Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்கள் யார் தெரியுமா?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்கள் குறித்த விவரம் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ஆம் தேதியான நாளை முதல் களைகட்டுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் விளையாடும் நிலையில், இந்தியாவிலிருந்து 113 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் பாரிஸ்க்கு பதக்கத்தை நோக்கி சென்ருள்ளனர்...

தடகளம், துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாய்மர படகுப்போட்டி என 5 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க 11 தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டிலிருந்து துப்பாக்கிச் சுடும் பிரிவில் விளையாட தேர்வாகியுள்ளார் பிரித்விராஜ் தொண்டைமான். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ட்ரேப் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றதால் ஒலிம்பிக் பதக்கம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் தங்கம், 7 பதக்கங்களுடன் இந்திய அணி திரும்பியது, இது ஹைலைட்டாக இருந்தது. நீரஜ் தனது டோக்கியோ கேம்ஸ் வீரத்தை பாரிஸில் மீண்டும் மீண்டும் செய்ய ஒரு வலுவான போட்டியாளராக இருந்தாலும், பி.வி.சிந்து, லவ்லினா போர்கோஹைன், அச்சந்தா ஷரத் கமல், மனு பேக்கர் போன்ற விளையாட்டு வீரர்களிடமிருந்தும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள்
1. ஜெஸ்வின் ஆல்ட்ரின் - தடகளம் (ஆண்கள் நீளம் தாண்டுதல்)
2. பிரவீல் சித்திரவேல் - தடகளம் (ஆண்கள் மும்முறை தாண்டுதல்)
3. ராஜேஷ் ரமேஷ் - தடகளம் (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
4. சந்தோஷ் தமிழரசன் - தடகளம் (ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
5. சுபா வெங்கடேசன் - தடகளம் (பெண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
6. வித்யா ராம்ராஜ் - தடகளம் (பெண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்)
7. நேத்ரா குமணன் - படகோட்டம் (பெண்களுக்கான ஒரு நபர் படகு)
8. விஷ்ணு சரவணன் - படகோட்டம் (ஆண்கள் ஒரு நபர் டிங்கி)
9. இளவேனில் வளரிவன் - துப்பாக்கி சுடுதல் (பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள், 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி)
10. பிருத்விராஜ் தொண்டைமான் - துப்பாக்கி சுடுதல் (ஆண்களுக்கான பொறி)
11. சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ் (இருப்பு)
12. ஷரத் கமல் - டேபிள் டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர், அணி)
13. என் ஸ்ரீராம் பாலாஜி - டென்னிஸ் (ஆண்கள் இரட்டையர்)
மேலும் ஒலிம்பிக் செல்லும் இந்திய மகளிர் அணியில் தமிழ்நாட்டிலிருந்து சுபா வெங்கடேஷன், வித்யா ராமராஜ் தேர்வாகியுள்ளனர். 24 வயதான சுபா வெங்கடேஷன் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் என அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி அசத்தியுள்ளார்.
ஒலிம்பிக் தகுதி சுற்றுப்போட்டியில் ஆடவர் அணி அமெரிக்க அணிக்கு நிகராகவும், மகளிர் அணி ஜமைக்காவிற்கு நிகராகவும் ஓடியதால் இம்முறை 400மீ தொடர் ஓட்டத்தின் இந்திய அணி இறுதிப்போட்டியில் தனது பெயரை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications