Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது உண்மையா? அதிகாரிகள் சொல்வது என்ன?
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனைதான். Blood Money-யை நிராகராதித்த பிறகு கொலை குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியாவின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
ஏமனில் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனை 'முற்றிலும் ரத்து' செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 'இந்திய கிராண்ட் முப்தி' அலுவலகம் ஷேக் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் திங்கள்கிழமை இரவு தெரிவித்தார். ஏமனின் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு, மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்ட முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

உறுதிப்படுத்தப்படாத செய்தி
ஆனால் இந்த செய்தியை இந்திய அரசு உறுதிப்படுத்தவில்லை. கடந்த காலங்களைப் போலல்லாமல், அது அவரது வலைத்தளத்திலோ அல்லது சமூக ஊடகக் கணக்குகளிலோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தி நிறுவனத்தின் டெலிட் செய்யப்பட்ட டீவீட்டை அவரது X பக்கம் பகிர்ந்து கொண்டது. வழக்கைக் கையாளும் இந்திய அதிகாரிகளும் இதுவரை இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. மேலும் "நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சில நபர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தவறானவை" என்று அவர்கள் கூறினர்.
தள்ளிவைக்கப்பட்ட மரண தண்டனை
தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த 37 வயதான செவிலியரான நிமிஷா பிரியா, ஜூன் 2018 இல் ஏமன் நாட்டவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஜூலை 16 அன்று தூக்கிலிட திட்டமிடப்பட்டிருந்தது, இந்த முடிவை நாட்டின் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023 நவம்பரில் உறுதி செய்தது. கிராண்ட் முஃப்தி தலையிட்டு ஏமன் அதிகாரிகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, தண்டனைக்கு ஒரு நாள் முன்னதாகவே அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மகளின் மேல் முறையீடு
நிமிஷாவின் 13 வயது மகள் மிஷெல் மற்றும் அவரது கணவர், நிமிஷாவின் விடுதலைக்காக ஏமன் அரசாங்கத்திடம் முறையிட்டனர். நிமிஷாவின் விடுதலைக்காக ஏமன் அரசாங்கத்திடம் முறையிடுவதில் குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் நிறுவனர் டாக்டர் கே.ஏ. பால் உடன்மிஷெல் ஏமனுக்குச் சென்றார்.
நிமிஷா பிரியா மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன?
கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, 2017 ஆம் ஆண்டு தனது ஏமன் பிஸ்னஸ் பார்ட்னரான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு 2020 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அவரது இறுதி மேல்முறையீடு 2023 இல் நிராகரிக்கப்பட்டது. ஏமன் நீதிமன்ற வெளியிட்ட அறிக்கையின் படி, நிமிஷா, ஜூலை 2017 இல், போதைப்பொருள் கொடுத்து மஹ்தியைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சகம் (MEA) நிமிஷா பிரியாவை ஆதரிக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், வழக்கில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் கூறியது.
இந்த நொடி வரை நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் கடவுளின் அருளாலும், இந்திய அரசின் முயற்சியாலும் விரைவில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை அனைத்து இந்தியர்களுக்கும் உள்ளது.



Click it and Unblock the Notifications
