Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க பொறுப்பானவரா இல்லையா-ன்னு சொல்றோம்...
Optical Illusion: உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி வெளிப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். அதாவது இந்த படங்கள் இல்லாததையும் பார்க்க வைக்கிறது அல்லது அவற்றை வித்தியாசமான வழிகளில் விளக்குகிறது.
இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பலவற்றை தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இப்படிப்பட்ட படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரைப் பற்றிய வேறு பல விஷயங்களையும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தைப் பற்றி தெரிய படுத்துகின்றன. அதுவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது நீங்கள் எதற்கும் கவலைப்படாதவரா அல்லது எதையும் சிந்தித்து செய்யக்கூடியவரா என்பதைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
வயதான பெண் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு வயதான பெண் தெரிந்தால், நீங்கள் எதையும் நன்கு சிந்தித்து செய்யக்கூடியவர். எந்த ஒரு முடிவுகளை எடுக்கும் போதும் அவசரப்படாமல், நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே முடிவெடுப்பீர்கள். இப்படி முடிவெடுப்பதால், அது நல்ல வாழ்க்கையை அமைக்க உதவுகிறது. மேலும் நீங்கள் கதையும் நன்கு கவனிக்கக்கூடியவர் மற்றும் மற்றவர்களை விட சூழ்நிலைகளை நன்கு பகுப்பாய்வு செய்வீர்கள். இப்படிப்பட்ட குணத்தினால் நீங்கள் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயங்குவீர்கள்.
தலைகீழாக ஒரு சிறுமியின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு தலைகீழாக ஒரு சிறுமியின் முகம் தெரிந்தால், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர். முடிவுகளை எடுக்கும் போது கூட எதைப் பற்றியும் யோசிக்காமல் விரைவில் முடிவெடுத்துவிடுவீர்கள். பொறுப்பற்ற நபராக இருப்பீர்கள். மற்றவர்களிடம் எளிதில் பழகி நண்பர்களை உருவாக்குவீர்கள். ஆனால் உங்களின் இப்படியான எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் குணம் உங்களை அடிக்கடி பெரிய சிக்கலில் சிக்க வைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
