Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
எச்சரிக்கை! ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. இல்ல சூரிய பகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க..
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுகிறார். அதே வேளையில் சூரியன் ஆன்மா மற்றும் தந்தையின் காரணியாக கருதப்படுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவான் சாதகமான நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல தலைமைத்துவ பண்புகளுடன் இருப்பார். அதோடு தந்தை மற்றும் உயர் அதிகாரியுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

நவகிரகங்கள் ஒவ்வொன்றும் வாரத்தின் ஒவ்வொரு நாட்களுடன் தொடர்புடையதாக ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் ஞாயிற்று கிழமையுடன் தொடர்புடைய கிரகம் தான் சூரியன்.
ஒருவருக்கு சூரிய பகவானின் அருள் கிடைக்க வேண்டுமானால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருசில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சூரிய பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இப்போது எந்த விஷயங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
அடர் நிற ஆடைகளை அணியக்கூடாது
ஜோதிடத்தின் படி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருவர் கருப்பு, அடர் நீலம், பழுப்பு, சாம்பல் போன்ற அடர் நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக கருப்பு நிற ஆடைகளை அணியவே கூடாது. ஏனெனில் கருப்பு சனி பகவானுக்கு பிடித்த நிறம். சூரியனும் சனியும் பகை உணர்வு கொண்ட கிரகங்கள். எனவே கருப்பு நிற ஆடையை ஞாயிற்றுக்கிழமைகளில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சூரிய பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
இரும்பு தொடர்பான பொருட்களை வாங்கக்கூடாது
சூரிய பகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று நினைத்தால், ஞாயிற்றுக்கிழமைகளில் இரும்பு தொடர்பான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஒருவேளை அவ்வாறு வாங்கினால், அது சூரியனின் கோபத்திற்கு ஆளாக்குவதோடு, பண பிரச்சனைகள் மற்றும் பண இழப்பை சந்திக்க நேரிடும்.
மேற்கு திசையில் பயணிக்கக்கூடாது
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நிறைய பேர் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறைய பயணங்களை மேற்கொள்வதுண்டு. ஆனால் ஜோதிடத்தின் படி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கு திசையில் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது. ஒருவேளை மேற்கு திசையில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நெய் அல்லது வெற்றிலையை சாப்பிட்டு, முதலில் 5 அடி கிழக்கு திசையை நோக்கி சென்றுவிட்டு, பின் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
காப்பரை விற்காதீர்கள்
காப்பர் சூரிய பகவானுடன் தொடர்புடையதாக ஜோதிடம் கூறுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் காப்பர் பொருட்களை விற்கவோ அல்லது யாருக்கேனும் கொடுக்கவோ செய்யாதீர்கள். அப்படி செய்தால், சூரிய பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வீட்டில் உள்ள மகிழ்ச்சியும் செழிப்பும் குறையும்.
கட்டுமான பொருட்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு கட்டும் கட்டுமான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வாங்கினால், அது பண இழப்பை ஏற்படுத்துவதோடு, நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவானின் கோபத்திற்கு ஆளாக வைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications