Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
நீங்க எப்படி கையெழுத்து போடுறீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிப்பட்டவர்ங்கற உண்மைய நாங்க சொல்றோம்...!
Personality Test: நாம் யாரென்பதன் அடையாளமாக இருப்பது நமது பெயருக்கு பிறகு கையொப்பம்தான். ஒருவரின் கையெழுத்தைப் போலதான் அவர்களின் தலையெழுத்தும் இருக்கும் என்று கூறுவார்கள். நமது கையொப்பமும் ஆளுமையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
இது உங்கள் ஆளுமையின் மிக உண்மையான வெளிப்பாடாகக் கருதப்படலாம். நமது கையொப்பம் நமது முழு வாழ்க்கையைப் பற்றிய கணிப்புகளை வழங்குகிறது. இது ஒருவரின் ஆளுமை, பண்புக்கூறுகள், திறன்கள் மற்றும் எதிர்மறை குணங்களைப் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.

உங்கள் முழுப் பெயரை கையெழுத்தாக போடுகிறீர்களா? உங்கள் கையொழுத்து சாய்வாக உள்ளதா? வரைபடவியல் எனப்படும் கையொப்ப பகுப்பாய்வு, உங்கள் கையொப்பம் உங்கள் ஆளுமைப் பற்றி சொல்லும் தகவல்களை வழங்குகிறது.
ஜோதிடர்கள் உங்கள் கையொப்பத்தை பகுப்பாய்வு செய்யும் போது அதன் அளவு, எழுத்துக்களுக்கு இடையில் உள்ள இடைவெளி, எழுத்தின் தடிமன் போன்றவற்றைப் பார்த்து உங்கள் ஆளுமையைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தலாம். உங்களின் அடையாளமாக இருக்கும் கையெழுத்து உங்களின் ஆளுமைப் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரிய மற்றும் தடிமனான கையெப்பங்கள்
உங்கள் கையொப்பம் பெரியதாகவும், தடிமனாகவும் இருந்தால், உங்கள் கையொப்பத்தின் அடிப்படையில், நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், தைரியமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் லட்சியத்தை அடையும் வெறி கொண்டவர்கள் மற்றும் எப்போதும் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட உறவுகளை விட வணிகம் அல்லது வேலைக்கு அதிக முன்னுரிமை கொடுப்பவராக இருப்பார்கள். இதனால் அவர்களின் தொழில் வாழ்க்கை அளவிற்கு தனிப்பட்ட வாழ்க்கை வெற்றிகரமானதாக இருக்காது.
அடிக்கோடிட்ட கையொப்பங்கள்
உங்கள் கையொப்பத்திற்குக் கீழே அடிக்கோடிடுவது வலுவான சுய உணர்வைக் குறிக்கும். இப்படி கையொப்பமிடுபவர்கள் அங்கீகாரத்தை விரும்புவார்கள். அவர்கள் எப்போதும் சமூகத்தின் ஒரு முக்கிய உறுப்பினராக தங்களை நிலைநிறுத்த விரும்புவார்கள். மற்றவர்களை விட முக்கியமானவராக உணர வேண்டியதன் அவசியத்தை இந்த அடிக்கோடு காட்டுகிறது.
இந்த மக்கள் பொதுவாக அனைத்து விஷயங்களிலும் உயர்ந்த மதிப்பைக் கொண்டுள்ளனர் மற்றும் தங்கள் இலக்குகளைத் தொடர்வதில் நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்கள் வாழ்க்கை மீது ஒரு ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். அதேசமயம் ஒன்றுக்கும் மேற்பட்ட அடிக்கோடுகள் நம்பிக்கையின்மையைக் குறிக்கும்.
தெளிவற்ற கையொப்பம்
ஒரு தெளிவற்ற கையொப்பம் அல்லது உங்கள் கையொப்பம் சுருக்கமாக இருந்தால், அது அவசரமான குணம், விரைவான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் காட்டுகிறது. அவர்களின் திறமைகள் மீது அவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதை இது காட்டுகிறது. தடைகள் அல்லது சவால்கள் ஒருபோதும் அவர்களை தோற்கடிக்க முடியாது.
தெளியான கையெழுத்தும், ஆனால் ஒரு தெளிவற்ற கையொப்பமும் இருந்தால், அவர்கள் மர்மமானவர்கள், தங்களின் ப்ரைவசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், மேலும் தங்கள் ரகசியங்களை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள்.
சிறிய கையொப்பம்
ஒருவரின் கையொப்பம் சிறியதாக இருந்தால், அவர்கள் உள்முக சிந்தனையாளர் மற்றும் விவரம் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள் மற்றும் அடக்கமானவர்களாக இருப்பார்கள் என்பதை இது காட்டலாம். அவர்கள் பணிவானவர்களாக இருப்பார்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிக முன்னுரிமை கொடுப்பவராக இருப்பார்கள் என்பதையும் இது குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

