள்

கண்கள்

அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.

எலும்புக்கூடு

எலும்புக்கூடு

நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.

ரேகைகள், வாசனை

ரேகைகள், வாசனை

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.

கெட்ட கனவு

கெட்ட கனவு

இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.

மூக்கு மற்றும் காது

மூக்கு மற்றும் காது

ஒருவர் வளர வளர அவரது மூக்கு மற்றும் காது வளர்ச்சி அடையும். ஆனால் கண்கள் ஒரே அளவில் தான் இருக்கும்.

முடி

முடி

ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியாது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Facts About The Human Body

The human body is an incredibly complex and intricate system and it still baffles researchers regularly despite thousands of years of medical knowledge. Here are some wacky facts about the human body. Take a look...
Desktop Bottom Promotion