Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..
சென்னை அம்பத்தூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிநவீன கம்ப்யூட்டர் லேப்பை அமைத்து தந்த ஓரியன் நிறுவனம்!
சென்னை: டிஜிட்டல் நிலைமாற்றம் மற்றும் பிராடக்ட் உருவாக்க சேவைகள் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக இயங்கி வரும் ஓரியன் இன்னோவேஷன் ("ஓரியன்") தொழில்நுட்ப கல்வி வழியாக வசதியற்ற ஏழை எளிய மாணவர்கள் திறன் அதிகாரம் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய திட்டம் தொடங்கப்படுவதை இன்று பெருமையுடன் அறிவித்திருக்கிறது.
பெருநிறுவன சமூக பொறுப்புறுதி (CSR) திட்டத்தின் ஒரு அங்கமாக சென்னை மாநகரில் அம்பத்தூரில் அமைந்துள்ள டிவி நகர் உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் நலனுக்காக கணினி ஆய்வகத்தை ஓரியன் அமைத்து தந்திருக்கிறது. அரசு நிதி உதவி பெறும் பள்ளியான இது, அம்பத்தூர் ரோட்டரி கிளப்-ன் ஆதரவோடு இயங்கி வருகிறது.

ஓரியன் நிறுவனத்தின் டிஜிட்டல் நிலைமாற்றத்திற்கான குளோபல் டெலிவரி துறையின் தலைவர் திரு. பிரதீப் மேனன், இப்பள்ளியில் கணினி ஆய்வகம் திறக்கப்படுவது குறித்து தனது ஆழமான திருப்தியையும் மற்றும் இந்த சிறப்பான முயற்சியை தொடங்கி செயல்படுத்துவதில் வலுவான பொறுப்புறுதியையும் வெளிப்படுத்தி கூறியதாவது: "வசதியற்ற ஏழை எளிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்கும் இப்பள்ளியில் ஒரு நவீன கணினி ஆய்வகத்தை அவர்களின் தொழில்நுட்ப கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக நிறுவியிருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆய்வகம் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு பெரும் உதவியாக இருக்குமென்று நாங்கள் நம்புகிறோம். வார இறுதி நாட்களில் இப்பள்ளியில் STEM பாடங்களை கற்பிப்பதற்கு தன்னார்வத்துடன் முன்வந்திருக்கிற எமது பணியாளர்கள் மற்றும் அவர்களது குழும உறுப்பினர்களின் அர்ப்பணிப்பும், உற்சாகமும் எங்களுக்கு மகிழ்ச்சியையும், அளவில்லாத பெருமிதத்தையும் தருகிறது."
ஓரியன் இன்னோவேஷன் நிறுவனத்தின் நிதியுதவியின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த புதிய கணினி ஆய்வகத்தில் டெஸ்க்டாப் கணினிகள், ஸ்மார்ட்போர்டுகள் மற்றும் குளிர்சாதன யூனிட்கள் உட்பட மேம்படுத்தப்பட்ட கற்றல் வசதிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்புவரை இந்த ஆய்வகத்தில் ஐந்து டெஸ்க்டாப் கணினிகளும் மற்றும் ஒரு எளிய நாற்காலி மற்றும் மேஜை ஆகியவை மட்டுமே இருந்த நிலையில் இப்புதிய கணினி ஆய்வகம் நேர்த்தியாக தரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளையும் கொண்டு நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிறுவனத்தில் பெருநிறுவன சமூக பொறுப்புறுதி திட்டத்தை வழிநடத்துபவரும் மற்றும் குளோபல் டெலிவரிக்கான துணைத்தலைவர் திரு. ரமேஷ் பாபு முத்துவேல் பேசுகையில், "ஒவ்வொரு குழந்தையும் அதன் சமூக/பொருளாதார நிலை எதுவாக இருப்பினும் இந்த டிஜிட்டல் யுகத்தில் முன்னேறுவதற்கும், வெற்றி காண்பதற்கும் சிறப்பான கல்வி வாய்ப்புகளை பெற வேண்டும். சமூகத்திற்கு பயனளிக்கும் பங்களிப்பை வழங்கும் ஒரு முயற்சியாக இந்த நவீன கணினி ஆய்வகத்தை தொடங்குவதில் நாங்கள் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறோம். வசதியற்ற மாணவர்கள் திறனதிகாரம் பெறுவதற்கான இந்நடவடிக்கையை மேற்கொள்வது எங்களுக்கு அதிக திருப்தியளிக்கிறது" என்று கூறினார்.
ஓரியன் இன்னோவேஷன் எம்பவர் என்பது, ஓரியன் நிறுவனத்தின் முதன்மையான CSR முன்னெடுப்பு திட்டமாகும். நம் நாட்டில் வசதியற்ற சமூகத்தினருக்கு தரமான கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆதார வளங்களுக்கு அணுகுவசதியை வழங்கி அவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். கற்றலுக்கான சூழல்களை மேம்படுத்துவதும் மற்றும் இந்த டிஜிட்டல் யுகத்தில் முன்னேற்றம் காண்பதற்கு அவசியமான திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதும் இந்த முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களின் நோக்கமாகும். OI எம்பவர் திட்டத்தின் வழியாக, சமுதாயத்தின் மீது நீடித்து நிலைக்கிற, நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் செயல் பணியில் அதன் அர்ப்பணிப்பை ஓரியன் இன்னோவேஷன் மீண்டும் உறுதி செய்கிறது.



Click it and Unblock the Notifications

