Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஏழரை சனி நடக்கும் மீன ராசிக்காரர்களுக்கு 2024 எப்படி இருக்கப் போகுதுன்னு தெரியுமா?
Pisces Yearly Horoscope 2024 in Tamil: உங்கள் ராசி மீன ராசியா? உங்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? மீன ராசியின் அதிபதி குரு பகவான். தற்போது மீன ராசிக்காரர்களுக் ஏழரை சனி தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ல் பல விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இருப்பினும், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நீங்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருப்பதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். படிப்பை முடித்திருந்தால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.

மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். மொத்தத்தில் இந்த ஆண்டு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இப்போது 2024 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை, கல்வி, குடும்ப வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை மற்றும் நிதி ரீதியாக எப்படி இருக்கும் என்பதை விரிவாக காண்போம்.
2024-ல் தொழில் வாழ்க்கை
மீன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலம் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும் மற்றும் உங்கள் அனைத்து வேலைகளும் தடையின்றி முடிவடையும். இந்த நேரத்தில், உயர் அதிகாரிகளுடனான உங்கள் ஒருங்கிணைப்பு மேம்படும் மற்றும் அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் எவருடனும் வாக்குவாதம் அல்லது மோதலைத் தவிர்க்க வேண்டும்.
2024-ல் வணிகம்
மீன ராசியைச் சேர்ந்த வணிகர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சாதகமற்றதாக இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் நஷ்டம் ஏற்படும். மேலும் கூட்டாளருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மே மாதம் உங்களுக்கு சற்று நிம்மதியைத் தருவதாக இருக்கும். இந்த மாதத்தில், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அரசு துறை சார்ந்த தொழில் செய்தால் இந்த வருடம் நல்ல லாபம் கிடைக்கும். ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2024-ல் குடும்ப வாழ்க்கை
2024-ல் மீன ராசிக்காரர்களின் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஆண்டின் முதல் சில மாதங்களில் உங்கள் வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். சுப கிரகங்களின் தாக்கத்தால் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் கடுமையான பேச்சு உங்கள் அன்புக்குரியவர்களின் இதயங்களை புண்படுத்தும். நீங்கள் தேவையில்லாமல் கோபப்படுவீர்கள், தேவையற்ற விஷயங்களில் எரிச்சல் அடைவீர்கள். தாயின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். மே மாதத்திற்குப் பிறகு நேரம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு மேலும் வலுவடையும். ஆண்டின் கடைசி சில மாதங்கள் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். அன்புக்குரியவர்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவைகளை முழுமையாக கவனித்துக்கொள்வீர்கள்.
2024-ல் திருமண வாழ்க்கை
திருமணமான மீன ராசிக்காரர்களுக்கு 2024-ல் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளுக்காக வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். இது தவிர, உங்களுக்குள் தவறான புரிதல்களும் அதிகரிக்கும். இருப்பினும், மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவானின் அருளால், உங்கள் உறவு மேம்படும் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாத இந்த ராசிக்காரர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதி மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய வாழ்க்கை துணையைப் பெறலாம்.
2024-ல் காதல் வாழ்க்கை
மீன ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். பொறுமையாக இருந்தால், உங்கள் உறவு அப்படியே இருக்கும். இல்லாவிட்டால் பிரிவு ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் உங்களிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் காதல் துணை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆண்டின் நடுப்பகுதியில் உங்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கும். இருப்பினும், உங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் காரணமாக, உங்கள் உறவு தொடர்பான எந்த முக்கிய முடிவையும் நீங்கள் எடுக்க முடியாது.
2024-ல் நிதி நிலை
2024-ல் நிதி நிலையைப் பற்றி கூற வேண்டுமானால், செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையில் நீங்கள் சமநிலையை பராமரிக்கவில்லை என்றால், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, நீங்கள் செலவுகளை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும், மேலும் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். ஆண்டின் நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
2024-ல் கல்வி
2024-ல் மீன ராசிக்காரர்களில் படிப்பில் சில தடைகள் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் முழு கவனமும் உங்கள் படிப்பில் இருக்கும். மேலாண்மை மற்றும் கலைத் துறைகளுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். படிப்பை முடித்திருந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். உயர்கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் சற்று பலவீனமாக இருக்கும். ஆனால் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
2024-ல் ஆரோக்கியம்
மீன ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, சிறு பிரச்சனைகளையும் புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய மருத்துவ செலவை சந்திக்க நேரிடும். உங்களின் உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
