Latest Updates
-
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம்
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவரா நீங்க? அப்ப உங்க குணம் இப்படி தான் இருக்கும்...
People Born On February 29: பொதுவாக ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் தோன்றிய தினம் ஸ்பெஷலானது தான். அதுவும் லீப் ஆண்டில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு அந்நாளின் ஒவ்வொரு நொடியுமே ஸ்பெஷலானதாக இருக்கும். மேலும் இவர்கள் அந்நாளின் ஒவ்வொரு நொடியையும் ஒரு நினைவுகளாக உருவாக்க விரும்புவார்கள். ஏனெனில் எப்போது பிப்ரவரி 29 ஆம் தேதி வருகிறதோ, அந்த ஆண்டு லீப் ஆண்டாகும். இந்த லீப் ஆண்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்.
மற்ற தேதி மற்றும் மாதங்களில் பிறந்தவர்கள் ஆண்டுதோறும் பிறந்தநாளை கொண்டாடுவார்கள். ஆனால் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் மட்டும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள். அதே சமயம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் சற்று தனித்துவமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் தெரியுமா?

பிப்ரவரி 29-ல் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்
பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள் மனதார மக்களை நேசிக்கும் தலைவராக பிறந்தவர்கள். இவர்கள் மிகவும் லட்சியவாதி மற்றும் தாராள மனம் கொண்டவர்கள். நேர்மை இல்லாமல் வெற்றி கிடைக்காது என்று நம்புபவர்கள். முன்னேற்றத்திற்காக பலர் தேடும் வாய்ப்புக்களை பெறுவதற்கான வழியை நன்கு அறிந்தவர்கள். எப்போதும் உண்மையே பேசுவார்கள். அன்பானவர் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர். பணியிடத்தில் சுதந்திரமாக வேலை செய்தால் தான் இலக்கை அடைய முடியும் என்று நினைப்பவர்கள்.
பிப்ரவரி 29-ல் பிறந்தவர்களிடம் உள்ள நல்ல குணங்கள்
பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் சென்சிடிவ்வானவர்கள். மற்றவர்களை முழு மனதுடன் நேசிப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். வாழ்க்கையை ப்ராக்டிகல்லாக அணுகுவார்கள். உங்கள் சொந்த வழியில் தான் வாழ்க்கையை வாழ்வார்கள். ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.
முடிவுகளை எடுப்பது அல்லது விஷயங்களைத் தீர்ப்பது என்று வரும்போது, எப்போதும் நியாயமாக இருப்பார்கள். இவர்களின் அக்கறை மற்றும் பாசத்தைப் போலவே இவர்களின் பெருந்தன்மைக்கும் எல்லையே இல்லை. உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய நல்ல புரிதலின் காரணமாக எந்த ஒரு பிரச்சனையில் இருந்தும் மீண்டு வருவார்கள். மற்றவர்களுடன் நன்கு பழகும் திறனைக் கொண்டிருப்பார்கள்.
பிப்ரவரி 29-ல் பிறந்தவர்களிடம் உள்ள கெட்ட குணங்கள்
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களிடம் பல நேர்மறையாக குணங்கள் இருப்பதால், இவர்களிடம் உள்ள கெட்ட குணங்களை அவ்வளவு எளிதில் கவனிக்க முடியாது. முக்கியமாக இந்த தேதியில் பிறந்தால், மற்றவர்கள் அளிக்கும் அறிவுரைகளை கேட்க விரும்பமாட்டார்கள். சட்டென்று கோபப்படுவார்கள். யாரேனும் லேசாக உங்களைத் தூண்டினாலும், ஆக்ரோஷமாகிவிடுவார்கள். உணர்ச்சிகளை ஈடுசெய்யும் ஒரு சிறந்த போக்கு இவர்களிடம் இருக்கும். இவர்களுக்கு பிடிக்காததை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று நினைப்பார்கள்.
காதல்
காதல் ஜோதிடத்தின் படி, பிப்ரவரி 29-ல் பிறந்தவர்களுக்கு காதலிப்பவர்களை பிடிக்கும். ஆனால் காதலில் விழ அதிகம் விரும்பமாட்டார்கள். விரும்பும் நபரைக் கண்டால், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் அன்புக்குரியவரை கண்டால், அந்த நபரை மகிழ்விக்க அடிக்கடி நீண்ட தூரம் செல்வார்கள். காதலித்தால், அதில் நிலைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் எதிர்பார்ப்பார்கள். தங்கள் வாழ்க்கைத் துணைக்கு உண்மையாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையிடம் நல்ல மதிப்பை வைத்திருப்பார்கள். இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு 2, 5, 9, 11, 14, 18, 20, 23, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுடன் நல்ல இணக்கம் இருக்கும்.
தொழில்
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பதால், பணியிடத்தில் உடன் வேலை செய்வோரிடம் இருந்து தனித்து தெரிவார்கள். எந்த ஒரு வேலையையும் வேகமாகவும், வெற்றிகரமாகவும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். மற்றவர்களுடன் பேசி வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் கில்லாடிகள். இவர்கள் நல்ல பேச்சாளர்கள். பணியிடத்தில் ஒரு நல்ல தலைவராக இருப்பார்கள். தன்னுடன் வேலை செய்பவர்களை மன அழுத்தம் இல்லாமல் சிறப்பாக வேலையை செய்து முடிக்க வைப்பார்கள். நிதியை கையாள்வதில் சிறந்தவர் மற்றும் செலவுகளில் சற்று கண்டிப்புடன் இருப்பார்கள். பட்ஜெட் போட்டு செலவழிப்பதில் சிறந்தவர்கள்.
ஆரோக்கியம்
பிப்ரவரி 29 ஆம் தேதியில் பிறந்தவர்கள் நல்ல ஆரோக்கியத்தை கொண்டிருப்பார்கள். இருப்பினும் அடிக்கடி நிறைய வேலைகளில் ஈடுபடுவதால்,, அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுவார்கள். அடிக்கடி அதிகம் உணர்ச்சிவசப்பட்டு, அதன் விளைவாக மனதளவில் மோசமாக பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக இந்த தேதியில் பிறந்தவர்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்துவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications