Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் அவங்க அப்பாவுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாம்.. உங்க பிறந்த தேதி என்ன?
Numerology In Tamil: ஒவ்வொரு அப்பாக்களும் அவர்களது பெண் குழந்தை எப்போதும் தேவதைகள் தான். தனது மகள் எந்த ஒரு கஷ்டமும் படக்கூடாது, விரும்பிய அனைத்தையும் வாங்கித் தர வேண்டுமென்ற எண்ணம்/ஆசை ஒவ்வொரு தந்தையிடமும் இருக்கும்.
அதேப் போல், ஒவ்வொரு மகளுக்கும் அவளது தந்தை தான் சூப்பர் ஹீரோ. தந்தை மகளுக்கும் இடையேயான உறவு மிகவும் அழகானது மற்றும் விலைமதிப்பற்றது. ஆனால் நியூமராலஜியின் படி, ஒரு குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள், அவர்களது தந்தைக்கு ஒரு அதிர்ஷ்ட தேவதையாக, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய அதிர்ஷ்டசாலியாக கூறப்படுகிறது.

உங்களுக்கு எந்த தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் அவர்களது அப்பாவிற்கு அதிர்ஷ்டசாலி என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படித்து பாருங்கள்.
விதி எண் 3
நியூமராலஜியின் படி, விதி எண் 3-க்கு உரியவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கு உரியவர்கள் மற்றவர்களை கவரக்கூடிய ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். அனைவரது மனதையும் எளிதில் வெல்வார்கள்.
ஒரு வேலையை செய்ய முடிவெடுத்தால், அந்த வேலையை முடிக்காமல் ஓய்வெடுக்கமாட்டார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும். சொல்லப்போனால் பிறவியிலேயே லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதால் இவர்களுக்கு வாழ்வில் பணக் கஷ்டம் என்பரே வராது.
எந்த தேதிகளில் பிறந்தவர்கள் தந்தைக்கு அதிர்ஷ்டசாலிகள்?
நியூமராலஜியில், விதி எண் 3-க்கு உரிய பெண்கள் அவர்களின் தந்தைக்கு அதிர்ஷ்டசாலிகளாக கூறப்படுகிறது. 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் பிறக்கும் போதே செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் ஆசியை பெற்று தந்தைக்கு அதிர்ஷ்டசாலியாக பிறக்கிறார்கள்.
இந்த தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்கள், அந்த குழந்தை பிறப்பிற்கு பின் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள்.
சமூகத்தில் வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டிருப்பார்கள். நடைமுறைக்கு ஏற்றவாறு எதையும் புரிந்து நடந்து கொள்வார்கள். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார்கள் மற்றும் மற்றவர்களின் மனதை விரைவில் இடம்பெறுவார்கள்.
லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றவர்கள்
எண் கணிதத்தின் படி, விதி எண் 3-ஐ கொண்ட பெண்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள். இவர்களிடம் எப்போதும் மகிழ்ச்சியும், செல்வமும் மிகுதியாக இருக்கும். ஏனெனில் இவர்கள் பிறப்பிலேயே லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றவர்கள். முக்கியமாக இவர்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
விதி எண் 3-க்கு உரிய பெண்களின் குணாதிசயங்கள்
விதி எண் 3-க்கு உரிய பெண்கள் மனதில் பட்டதை பேசக்கூடியவர்கள். தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்புவார்கள் மற்றும் தொழிலில் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள். எப்போதும் உதவி செய்ய முன்வருவார்கள்.
அதிக சுய மரியாதை கொண்டவர்கள். சற்று ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பர். தனக்கு பிடித்ததை செய்வார்கள். யாருடைய உதவியையும் பெற விரும்பமாட்டார்கள். எப்பேற்பட்ட சவாலையும் உறுதியுடன் எதிர்கொண்டு, வெற்றி பெறுவார்கள். முக்கியமாக தைரியமானவர்கள், எதற்கும் அஞ்சாதவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications