Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நியூமராலஜி படி இந்த 5 தேதியில பிறந்தவங்க ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம்..இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்!
Numerology: நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எண்கள்தான் இந்த உலகை ஆள்கின்றன. அந்த வகையில் நாம் பிறந்த எண்கள் நமது விதியுடன் ஒரு மர்மமான தொடர்பைக் கொண்டுள்ளன, மேலும் ஒரு நபரின் வாழ்க்கையில் அவரது உயர்வு மற்றும் தாழ்வுகளை பாதிக்கலாம்.
அதுமட்டுமின்றி, எண்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் அவர்களின் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் பாதிக்கலாம். நியூமராலஜியின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் தொழிலில் பெரும் வெற்றியை அடைய முடியும்.

எண் 1 (எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் நிதி வெற்றிக்கான அசாத்திய ஆற்றலுடன் பிறந்தவர்கள். அவர்கள் அசாதாரண தைரியமம் கொண்டவர்கள், லட்சியம் கொண்டவர்கள், அவர்கள் வெற்றிபெற நிறைய முயற்சி செய்கிறார்கள் மற்றும் அதில் சாதிக்கவும் செய்கிறார்கள்.
அவர்களின் துணிச்சலும் கற்பனை சக்தியும் அவர்களை வெற்றிபெறச் செய்கின்றன. தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக அவர்கள் அதிக நம்பிக்கை, கோபம் மற்றும் எளிதில் தூண்டப்படுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எண் 3 (3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் மிகவும் போற்றத்தக்க குணங்கள் என்னவெனில், அவர்களளின் படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் குணமாகும். அவர்கள் உண்மையிலேயே திறமையான மற்றும் கற்பனைத்திறன் வாய்ந்த கலைஞர்கள்.
தொழில்ரீதியாக, புதுமை, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றை உள்ளடக்கிய எந்தவொரு பாடத்திலும் அவர்கள் சிறப்பான இடத்தை அடைவார்கள். அவர்கள் தங்கள் ஆர்வத்தை பின் தொடரும்போது, அவர்கள் அடிக்கடி மகத்தான வெற்றியைக் காண்பார்கள். மகத்துவத்தை அடைய, அவர்கள் தங்கள்பேச்சாற்றல் திறன்களைப் பயன்படுத்த வேண்டும்.
எண் 4 (13, 22 அல்லது 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் வளமான வாழ்க்கையைத் தொடரத் தேவையான தகுதியும் அறிவும் கொண்டவர்கள். அவர்களின் வலிமை அவர்களின் உறுதியான உணர்வு, இது அவர்களின் தொழில்முறை நோக்கங்களை நிறைவேற்ற உதவுகிறது. அவர்களின் இலக்குகளை அடைவதை எதுவும் தடுக்க முடியாது, ஆனால் அவர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்கவும் எதிர்மறையாக சிந்திக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பாக இருப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள். பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகளை அவர்கள் கண்டறிவார்கள்.
எண் 6 (6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்களில் பிறந்தவர்கள் தங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை ஈர்க்கும் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் அதிர்ஷ்டசாலிகள். தொழில் வாழ்க்கை என்று வரும்போது, அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
ஆடம்பரத்திற்கான அவர்களின் உள்ளார்ந்த தேவையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க மற்றும் மகத்தான செல்வத்தை குவிக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். கடினமாக வேலை செய்வதை விட புத்திசாலித்தனமாக வேலை செய்வது சிறந்த வெற்றியைக் கொடுக்கும் என்று நம்புபவர்கள் இவர்கள். அவர்களின் எண்ணங்களுக்கு மற்றவர்களை சம்மதிக்க வைக்கும் அசாத்திய திறமை அவர்களிடம் உண்டு.
எண் 9 (9, 18 அல்லது 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் வெற்றியை அடைவதற்கு தேவையான அசாத்திய அதிர்ஷ்டத்தைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் ஒரு வளமான தொழிலைத் தொடரும் திறனும் தகுதியும் கொண்டவர்கள், ஆனால் எந்தத் திட்டத்தையும் முடிப்பதற்குக் கவனமாக திட்டமிடல் மற்றும் விடாமுயற்சி தேவைப்படும்.
மிகவும் புத்திசாலித்தனமான யோசனைகள் கூட உருவாக்க நேரம் தேவை என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்களின் அளப்பரிய உற்சாகமும், துணிச்சலும் அவர்களின் வெற்றிக்குப் பலனளிக்கும். மற்றவர்களை வசீகரிப்பதில் அவர்கள் வல்லவர்கள் மற்றும் எல்லோருக்கும் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












