Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
புத்தாண்டின் முதல் நாளில் இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.. இல்ல அந்த ஆண்டு முழுவதும் வறுமை துரத்தும்...
New Year 2024: பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது அந்த ஆண்டு மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டுமென்று அனைவருமே விரும்புவோம். அதற்காக புத்தாண்டின் முதல் நாளில் பலவிதமான நல்ல விஷங்களை மேற்கொள்வோம். உதாரணமாக கோவிலுக்கு செல்வது, தான தர்மங்களை செய்வது போன்றவற்றை செய்வோம்.
ஆண்டின் முதல் நாளை நாம் சிறப்பாக வரவேற்பதைத் தவிர, ஒருசில விஷயங்களை மறந்தும் அந்நாளில் செய்யக்கூடாது. அப்படி புத்தாண்டின் முதல் நாளில் செய்யும் தவறுகளால், அந்த ஆண்டு முழுவதும் வறுமை துரத்தும் மற்றும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறுப்படுகிறது. நீங்கள் வருகிற 2024 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், பின்வரும் 5 தவறுகளை புத்தாண்டின் முதல் நாளில் மறந்தும் செய்துவிடாதீர்கள்.

1. வீட்டை அழுக்காகவும், இருட்டாகவும் வைத்திருக்காதீர்
புத்தாண்டின் முதல் நாளன்று வீட்டை இருட்டாகவும், அழுக்குடனும் வைத்திருக்காதீர்கள். அழுக்கான வீட்டில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியேறமாட்டார். இதன் விளைவாக வீட்டில் மூதேவி குடியேறி, ஆண்டு முழுவதும் வறுமை துரத்தும் என்று கூறப்படுகிறது. எனவே புத்தாண்டு உங்களுக்கு செழிப்பாக இருக்க வேண்டுமானால், வீட்டை சுத்தமாகவும், பளிச்சென்று பிரகாசமாகவும் வைத்திருங்கள்.
2. கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்
கருப்பு நிறமானது எதிர்மறையின் சின்னமாக கருதப்படுகிறது. சாஸ்திரங்களின் படி, எந்த ஒரு நல்ல வேலையை அல்லது நாளைத் தொடங்கும் போதும், நல்ல வண்ணமயமான மற்றும் மங்களகரமான நிறத்திலான ஆடைகளை அணிய வேண்டும். அப்படி அணியும் போது, அது அந்நபருக்கு நல்ல பலன்களை வழங்கும். எனவே புத்தாண்டு நாளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள்.
3. கடனை வாங்காதீர்
பண பிரச்சனை என்றும் இருப்பது தான். அதற்காக நல்ல நாளில் யாரிடம் கடனை வாங்கக்கூடாது. அதுவும் ஒரு புதிய ஆண்டை தொடங்கும் போது, முதல் நாளில் யாரிடமும் கடன் வாங்கவோ அல்லது கொடுக்கவோ செய்யாதீர்கள். இல்லாவிட்டால், அந்த ஆண்டு முழுவதும் கடன் வாங்கி பெரிய கடனாளியாக வேண்டிய சூழல் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
4. சண்டை போடாதீர்
எப்போதுமே ஒரு நல்ல நாளில் சண்டை போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சண்டை போடும் இடத்தில் லட்சுமி தேவி இருக்கமாட்டார். மேலும் லட்சுமி தேவி மனம் வருந்தி, அந்த வீட்டில் நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க வைப்பார். எனவே உங்களுக்கு வருகிற 2024 ஆம் ஆண்டு செழிப்பாக இருக்க வேண்டுமானால், புத்தாண்டின் முதல் நாளில் சண்டை போடாதீர்கள்.
5. கூர்மையான பொருட்களை வாங்காதீர்
நல்ல நாளில் கூர்மையான பொருட்களை வாங்கக்கூடாது என்று கூறுவார்கள். அதுவும் புத்தாண்டின் முதல் நாளில் கூர்மையான பொருட்களை வாங்குவது அசுபமாக கருதப்பகிறது மற்றும் இது பண பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications