Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
Palli Vilum Palan: பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
Palli Vilum Palangal: நம் அனைவரது வீட்டிலும் பல்லிகள் சுற்றித் திரிவதை கண்டிருப்போம். இப்படி வீட்டின் சுவர்களில் ஆங்காங்கு சுற்றித் திரியும் பல்லிகள், அவ்வப்போது நம் மீது விழுவதுண்டு. இப்படி நம் மீது பல்லி விழுவதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. சொல்லப்போனால் பல்லி நம் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் விழுவதற்கான அர்த்தங்களைப் பற்றி கூறும் பல்லி சாஸ்திரம் ஒன்று உள்ளது.
இந்த சாஸ்திரமானது ஜோதிடத்தைப் போன்றே ஒரு வகையான கணிப்பாகும். இந்த பல்லி சாஸ்திரத்தில் பல்லிகள் விழுவதும் அவை எதைக் குறிக்கின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்லிகளின் ஒவ்வொரு அசைவுகளும் அல்லது வீழ்ச்சியும் சில முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளதாக பல்லி சாஸ்திரம் கூறுகிறது.

பல்லிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வெள்ளை பல்லி மற்றும் கருப்பு பல்லி. இதில் வெள்ளை பல்லி நல்லவையாகவும், கருப்பு பல்லி கெட்டவையாகவும் கருதப்படுகின்றன. மேலும் பல்லி ஒரு ஆணின் மீதும், பெண்ணின் மீதும் விழுவதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இப்போது உடலின் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதைக் காண்போம்.
சில பொதுவான பல்லி விழும் பலன்கள்
* பல்லி இடது கையில் விழுந்தால் மன உளைச்சல் ஏற்படும்.
* பல்லி இடது கை விரல்களை உரசி சென்றால், மனக் கவலை அதிகரிக்கும்.
* பல்லி ஆணின் வலது கையில் விழுந்தால் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். அதுவே இடது கையில் விழுந்தால், கெட்ட செய்திகளைப் பெறக்கூடும்.
* பல்லி ஒருவரது தலையில் விழுந்தால், அந்நபர் செல்வம், ஆடம்பரமான வாழ்க்கையை வாழப் போவதைக் குறிக்கும். அதுவே ஒரு பணக்காரரின் தலையில் பல்லி விழுந்தால், அந்நபர் செல்வத்தை இழக்க நேரிடும்.
* நோய்வாய்ப்பட்ட ஒரு பணக்காரர் மீது பல்லி விழுந்தால், அந்நபர் அதிக துன்பத்தை சந்திப்பதோடு, மரணம் நிகழவும் வாய்ப்புள்ளது. அதுவே நோய்வாய்ப்பட்ட ஒரு ஏழை மீது பல்லி விழுந்தால், அப்படியே தலைகீழான பலனைப் பெறக்கூடும்.
* பல்லி வலது காதில் விழுந்தால், நீண்ட ஆயுளை அதிகரிக்கும். அதுவே இடது காதில் விழந்தால், அது அந்நபரின் ஆதாயத்தை மேம்படுத்தும்.
* உதட்டின் மேல் பல்லி விழுந்தால், அது செல்வம் அழிந்து போவதைக் குறிக்கிறது. அதுவே உதட்டின் கீழ் பல்லி விழுந்தால், அது பணக்கார வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
* பல்லி தொண்டையின் மேல் விழுந்தால், அந்நபர் பல்வேறு நன்மைகளைப் பெறுவதோடு, எதிரிகளை கீழே வீழ்த்துவார்.
* பல்லி இதயத்தின் மேல் விழுந்தால், அது மரணம் போன்ற துன்பத்தைக் குறிக்கிறது.
* இரண்டு முழங்கால்களுக்கு இடையே பல்லி விழுந்தால், அந்நபர் நல்ல வாகனங்களை வாங்குவார்.
* கணுக்கால் மற்றும் பாதங்களுக்கு இடைவே பல்லி விழுந்தால், அது வாழ்க்கைத் துணையுடனான உறவை அழிக்கும்.
ஆண்களுக்கான பல்லி விழும் பலன்கள்
* ஆண்களின் முகத்தில் பல்லி விழுந்தால், அது நல்ல நிதி லாபத்தைக் குறிக்கிறது.
* இடது கண்ணில் பல்லி விழுந்தால், அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அதுவே வலது கண்ணில் விழுந்தால், இழப்பு மற்றும் தோல்வியைக் குறிக்கிறது.
* பல்லி நெற்றியில் விழுந்தால், பிரிவைக் குறிக்கிறது.
* பல்லி வாயின் மேல் விழுந்தால், அது ஆரோக்கிய பிரச்சனைகளைக் குறிக்கிறது.
* பல்லி விரல்களில் விழுந்தால், பழைய நண்பர்களை சந்திக்கப் போவதைக் குறிக்கிறது.
* ஆணின் கால் விரல்களில் பல்லி விழுந்தால், அது நோயைக் குறிக்கிறது.
* மீசையில் பல்லி விழுவது தடைகளைக் குறிக்கிறது.
* இடது கை விரல் நகங்களில் பல்லி விழந்தால், அது செல்வத்தை அதிகரிக்கும். அதுவே வலது கை விரல் நகங்களில் விழுந்தால், அது தேவையில்லாத செலவைக் குறிக்கிறது.
* இடது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால், அது வெற்றியைத் தரும். அதுவே வலது பக்க கழுத்தில் விழுந்தால் எதிரிகள் அதிகரிப்பர்.
* இடது காலில் பல்லி விழுந்தால், அது இழப்புக்கள் ஏற்படப் போவதைக் குறிக்கிறது.
* காலின் பின்புறத்தில் பல்லி விழுந்தால், அது பயணத்தைக் குறிக்கிறது.
* காலின் மேல் பல்லி விழுந்தால், அது கஷ்ட காலத்தைக் குறிக்கிறது.
பெண்களுக்கான பல்லி விழும் பலன்கள்
* ஒரு பெண்ணின் வலது கண்ணில் பல்லி விழுந்தால், அது மன கவலை மற்றும் பதட்டத்தை அதிகரிப்பதைக் குறிக்கிறது.
* இடது கண்ணில் பல்லி விழுந்தால், வாழ்க்கைத் துணையிடம் இருந்து அதீத அன்பைப் பெறப் போவதைக் குறிக்கிறது.
* உதட்டின் மேல் பல்லி விழுந்தால், அது தகராறைக் குறிக்கிறது.
* உதட்டின் கீழ் விழுந்தால், அது நல்ல செய்தி வரப்போவதைக் குறிக்கிறது.
* முதுகு பகுதியில் பல்லி விழுந்தால், இறப்பு செய்திவைப் பெறப் போவதைக் குறிக்கிறது.
* கையில் பல்லி விழுந்தால், அது நிதி நன்மைகளைக் குறிக்கிறது.
* தோள்பட்டையில் பல்லி விழுந்தால், நிறைய ஆபரணங்களைப் பெறப் போவதைக் குறிக்கிறது.
* கால் விரல்களில் பல்லி விழுந்தால், அது ஆண் குழந்தை பிறக்கப் போவதைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
