கல்லூரியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான 5 வாழ்க்கை பாடங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

கல்லூரி என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த கட்டத்தில் ஒருவருக்கு வாழ்க்கையில் கணக்கிட முடியாத அளவிலான கற்றல் ஏற்படும். இது வெறும் பாடத்தை கற்பிப்பதோடு அடங்கி விடாது. கல்லூரி நமக்கு கற்றுத்தரும் அருமையான வாழ்க்கை பாடங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் கல்லூரியை வாழ்க்கையை கடந்து வந்தவர் என்றால், கல்லூரியால் மட்டும் தான் சில விஷயங்களை கற்றுத்தர முடியும் என்பதை நீங்கள் கண்டிப்பாக ஒத்துக் கொள்வீர்கள்.

சுய கண்டுபிடிப்பின் பயணம் தான் கல்லூரி வாழ்க்கையின் பிரதான அம்சமாகும். அங்கே நாம் அனுபவிக்கும் பேரின்பமான நாட்கள் தெளிவாக விவரிக்க முடியாதவை. சற்று பின்னோக்கி சென்று, நம் கல்லூரி வாழ்க்கை, நமக்கு கற்று தந்த வாழ்க்கை அருமையான பாடங்களை இப்போது பார்க்கலாமா...? இதோ அந்த ஐந்து பாடங்கள்!

1. தன் மீது நம்பிக்கை

நாம் வெளிப்பட்டுள்ள பல சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் கருதுகையில், கல்லூரி வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அதி முக்கிய விஷயங்களில் ஒன்று தான் தன் மீதான நம்பிக்கை. பல விஷயங்களை நம்மால் முடிக்க முடியாது என்ற எண்ணத்தை நாம் கொண்டிருப்போம். அவ்வகையான சூழ்நிலைகளை சமாளிக்க நம் மீதான தன்னம்பிக்கையை வளர்ப்பது கல்லூரி தான்.

2. தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்

கல்லூரி வாழ்க்கையில் அனுபவிக்கும் போது தான் தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் என நமக்கு தெரிய வரும். தோல்வி இல்லாமல் கல்லூரி வாழ்க்கையே இல்லை தானே!

3. அடுத்தவர்களை கையாளுவது

வேறுபட்ட பல பண்பாடுகள் மற்றும் இடங்களில் இருந்து கல்லூரியில் படிக்க வரும் பல மாணவர்களுடன் முதலில் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் கல்லூரி நமக்கு கற்று தந்தது என்ன? பலருடன் அனுசரித்து சென்று, பல்வேறு பண்பாடுகள் மற்றும் இடங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் நட்பை வளர்க்க அது கற்று தந்துள்ளது.

4. பொருட்படுத்தாமல் மறப்பது

நம் ஹாஸ்டல் அறை வாசிகளுடன் எவ்வளவு சண்டை போட்டிருப்போம்? ஆனாலும் கூட அவர்களுடன் நல்ல நண்பர்களாக தானே இருந்திருப்போம்? ஆம், பொருட்படுத்தாமல் மறக்கும் குணத்தை நமக்கு கற்று கொடுத்தது கல்லூரி தான். மன்னிக்கும் தன்மை கூட பல இடங்களில் வெளிப்பட்டிருக்கும்.

5. சில நட்புகள் கடைசி வரை நிலைத்திருக்கும்

5 Precious Life Lessons To Learn From College

சில நட்புகள் கடைசி வரை நிலைத்திருக்கும் என்பதை நமக்கு கற்றுத் தருவதும் கல்லூரி தான். கல்லூரியில் நமக்கு கிடைக்கும் நட்புகளில் சில கடைசி வரைக்கும் நீடித்திருக்கும்.

என்ன நண்பர்களே! உண்மை தானே!

English summary

5 Precious Life Lessons To Learn From College

Here are 5 precious life lessons to learn from college. Read on...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter