Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
முயல் அல்லது வாத்து - இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க குணத்தை சொல்றோம்...
Optical Illusion: என்ன தான் உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பலவற்றை தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரது அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தை தெரியபடுத்துகின்றன. அதுவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாத்து, முயல் என இரண்டு விதமான உருவங்கள் மறைந்துள்ளன. இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். உங்களின் ஒரு சுவாரஸ்யமான குணத்தை சொல்கிறோம்.
வாத்து
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் வாத்து தெரிந்தால், நீங்கள் வலுவான நீதி உணர்வைக் கொண்டிருப்பீர்கள். நீதி, நேர்மை, நியாயம், உரிமை, கடமை, பொறுப்பு என்று இருப்பீர்கள். நற்செயல்களை செய்பவர்களை அதிகம் மதிப்பீர்கள். எப்போதும் சரியான விஷயத்திற்கு குரல் கொடுப்பீர்கள். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது உடல்மொழியைக் கொண்டே எளிதில் அடையாளம் காணும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். எப்போதும் ஒருவரிடம் பேசும் போது, அவர் உண்மை பேசுகிறாரா இல்லையா என்பதை எளிதில் கண்டறியும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள்.
முயல்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முயல் தெரிந்தால், நீங்கள் மிகவும் வேடிக்கையான நபர். உங்களைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். அசாத்திய நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலவென்று மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும் உங்களின் நகைச்சுவை உணர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்களின் கஷ்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க நகைச்சுவையை ஒரு கேடயமாக நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஏனெனில் உங்களின் கஷ்டத்தை மற்றவர்கள் அறிய விரும்பமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
