For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசியை சொல்லுங்க.. நாங்க உங்க குணத்தை சொல்றோம்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு தனித்தனி குணங்கள் இருந்தாலும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என ராசிகளின் தன்மையைப் பொருத்து குணங்களும் மாறுபடுகின்றன.

|

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் நவ கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை வைத்து ஒருவர் பிறந்த ஜாதகம் கணிக்கப்படுகிறது. ராசி நட்சத்திரங்களை வைத்து ஜாதகம் பார்க்கின்றன. ஒருவர் பிறந்த ராசியின் தன்மையைப் பொறுத்து குணங்கள் மாறுபடுகின்றன. ராசிகளில் சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் எனவும் பிரித்து அவற்றிற்குறிய குணாதிசயங்களைக் கூறி இருக்கிறார்கள்.

12 Zodiac Signs And Their Characters

மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப்படும். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதியங்கள் அதிகம் உள்ளவர்கள்.

MOST READ: திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா?

நீர், நெருப்பு, காற்று, நிலம் என்று நான்கு வகையாக ராசிகளை பிரித்துள்ளனர். இவற்றை வைத்து அந்த ராசிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெருப்பு ராசிகள்

நெருப்பு ராசிகள்

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் நெருப்பு ராசிகள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள். தலைமை தாங்குபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். எதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மன தைரியம் அதிகம் இருக்கும். பெரியவர்களிடம் நன்மதிப்பும் பக்தியும் அதிகம் இருக்கும்.

நில ராசிகள்

நில ராசிகள்

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளும் நில ராசிகள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்து மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுவார்கள். ரொமான்ஸ் ஆகவும் வேடிக்கையாகவும் பேசுவார்கள். அன்பும் கருணையும் கொண்ட பேச்சுக்கு சொந்தக்காரர்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் கீர்த்தியோடும் இருப்பார்கள்.

காற்று ராசிகள்

காற்று ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் காற்று ராசிகள். இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள். நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். சாமர்த்தியமாக பேசும் குணம் கொண்டவர்கள். சொந்த பந்தங்களுடன் இணைந்து வாழவே விரும்புவார்கள். தன்னுடைய திறமை மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள்.

நீர் ராசிகள்

நீர் ராசிகள்

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளும் நீர் ராசிகள். இந்த ராசியில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். உங்க குணத்திற்கும் இந்த கணிப்பிற்கும் ஒத்துப்போகுதா வாசகர்களே. பேச்சுத்திறமையால் காரியம் சாதிப்பீர்கள். நீங்கள் எதையும் கண்டு அஞ்சமாட்டீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Zodiac Signs And Their Characters

Here we listed 12 zodiac signs and their characters. Read on to know more...
Story first published: Friday, February 28, 2020, 13:35 [IST]
Desktop Bottom Promotion