Latest Updates
-
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்
இந்த 5 தேதிகளில் பிறந்தவர்களுக்கு கோபம் அதிகமா வருமாம்.. இவங்ககிட்ட பாத்து உஷாரா நடந்துக்கோங்க..
Numerology In Tamil: ஜோதிடத்தின் ஒரு கிளையான எண் கணிதத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிய ஏராளமான விஷயங்களை அறியலாம். எண் கணிதத்தில் உள்ள 1 முதல் 9 வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒரு கிரக அதிபதிகளைக் கொண்டுள்ளன.
இந்த அதிபதிகளைக் கொண்டு தான் அந்த எண்ணிற்கு உரியவர்களின் குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கணிக்கப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு பிறந்த தேதியும் ஒவ்வொருவரின் ஆளுமையை வடிவமைக்கும் தனித்துவமான குணங்களைக் கொண்டுள்ளன.

குறிப்பாக ஒவ்வொரு பிறந்த தேதியைக் கொண்டும் ஒருவரது உணர்ச்சிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இப்போது எண் கணிதத்தின் படி, எந்த தேதிகளில் பிறந்தவர்ளுக்கு கோபம் அதிகமாக வரும் என்பதைக் காண்போம். உங்கள் பிறந்த தேதியும் இதில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
9 ஆம் தேதி
ஒவ்வொரு மாதத்தின் 9 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ஒரு உணர்ச்சிப் போர்வீரர்கள். இவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவில் கோபம் வரும். மேலும் எண் 9 ஆவது தீவிரம், விருப்பம் மற்றும் நீதி உணர்வுடன் தொடர்புடையது. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் கண் முன் அநீதிகளைக் காண்டாலோ அல்லது தங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மீறுவதைக் கண்டாவோ அதிகமாக கோபப்படுவார்கள்.
18 ஆம் தேதி
ஒவ்வொரு மாதத்தின் 18 ஆம் தேதியில் பிறந்தவர்கள் எளிதில் மற்றவர்களால் உணர்ச்சிரீதியாக தூண்டப்படக்கூடியவர்களாக இருப்பர். முக்கியமாக இவர்கள் எளிதில் கோபப்படுவார்கள். இந்த 18 என்ற எண் 1 மற்றும் 8 ஆகிய இரண்டு எண்களின் கலவையாகும். அதாவது இது சுதந்திரம் மற்றும் லட்சியம் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கிறது.
எனவே இந்த தேதியில் பிறந்தவர்கள் சுதந்திரமாக இருப்பதோடு, தங்களின் லட்சியத்தை அடையாமல் ஓயமாட்டார்கள். இருப்பினும், பொறுமையின்மை மற்றும் விரக்தியின் காரணமாக, இவர்களுக்கு கோபம் அதிகமாக வரும். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களிடமும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
27 ஆம் தேதி
ஒரு மாதத்தின் 27 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பர். அதுவும் அதிகமாக கோபப்படுவார்கள். இந்த 27 என்ற எண் 2 மற்றும் 7 ஆகிய இரண்டு எண்களின் கலவையாகும். இதில் 2 என்ற எண் அக்கறையையும், 7 என்ற எண் உறுதியையும் குறிக்கிறது.
எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் அக்கறை குணத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்ளும் போது அல்லது தங்கள் சுதந்திரம் அச்சுறுத்தப்படுவதாக உணரும் போது அதிகமாக கோபப்படுவார்கள்.
29 ஆம் தேதி
ஒவ்வொரு மாதத்தின் 29 ஆம் தேதியில் பிறந்தவர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக வெளிப்படுத்துவார்கள். 29 என்ற எண் 2 மற்றும் 9 என்ற ராஜதந்திர மற்றும் சாகச எண்களின் ஆற்றல்களை கொண்டுள்ளது. இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகவும் வேகமாக உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வதோடு, பொறுமையின்மையால் சவாலான சூழ்நிலைகளை கையாள முடியாமல் கோபப்படுவார்கள்.
சுருக்கமாக கூற வேண்டுமானால், இந்த தேதியில் பிறந்தவர்களின் சுதந்திரம் மற்றும் விருப்பத்தை கட்டுப்படுத்தும் போது அல்லது அவர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் போது அதிகமாக கோபப்படுவார்கள்.
30 ஆம் தேதி
ஒரு மாதத்தின் 30 ஆம் தேதியில் பிறந்தவர்களின் லட்சியத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் போது அதிகமாக கோபப்படுவார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் சற்று கற்பனைத் திறனைக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் தங்களின் படைப்பாற்றல் தடைபடும் போது அல்லது மற்றவர்களிடம் இரக்கம் மற்றும் அக்கறை இல்லாததை காணும் போது மிகுதியாக கோபமடைவார்கள். எனவே இவர்களை சற்று உஷாராவே கையாள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications