Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ராகுவின் அருளால் இந்த 4 தேதிகளில் பிறந்தவங்க புத்திசாலியாகவும், தைரியசாலியாகவும் இருப்பாங்களாம்..
Numerology: எண்கள் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி எண்களைக் கொண்டு ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவற்றை கணித்து கூறும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம் அல்லது நியூமராலஜி.
இந்த எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த 9 எண்களும் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டு தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும். இவற்றில் சில எண்கள் சிலருக்கு சுபமாகவும், சில எண்கள் அசுபமாகவும் இருக்கும். அதனால் தான் ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் எண் கணிதத்தில் உள்ள 9 எண்களுக்கும் அதிபதிகள் உள்ளன. அந்த வகையில் எண் 4 குறித்து தான் நாம் பார்க்கவுள்ளோம். ஒரு மாதத்தில் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண் 4-க்கு உரிய அதிபதி ராகு.
இந்த எண்ணிற்கு உரியவர்கள் புத்திசாலிகளாகவும், சற்று தைரியசாலிகளாகவும் இருப்பர். அதோடு இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் வேலையை மற்றவர்களால் செய்து முடிப்பதில் கில்லாடிகள். சரியான ராஜதந்திரிகளாகவும் இருப்பர். இப்போது இந்த எண் 4-க்கு உரியவர்களைப் பற்றிய சில சிறப்பான விஷயங்களைக் காண்போம்.
அதிபுத்திசாலிகள்
நியூமராலஜி படி, விதி எண் 4-ஐ சேர்ந்தவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பர். தங்கள் வேலையை மற்றவர்களை வைத்து திறம்பட செய்து முடிப்பார்கள். எதையும் வெளிப்படையாக பேசுவார்கள். தங்களுக்கு பிடித்தவாறான வாழ்க்கையை வாழ்வார்கள். பலரும் ஆச்சரியப்படும்படியான வேலைகளை செய்து முடிப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் தலைமை பண்புகள் சிறப்பாக இருக்கும். ஒரு நல்ல தலைவர்களாக விளங்குவார்கள். ஒரு குழுவை திறம்பட வழிநடத்துவார்கள்.
மர்மமானவர்கள்
விதி எண் 4-ஐ சேர்ந்தவர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். சற்று மர்மமானவர்கள். இவர்களை புரிந்து கொள்வது என்பது சற்று கடினம். ஆராய்ச்சி துறையில் இவர்கள் வேலை செய்தால், நல்ல பெயரைப் பெறுவார்கள். பலவற்றை சாதிப்பார்கள். தனக்கென்று ஒரு விதிமுறையை வைத்து வேலைகளை செய்வார்கள். இவர்கள் மிகவும் நிலையானவர்கள் மற்றும் அமைதியானவர்கள். கடின உழைப்பாளிகள். பணியிடத்தில் அதிக வேலை கொடுத்தாலும், முகம் சுளிக்காமல் வேலை செய்வார்கள். தங்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க எப்போதும் தயாராக இருப்பார்கள்.
பெயரையும், புகழையும் சம்பாதிப்பார்கள்
நியூமராலஜியின் படி, விதி எண் 4-க்கு உரியவர்கள் இன்ஜினியரிங், எழுத்தாளர், சட்டம், அரசியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் வேலை செய்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதோடு இவர்கள் சொந்தமாக வியாபாரம் செய்தால், அதில் நல்ல புகழையும், பெயரையும் சம்பாதித்து, வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். எப்போதும் தாங்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications